என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சிலை கேட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது.

    அரூர்,

    நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புழுதியூர் புதன்சந்தை அருகில் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள குமரேசன் கூறுகையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விநாயகர் சிலை கேட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது.

    இங்கு அரை அடி முதல் 7 அடி வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது. சிலைகளானது அளவை பொருத்து ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    களிமண்ணால் ஆன சிலைகளுக்கு வண்ணம் தீட்ட, நீர் நிலைகள் மாசுபடாத வண்ணம், ரசாயண கலவை இன்றி இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டுகிறது என அவர் கூறினார்.

    • வாடிக்கையாளர்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
    • கடைக்காரர்கள் அவர்களின் இடத்தையும் தாண்டி, சாலைவரை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பைபாஸ் சாலையில், 4 ரோட்டிலிருந்து ரவுண்டானா வரை, கடைகள், தாலுகா ஆபீஸ், மற்றும் வங்கிகள் முன்புறம் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் கடைக்காரர்கள் அவர்களின் இடத்தையும் தாண்டி, சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர்.

    எனவே உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கிடு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறையும்.

    எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிவேதா வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக நிவேதா உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் சில்லாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிவேதா (வயது 18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.

    இவர் கடந்த 27-ந் தேதி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து திட்டினார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக நிவேதா உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 13 பசு மாடுகள், 7 எருமை மாடுகள், 3 எருமை கன்றுகுட்டிகளை லாரியில் ஏற்றி கொண்டி–ருந்தனர்.
    • மாடுகளை வண்டியில் ஏற்றும்போது சித்ரவதை செய்ததாக தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் கம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). இவர் மிருக நலவாரிய அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் சிவக்–குமார் நேற்று தொப்பூர் வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்–போது அங்கு 2 பேர் 13 பசு மாடுகள், 7 எருமை மாடுகள், 3 எருமை கன்றுகுட்டிகளை லாரியில் ஏற்றி கொண்டி–ருந்தனர்.

    முறையான பராமரிப்–பின்றி அந்த மாடுகளை வண்டியில் ஏற்றும்போது சித்ரவதை செய்ததாக தெரியவந்தது. உடனே சிவக்குமார் அந்த 2 பேரிடம் மாடுகளை வண்டியில் இருந்து இறக்கி விடுமாறு கூறினார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து சிவக்குமார் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் (45), கிருஷ்ணகிரி அவ்வை நகரைச் சேர்ந்த டிரைவர் பைரோஸ் அம்ஜத் (37) ஆகிய2 பேர் மாடுகளை சித்ரவதை செய்தது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதால், விதிகளின்படி எல்லாம் சிறப்பாக உள்ளது.
    • சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

    தருமபுரி,

    மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ண தாசன், தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், மகளிர் விடுதிகள் சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர், தமிழகத்தில், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், மகளிர் விடுதிகள், சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம்.

    அந்த அடிப்படையில் தருமபுரி மாவட்டத்திலுள்ள விடுதிகள், காப்பகங்கள், மாவட்ட மத்திய சிறைச்சாலை மற்றும் கிளைச்சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளாதாக தெரிவித்த அவர், கடந்த மாதம் நெல்லையில் இதே போன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

    தருமபுரியில் ஆய்வு செய்ததில், மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதால், விதிகளின்படி எல்லாம் சிறப்பாக உள்ளது. தமிழத்தை பொறுத்தவரை 21 ஆயிரம் சிறை கைதிகளை அடைக்க இட வசதி உள்ளது.

    ஆயினும் தமிழகத்தில் 16 ஆயிரம் பேர் சிறை வாசிகளே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் அறைகள் தூய்மையாக உள்ளதா, காற்றோட்ட வசதி, சூரிய வெளிச்சம், மின் விளக்குகள், மின் விசிறி வசதி , சிறைவாசிகளுக்கு உணவு, மருத்துவ வசதி, கழிவறை வசதி உள்ளதா எனவும், தவிர சிறைவாசிகளுக்கு சட்ட உதவி அளிக்கப்படுகிறதா, உறவினர்களிடமிருந்து வழங்கபடும் செய்திகள் முறையாக வழங்கபடுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யபட்டதாக தெரிவித்தார்.

    • ஊட்டமலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
    • மாலையில் காவிரி ஆற்றங்கரையோரம் உடல் கரை ஒதுங்கியது.

    தருமபுரி,

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோதிமங்கலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் என்கிற சந்திரிகா (வயது30). திருநங்கையான இவர் தனது நண்பர்களுடன் நேற்று சுற்றுலாவுக்காக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தார். அப்போது சந்திரிகா காவிரி ஆற்றில் தனது நண்பர்க–ளுடன் ஊட்டமலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.

    சிறிது நேரத்தில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த நண்பர்கள் சந்திரிகா காணவில்லை என்று ஆற்றில் மூழ்கி தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்க–வில்லை. மாலையில் காவிரி ஆற்றங்கரையோரம் உடல் கரைஒதுங்கியது.

    இது குறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரி–காவின் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த–னர். சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • உபரி நீரானது 4,000 கன அடியிலிருந்து 9,279 கன அடியாக வெளி யேற்றப்பட்டு வருகிறது.
    • சினி அருவி , ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்,

    தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற் றப்படும் உபரி நீரானது 4,000 கன அடியிலிருந்து 9,279 கன அடியாக வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படு கிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நிலவரப்படி 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர் வரத்து காரணமாக மெயின் அருவி, சினி அருவி , ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • குடற்புழு மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • ேமலும் இடுபொருட்களை கால்நடைகளுக்கு பயன்படுத்தும் முறைகளை மருத்துவர் விளக்கம் அளித்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ், பூதனஅள்ளி கிராமத்தில் கால்நடைகளில் குடற்புழு மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் குறித்து டாக்டர் பொற்செழியன் மற்றும் உதவி கால்நடை மருத்துவரால் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.மேலும் அவர் இளம் கன்றுகள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றிற்கு பிறந்த 6 மாதத்திற்கு பிறகு, 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.கால்நடைகள் வெறும் வயிற்றுடன் அதிகாலையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரே மருந்தை கொடுக்காமல் மாற்றி தருவது அவசியம் ஆகிய நடைமுறைகளை எடுத்துரைத்தார்.

    கால்நடைகளில் உண்ணி, பேன், தள்ளு பூச்சி ஆகிய புற ஒட்டுண்ணிகள் நீக்கம் செய்ய ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    செயல் விளக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு லிவர் டானிக், வைட்டமின் சி டானிக், பூச்சி மருந்துகள் ஆகிய இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

    ேமலும் இடுபொருட்களை கால்நடைகளுக்கு பயன்படுத்தும் முறைகளை மருத்துவர் விளக்கம் அளித்தார்.

    செயல்விளக்கத்திற்கு அட்மா திட்ட பேரிடர் தொழில்நுட்ப அலுவலர் சிவசங்கரி முன்னேற்பாடுகள் செய்திருந்தார்.

    இதில் பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கணவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன்பு இறந்து விட்டார்.
    • தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதில் கண், காது, கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே தொட்டபாவளி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 68). இவருக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்நிலையில் நேற்று முனியம்மாளின் மூத்த மகன் விவசாயி சுப்ரமணி என்பவர் தாய் முனியம்மாள் நிலத்தில், இந்த நிலம் எனக்கு சொந்தமானது என கூறி தனது மாடுகளை கட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட மூதாட்டி முனியம்மாவை சுப்பிரமணி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதில் கண், காது, கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே முனியம்மாளை உறவினர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கூட்டம் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
    • 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி கூட்டரங்கில் மாதாந்திர மன்ற கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வரவு - செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.

    மழைக்காலங்களில் சாலை மற்றும் தெருக்களின் ஓரம் தேங்கும் கழிவுநீரை அகற்றுவதற்காக மத்திய ஸ்வச்சபாரத் திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாகனம் மற்றும் குப்பைகளை அள்ளி செல்ல தானியங்கி வாகனம் வாங்கவும், கழிவு நீர் கால்வாய் இல்லாத பகுதிகளில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், பழுதடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீர் கால் வாய்களை புனரமைக்கவும், 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

    • கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது.
    • தருமபுரியில் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    தருமபுரி,

    தமிழ்நாட்டில் மேற்கு உள் மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய உள் மாவட்டங்களில் பெரும் பாலான பகுதிகள் முதல் ஆங்காங்கே பரவலாக இடியுடன் கூடிய கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை திடீரென கனமழை பொழிய தொடங்கியது. இதில் தருமபுரி நகர் பகுதி மற்றும் செட்டிக்கரை, ராஜாப்பேட்டை, பழைய தருமபுரி, பனந்தோப்பு, நடுப்பட்டி, சோலைக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது இந்த மழையால் நேதாஜி பைபாஸ் சாலையில் கழிவுநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது சில இடங்களில் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    மாவட்டத்தில் தருமபுரி 60 மி.மீ, பாலக்கோடு 11 மி.மீ, பென்னாகரம் 4 மி.மீ, ஒகேனக்கல் 20 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி 3.2 மி.மீ, அரூர் 37 மி.மீ, மொரப்பூர் 10 மி.மீ, நல்லம்பள்ளி 21 மி.மீ, என மொத்தம் 166.2 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இந்த கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது. மேலும் மழையில்லாமல் பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஊத்தங்கரை, ஓசூர், கிருஷ்ணகிரி, வேப்பன அள்ளி உள்ளிட்ட பகுதி களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை பகுதி யில் 2 மணி நேரமாக இரவு பெய்த மழையின் காரணமாக கொல்லப் பட்டி குடியிருப்பு பகுதி யில் சுமார் 20 வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டு எள்ளனர். நேற்று இரவு ஊத்தங்கரை பகுதியில் சுமார் 86. 20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

    அதிகளவில் மழை பெய்யும் நேரங்களில் வீடுகளில் மழை நீர் செல்வது தொடர் கதையாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக் குள்ளாகிறது.

    இது தொடர்பாக உரிய அதிகாரியிடம் ஒவ்வொரு முறை மழை வரும் பொழுதும் பொதுமக்கள் தெரிவித்தும் மழை நீர் வடிக்கால்களை தூர்வாரி தூய்மைப் படுத்துவ தில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.

    அதிகாலை முதல் இப்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி புதுச்சேரி சாலையில் மழை நீர் தேங்கிய வண்ணம் வாகனங்களும் கடந்து செல்கின்றன தகவல் தெரிவித்தும் இதுவரை சம்பவ இடத்திற்கு எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓசூரில் நேற்று இரவு 16.1 மி.மீ மழை பெய்தது. தொடர் மழையின் காரண மாக ரயில் நிலையம் அருகே, பாலத்தின் கீழ், மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இன்று காலை, தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்ற சம்பந்தப் பட்ட துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வாகன போக்குவரத்துக்கு சீர மைத்ததால், பொது–மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகள போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகள போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாங்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். மாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், துணை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுப் போட்டிகளை பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என 100 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இங்கு வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் பொறுப்பு தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், தமிழ் ஆசிரியர் முனியப்பன் உள்ள ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாங்கரை உடற்கல்வி ஆசிரியர் குப்பாகவுண்டர் நன்றி கூறினார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் செய்யப்பட்டது.

    ×