என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்புமணி ராமதாஸ் திருமண நாளையொட்டி ரத்த தான முகாம்
    X

    அன்புமணி ராமதாஸ் திருமண நாளையொட்டி ரத்த தான முகாம்

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ஆடிட்டர் கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்.
    • பின்னர் அவரும், கட்சியி னரோடு இணைந்து ரத்த தானம் செய்தார்.

    தொப்பூர்,

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாசின் திருமண நாளை முன்னிட்டு, பா.ம.க தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் சார்பில், தருமபுரி கலெக்டர் அலுவ லகம் எதிரே உள்ள, தனியார் ரத்த வங்கியில், ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முன்னதாக இந்த ரத்த தான முகாமை, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ஆடிட்டர் கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார். பின்னர் அவரும், கட்சியி னரோடு இணைந்து ரத்த தானம் செய்தார்.

    தொடர்ந்து முகாமில் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுர விக்கப்பட்டது. இதில் பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கியதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களும் இன்னுயிர் காக்க ரத்த தானம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் தெரிவித்தனர்.

    Next Story
    ×