என் மலர்
தர்மபுரி
- கலெக்டர் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.
- ஆட்சியரின் தவறான உத்தரவை ரத்து செய்து மீண்டும் வட்டாட்சியரை பணியில் சேர்ப்பதற்காக உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலு வலக வாளாகத்தில் காத்தி ருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண் ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலை வர் டியூக் பொன்ராஜ் பேசினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்திய வட்டாட்சியர் மனோஜ் முனியனை பணியிடை நீக்கம் செய்து, உத்தரவு பிறப்பித்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வரு வாய்த் துறை அலுவலர் சங்கம் நடத்தும் அறவழி போராட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆதரவு தெரி விக்கிறது. உடனடியாக மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், தமிழ் நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்களை அழைத்து பேசி இறுதித் தீர்வை எட்ட வேண்டும் என்றும், தமிழகம் முழு வதும் உள்ள பெண்கள் உரிமைத்தொகை பணி பாதிக்கப்பட்டு உள்ளதை உள்வாங்கிக் கொண்டு வருவாய்த்துறை அமைச்சர் இதில் தலையிட்டு மாவட்ட ஆட்சியரின் தவறான உத்தரவை ரத்து செய்து மீண்டும் வட்டாட்சியரை பணியில் சேர்ப்பதற்காக உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பழனியம்மாள்,சரவணன், ராஜீவ் காந்தி, சிவக்குமார், அசோக்குமார், நாகவேணி, அன்பு, சேகர், உள்ளிட்ட அனைத்து துறை அலுவ லர்கள் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.
- போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் அருகே பந்தார அள்ளியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 40). கூலி தொழிலாளி.
இவர் கடந்த 28-ம் தேதி கொள்ளுபட்டியில் உள்ள தனது மனைவியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் - திப்பம்பட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்,
தெல்லன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து இன்று சிவலிங்கம் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரிமங்கலம் போலீ சார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கேரளாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அழகான பாரம்பரிய உடை அணிந்தும், உணவு வகைகளை அலங்கரித்து உற்சாகமாக கொண்டா டினர்.
- ஆசிரியர்கள் பூக்கோலம் இட்டு மாணவிகள் கேரளத்து பெண்கள் போல் ஆடை அணிந்து உற்சாகத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடி யப்பன் குத்து விளக்கினை ஏற்றி விழாவிற்கு தலைமை வகித்தனர். பள்ளியின் இயக்குநர் தமிழ்மணி,பவானி தமிழ்மணி முன்னிலை வகித்தனர். கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் ஓணம் பண்டிகையின்வரலாற்று சிறப்பினை எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் பள்ளியின் மழலையர்கள் கேரளாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அழகான பாரம்பரிய உடை அணிந்தும், உணவு வகைகளை அலங்கரித்தும், வண்ண மலர்களால் கோலம் அலங்கரிக்கபட்டும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் கேரள கதகளியும், அழகான திருவாதிரை நடனம் ஆடியும் மிகச்சிறப்பாக ஓணம் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பள்ளி முதல்வர் வெற்றிவேல் செல்வம் விழாவில் கலந்து கொண்ட மழலையர்களை பாராட்டி ஓணம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். மேலும் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், உமாதேவி, ஏஞ்சலினா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தி விழாவினை சிறப்பித்தனர். இதே போல் ஸ்ரீராம் பள்ளியிலும் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள் பூக்கோலம் இட்டு மாணவிகள் கேரளத்து பெண்கள் போல் ஆடை அணிந்து உற்சாகத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புவனேஸ்வர், மணிமேகலை ஆகியோர் தலைமையில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஒருங்கி ணைப்பாளர்கள் குருமூர்த்தி, பிரவீணா ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
- விழாவின் தொடக்க நிகழ்வாகத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.
- இவ்விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவா சன் தலைமை வகித்தார்.
மத்தூர்,ஆக.30-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் , மல்லிகை நகரில் அமைந் துள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் சாதனை படைத்த தயான் சந்த் நினைவாக அவரின் பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்க நிகழ்வாகத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. இவ்விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார்.
அதைத் தொடர்ந்து அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி திருமால் முருகன் விழாவை தொடங்கி வைத்து தேசிய விளையாட்டு தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்கு 'உன் திறமையை வெளிக்காட்டு உலகம் உன்னை கண்டறியும்' என்று விளையாட்டின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார்.
மேலும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் வரவேற்புரை அளித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச் சியாக வளையதூரப்பணம், பிரமிடு மற்றும் மாணவ, மாணவிகளுக்குப் பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
- விளையாட்டு போட்டி களில் ஸ்டான்லி மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
- இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரி குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எறிபந்து போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-19 பெண்கள் பிரிவில் முதலிடமும், U-19 ஆண்கள் பிரிவில் முதலிடமும், U-14 ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும், பிடித்து வெற்றி பெற் றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்த குமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்டத்தில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்களின் ஆவணத்தின் நகல் ஓட்டுநரிடம் வழங்க வேண்டும்.
- அனுபமில்லாத ஓட்டுநர்களை வாகனம் இயக்க அனுமதிக்க கூடாது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பள்ளி, கல்லூரி வாகனங்களை தருமபுரி வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோ தரன் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் வெங்கடசாமி, தரணிதரன் ஆகியோர் பென்னா கரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்க ளில் அவசரகால வழி, வாகனத்தின் ஆவணங்கள், ஓட்டுநர் உரிமங்கள், அரசின் விதிமுறைகள் பின்பற்றப் படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பள்ளி வாகனத்தில் அதிக அளவி லான குழந்தைகளை ஏற்றுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்குதல், அனுபவம் இல்லாமல் பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட குற்றங்க ளுக்காக ஓட்டுநர்கள் மற்றும் நான்கு வாகனங்களுக்கு சுமார் 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சாலை வரி செலுத்தாத ஜே.சி.பி. வாகனத்திற்கு ரூ.12,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்களின் ஆவணத்தின் நகல் ஓட்டுநரிடம் வழங்க வேண்டும். அனுபமில்லாத ஓட்டுநர்களை வாகனம் இயக்க அனுமதிக்க கூடாது. வாகனம் இயக்கும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. சீருடை அணியாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. வாகனங்களில் அதிக அளவிலான குழந்தை களை ஏற்றி செல்லக்கூடாது.
கட்டாயம் பேருந்து பணியாட்கள் வைத்திருத்தல் வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என பள்ளிக் கல்லூரி வாகன ஓட்டுநர் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.
- 18 வயது நிரம்பி உள்ளவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும்
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செங்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ண குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்சென்ன கிருஷ்ணன்,மொரப்பூர் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் லோகேஷ் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார். இதில் 18 வயது நிரம்பி உள்ளவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும், இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும் என கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராசு தமிழ்செல்வன், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர்கள் சசிகுமார், செந்தமிழன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சிவாஜி, மாவட்ட விவசாய அணி மாவட்ட துணை தலைவர் சாமிநாதன், தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வி சின்னபையன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, ராஜராஜன், முன்னாள் சேர்மன் தென்னரசு, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி முல்லை கோபால் நன்றி கூறினார்.
- சமூகப்பணி மேற்கொள்பவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.
- இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூகப் பணித்துறைத் தலைவருமான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார்.
தருமபுரி,
தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் சமூகப் பணித்துறை சார்பில் சமூகப்பணி மேற்கொள்பவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூகப் பணித்துறைத் தலைவருமான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
இப்பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராகச் சமூகப் பணித்துறைப் உதவிப் பேராசிரியை நிர்மல் ஜெஸ்ஸி கலந்து கொண்டு, கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான உணர்வு மேலாண்மை, ஆளுமைப் பண்பு மேம்பாடு, உளவியல் சிக்கல்களில் இருந்து தீர்வு காணுதல் போன்றவற்றை குறித்து செய்முறை விளக்கம் அளித்ததோடு, தொழில் முறையாக ஆலோசனைகள் வழங்கவும் பயிற்றுவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்பு ராஜ், பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் எனப் பலரும் கலந்து கொண்டனர். சமூகப் பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவி காவியாஞ்சலி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
சமூகப்பணி மேற்கொள்ளும் அனைவருக்கும் தொழில்முறையில் ஆலோசனைகள் வழங்கும் திறன் அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந் திருந்த இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- சுமதி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்தும் 7 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.
- ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களால் அந்தந்த பகுதிகளின் பொது–மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
தருமபுரி,
தருமபுரி நகர் பகுதியில் 2 பெண்களிடம் 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் தருமபுரி பகுதியில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை பிடிக்க அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி நகர் பகுதிகளில் அடிக்கடி கொள்ளை, வழிபறி நடப்பதாக பொது–மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன்காரணமாக குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தருமபுரி, பிடமனேரி, மதிகோன்–பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனை, ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தர விட்டார். அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தருமபுரி குமாரசாமிபேட்டை அரிசந்திரன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய லட்சுமி என்பவர் அதிகாலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து விஜயலட்சு மியின் கழுத்தில் அணிந்தி ருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். அப்போது அவர் திருடன், திருடன் என்று கத்தியபடி ஓடி சென்று அவர்களை பிடிக்க முயற்சித்தார். அதற்குள் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.
இதேபோன்று அதியமான்கோட்டை எர்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமதி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்தும் 7 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களால் அந்தந்த பகுதிகளின் பொது–மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் அந்தந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது தருமபுரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்தான், எர்ரப்பட்டியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக அந்த மர்ம நபர்கள் தருமபுரியில் உள்ள ஒரு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியதும், செயின் பறிப்பில் ஈடுபடு–வதற்காக திருடப்பட்ட வண்டியில் போலியான நெம்பர் பிளேட்டுகளை மர்ம நபர்கள் பொருத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த மர்ம நபர்கள், பிடமனேரி, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் உள்ள இருசக்கர வாகனத்தை இன்று திருட முயன்றுள்–ளனர். அந்த வண்டிகளில் இருந்து சத்தம் வரவே அவர்கள் வண்டியை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., உடனே அந்த மர்ம நபர்களை பிடிக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட உத்தர விட்டார்.அதன்–ேபரில் போலீசார் மாவட்டம் முழுவதும் எல்லை பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும், சோதனை சாவடிகளிலும் உள்ள போலீசாரை உஷார்–படுத்தினர்.
போலீசார் அந்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், மாவட்ட எல்லை பகுதிக–ளில் இருசக்கர வாகனங்–களில் வருபவர்களை தீவிர சோதனை பிறகே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், தருமபுரி, பிடமனேரி, அதியமான்கோட்டை பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த தண்ணீர் பிலிக் குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகே–னக்கலுக்கு வந்தடைந்தது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
ஒகேனக்கல்,
கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்த பருவமழை காரணமாக கர்நா டகாவில் உள்ள கபினி, கேர்.ஆர்.எஸ். ஆகிய அணை களில் நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 20 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருவ தால், காவிரி ஆற்றில் நீர்வ ரத்து அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்–பட்டது. இந்நி லையில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீ–ரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இந்த தண்ணீர் பிலிக் குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகே–னக்கலுக்கு வந்தடைந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற் றுக்கு வரும் நீர்வரத்து நேற்று முன்தினம் 6 ஆயிரம் கன அடியாக இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து 5 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தமிழ கத்திற்கு வரும் தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வ ளத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்றனர்.
- காளியப்பன் கடந்த 27-ந் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டின் கதவு பூட்டியே கிடந்ததால், அக்கம் பக்கத்–தினர் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
தருமபுரி,
தருமபுரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் காளி யப்பன் (வயது65). லாரி மெக்கானிக்கான இவர் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி காளியப்பனை பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் காளியப்பன் 2-வதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரும் கருத்து வேறுபாடு காரணமாக காளியப்பனை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமு–டைந்து காணப்பட்ட காளியப்பன் கடந்த 27-ந் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டின் கதவு பூட்டியே கிடந்ததால், அக்கம் பக்கத்–தினர் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இதனால், அவர் இறந்த சம்பவம் குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் காளியப்பன் வீட்டில் திடீரென்று துர்நாற்றம் வீச தொடங்கி–யது. அதன் பின்னரே அக்கம் பக்கத்தினர் காளி–யப்பன் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளியப்–பன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரி மாவட்ட வருவாய்த்–துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்–டனர்.
- அந்தந்த பகுதிகளில் வருவாய் துறை சார்பில் நடைபெற இருந்த பணிகள் பாதிக்கப்பட்டன.
தருமபுரி,
கள்ளக்குறிச்சி மாவட்–டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், சஸ்பெண்டு உத்தரவை திரும்ப பெற கோரியும் தமிழகத்தில் உள்ள வருவாய் துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை தருமபுரி மாவட்ட வருவாய்த்–துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்–டனர். இதனால், தருமபுரி கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட வருவாய் துறை பிரிவு அறையில் அலுவலர்கள் இல்லாமல் சேர்கள் காலியாக இருந்தன. இன்று காலை மாவட்ட வருவாய்த்துறை பிரிவில் அதிகாரிகள் யாரும் இல்லா–ததால், சான்றிதழ்களில் கையொப்ப மிடுதல், பொது மக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரி–மங்கலம், அரூர், பாப்பி–ரெட்டிப்பட்டி ஆகிய 6 தாலுக்களிலும் உள்ள வருவாய் துறை பிரிவில் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தந்த பகுதி–களில் உள்ள வருவாய்துறை அலுவலகம் ஆட்கள் இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், அந்தந்த பகுதிகளில் வருவாய் துறை சார்பில் நடைபெற இருந்த பணிகள் பாதிக்கப்பட்டன.






