என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
Byமாலை மலர்2 Sept 2023 3:09 PM IST
- வாடிக்கையாளர்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
- கடைக்காரர்கள் அவர்களின் இடத்தையும் தாண்டி, சாலைவரை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் பைபாஸ் சாலையில், 4 ரோட்டிலிருந்து ரவுண்டானா வரை, கடைகள், தாலுகா ஆபீஸ், மற்றும் வங்கிகள் முன்புறம் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
மேலும் கடைக்காரர்கள் அவர்களின் இடத்தையும் தாண்டி, சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர்.
எனவே உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கிடு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறையும்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×