என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை
- நிவேதா வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக நிவேதா உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் சில்லாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிவேதா (வயது 18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.
இவர் கடந்த 27-ந் தேதி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து திட்டினார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக நிவேதா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






