என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்களை படத்தில் காணலாம்.
தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்
- தருமபுரி மாவட்ட வருவாய்த்–துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்–டனர்.
- அந்தந்த பகுதிகளில் வருவாய் துறை சார்பில் நடைபெற இருந்த பணிகள் பாதிக்கப்பட்டன.
தருமபுரி,
கள்ளக்குறிச்சி மாவட்–டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், சஸ்பெண்டு உத்தரவை திரும்ப பெற கோரியும் தமிழகத்தில் உள்ள வருவாய் துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை தருமபுரி மாவட்ட வருவாய்த்–துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்–டனர். இதனால், தருமபுரி கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட வருவாய் துறை பிரிவு அறையில் அலுவலர்கள் இல்லாமல் சேர்கள் காலியாக இருந்தன. இன்று காலை மாவட்ட வருவாய்த்துறை பிரிவில் அதிகாரிகள் யாரும் இல்லா–ததால், சான்றிதழ்களில் கையொப்ப மிடுதல், பொது மக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரி–மங்கலம், அரூர், பாப்பி–ரெட்டிப்பட்டி ஆகிய 6 தாலுக்களிலும் உள்ள வருவாய் துறை பிரிவில் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தந்த பகுதி–களில் உள்ள வருவாய்துறை அலுவலகம் ஆட்கள் இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், அந்தந்த பகுதிகளில் வருவாய் துறை சார்பில் நடைபெற இருந்த பணிகள் பாதிக்கப்பட்டன.






