கடை, ஓட்டல்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிப்பு

2 கடைகளில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர்.விதிமுறைகளை பின்பற்றாத கடை, ஓட்டல் களுக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதித்தனர்.
கடை, ஓட்டல்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிப்பு
Published on

கடத்தூர், 

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர் கடத்தூர், சில்லாரஅள்ளி, புளியம் பட்டி, நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது 2 கடைகளில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர். 2 ஓட்டல்களில் இருந்து உரிய விபரங்கள் அச்சிடாத மசாலா பாக்கெட்டுகள் 2 கிலோ, பலமுறை பயன் படுத்திய சமையல் எண் ணெய் 2 லிட்டர் மற்றும் செயற்கை நிறமூட்டி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விதிமுறைகளை பின்பற்றாத கடை, ஓட்டல்களுக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து நத்தமேடு பகுதிகளில் 3 கடைகளில் காலாவதியாக பொருட்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com