என் மலர்
தர்மபுரி
- மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் மனு அளித்திருந்தனர்.
- பள்ளி மாணவிகள் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்பு முடிந்து வருவதால் பாதிப்பு ஏற்படும்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை பகுதியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்யாண ராமர் கோவில், பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்துவ தேவாலயம் என மூன்றும் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் அரசு மதுபான கடை அமைத்து விற்பனை செய்தால் இங்கு சகோதரத்துவத்துடன் வாழும் அனைத்து மத சமூக மக்கள் இடையே மதம் மற்றும் சாதிக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதனால் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் மனு அளித்திருந்தனர்.
அனைத்து சமூக மக்களின் கோரிக்கை மனுவை ஏற்றுக் கொள்ளாத மாவட்ட நிர்வாகம் தென்கரைகோட்டை ஏரி அருகே புதிதாக அரசு மதுபான கடை அமைக்க இடம் தேர்வு செய்தது.
இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் அரசு மதுபான கடை வந்தால், பெண்கள் அந்த வழியில் செல்ல பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படும். பள்ளி மாணவிகள் இரவு நேரங்களில் சிறப்பு வகுப்பு முடிந்து வருவதால் பாதிப்பு ஏற்படும்.
ஆனால் அதை மீறி தற்பொழுது தென்கரைக்கோட்டை பகுதியில் மதுபான கடை திறக்க திட்டமிடபட்டுள்ளதால், மதுக்கடை அமைக்க கூடாது என போராட்டம் நடத்துவது குறித்து துண்டறிக்கை அச்சிட்டு போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால் அதே வேலையில் மதுக்கடை வேண்டும் எனக் கூறி ஒரு தரப்பினர் துண்டறிக்கையைப் அச்சிட்டு போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனர். காவல்துறை மதுக்கடை வேண்டும் என்று அனுமதி கேட்டவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
இதனை அடுத்து இன்று மதுகடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் கிராம மக்கள், தென்கரைக்கோட்டை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு இந்த மதுக்கடையை அமைக்க கூடாது என முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால் மற்றொரு தரப்பினருக்கு போலீசார் அனுமதி வழங்காததால், மதுக்கடை வேண்டும் என்று, ஆண்கள் சிலர் அந்தப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.
இதனால் தென்கரைக்கோட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 2 கடைகளில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர்.
- விதிமுறைகளை பின்பற்றாத கடை, ஓட்டல் களுக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதித்தனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர் கடத்தூர், சில்லாரஅள்ளி, புளியம் பட்டி, நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது 2 கடைகளில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர். 2 ஓட்டல்களில் இருந்து உரிய விபரங்கள் அச்சிடாத மசாலா பாக்கெட்டுகள் 2 கிலோ, பலமுறை பயன் படுத்திய சமையல் எண் ணெய் 2 லிட்டர் மற்றும் செயற்கை நிறமூட்டி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விதிமுறைகளை பின்பற்றாத கடை, ஓட்டல்களுக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து நத்தமேடு பகுதிகளில் 3 கடைகளில் காலாவதியாக பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
- போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனு தாரர்ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்ட னர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட போலீசார் சார்பில் வாரந் தோறும் புதன்கிழமை தரும புரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொது மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வர வழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் 97 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 21 மனுக்கள் தொடர் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமில் தருமபுரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சரவணன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 50) என்பதும், அவர் நாட்டு வெடிகளை தயாரிப்பதும் தெரிய வந்தது
- வீட்டை சோதனை செய்ததில் நாட்டு வெடி தயாரிக்க தேவையான கரிமருந்து, பட்டாசு திரி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி பகுதியில் சட்ட விரோதமாக வெடி மருந்து தயாரிப்பதாக மாரண்ட அள்ளி இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாரண்டஅள்ளி அருகே சீங்காடு பகுதியில் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 50) என்பதும் , அவர் நாட்டு வெடிகளை தயாரிப்பதும் தெரிய வந்தது,
அவரது வீட்டை சோதனை செய்ததில் நாட்டு வெடி தயாரிக்க தேவையான கரிமருந்து, பட்டாசு திரி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்த போலீசார் பழனியை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- பயந்து போன அந்த சிறுமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி மாதேஷ்வரன் வீட்டிற்கு வந்து விட்டார்.
- சிறுமியை திருமணம் செய்து கொண்ட மாதேஷ் வரன் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்வரன் (வயது25). லாரி டிரைவர். இவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு அடிக்கடி வந்த போது, அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் இது காதலாக மாறியது. இதனால் மாதேஸ்வரன் சிறுமியின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மாதேஷ்வரன் சிறுமியிடம் கூறியுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி மாதேஷ்வரன் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு சிறுமியை திருமணம் செய்து கொண்ட மாதேஷ்வரன் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் அவரை மருத்துவ பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாதேஷ்வரன் அழைத்து வந்துள்ளார்.
அங்கு டாக்டர்கள் வயதை கேட்டபோது அவர் 16 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அரூர் மகளிர் போலீசார் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் மாதேஷ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மழைக் காலங்களில் அந்த ஆற்றில் அதிகளவிலான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு சிரமப் படுகின்றனர்.
- அப்பகுதி மக்களின் குறைகள் மற்றும் பாலம் கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஹள்ளி ஊராட்சியில் மூல பள்ளத்து கொட்டாய் எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதிக்கு செல்லும் வழியில் குறுக்கே ஆறு ஒன்று செல்கிறது. மழைக் காலங்களில் அந்த ஆற்றில் அதிகளவிலான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு சிரமப் படுகின்றனர்.
அதனால் தற்போது மழை காலத்துக்கு முன்பாகவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக் கொடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இது குறித்த செய்தியை மாலை மலர் நாளிதழ் வெளியிட்டிருந்தது.அச்செய்தியின் எதிரொலியாக நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் நேரடியாக எர்ரபையனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசனுடன் மூல பள்ளத்து கொட்டாய் கிராமத்திற்கு சென்று இருந்தனர்.
அங்கு அப்பகுதி மக்களின் குறைகள் மற்றும் பாலம் கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்காக பாலம் கட்டி தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள் ளார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது எங்கள் பகுதி பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாலை மலர் நாளிதழுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் எங்கள் குறைகளை அறிந்தவுடன் கடைக் கோடி கிராமமான எங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதாக தெரிவித்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- 225 பயனாளி களுக்கு ரூ.60.48 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
- உழவர் நலத்துறை யின் 4 பயனாளிகளுக்கு ரூ.60,000- மதிப்பீட்டில் கறவை மாடு பணி ஆணையினை வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை களின் சார்பில் 225 பயனாளிகளுக்கு ரூ.60.48 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கலெக்டர் சாந்தி முன்னிலையில் வழங் கினார்.
விழாவில் வருவாய்த் துறையின் சார்பில் 125 பயனாளிகளுக்கு ரூ.58.50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணிக்கான நியமன ஆணையினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் 4 பயனாளிகளுக்கு ரூ.60,000- மதிப்பீட்டில் கறவை மாடு பணி ஆணை யினையும், ஒருவருக்கு ரூ.135- மதிப்பில் 5 கிலோ ராகியினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவி யாளரை வைத்து கொள் வதற்கு ரூ.1000- உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25,000- உதவித்தொகைகளை வழங்கினார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.32,760- மதிப்பீட்டில் விலையில்லா சலவைப்பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.30, 000- மதிப்பீட்டில் தையல் எந்திரங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2018,2019,2020 ஆம் ஆண்டுகளில் மாவட்டத்தில் அதிகமாக கொடிநாள் நிதி வசூல் செய்த 3 பயனாளி களுக்கு தலா 30 கிராம் வெள்ளிப்பதக்கங்களையும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் 60 பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிக்கை நலவாரிய உறுப்பினர் அட்டைகள் என மொத்தம் 225 பயனாளி களுக்கு ரூ.60.48 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவி யாளர் (நிலம்) நசீர் இக்பால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோக நாதன் உட்பட தொடர்புடைய அலு வலர்கள், பத்திரிக்கை யாளர்கள், பயனாளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி யின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
- அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மதிகோண் பாளையம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்த னர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நடுப்பட்டி பகுதியில் புவியி யல்துறை அதிகாரி லோக நாதன் தலைமையில் வாகனம் சோதனை நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி யின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
பின்னர் அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மதிகோண் பாளையம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடை பெற்றது.
- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தலவாய்அள்ளி ஊராட்சி யில் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டிலும், இலளிகம் ஊராட்சியில் ரூ.23.30 லட்சம் மதிப்பீட்டிலும், நார்த்தம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடை பெற்றது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டாட் சியர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, முனைவர் பழனியப்பன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பரி மளா மாதேஷ் குமார், நார்த்தம்பட்டி கலை செல்வன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டை கனை வாங்க வருகின்றனர்.
- நேற்றைய சந்தை யில் ரூ.38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திரு வண்ணா மலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டை கனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ரூ. 8,200 முதல் ரூ. 37,700 வரையும். ஆடுகள் விலை ரூ. 5,500 முதல் ரூ.10,000 வரையும், நேற்றைய சந்தை யில் ரூ.38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொப்பூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற ஆணைப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும், பணியிடை நீக்கம் செய்ததை நீக்கி மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் வட்ட தலைவர் கண்ணதாசன், பொருளாளர் சீனிவாச ஆழ்வார் செயலாளர் ராஜா மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- லேப்டாப், செல்போன்கள், அளவீடு செய்யும் கருவி என விலையுயர்ந்த பொருட் களை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே சித்தூர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 608 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியினை மேலாளரான சண்முக நாதன் என்பவர் இருந்து கவனித்து வருகிறார். அவர் தங்குவதற்கு ஒரு சீட்டு போட்ட அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருந்த லேப்டாப், செல்போன்கள், அளவீடு செய்யும் கருவி என விலையுயர்ந்த பொருட் களை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






