search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளில் குடற்புழு நீக்கம் குறித்த செயல் விளக்கம்
    X

    கால்நடைகளில் குடற்புழு நீக்கம் குறித்த செயல் விளக்கம்

    • குடற்புழு மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • ேமலும் இடுபொருட்களை கால்நடைகளுக்கு பயன்படுத்தும் முறைகளை மருத்துவர் விளக்கம் அளித்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ், பூதனஅள்ளி கிராமத்தில் கால்நடைகளில் குடற்புழு மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் குறித்து டாக்டர் பொற்செழியன் மற்றும் உதவி கால்நடை மருத்துவரால் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.மேலும் அவர் இளம் கன்றுகள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றிற்கு பிறந்த 6 மாதத்திற்கு பிறகு, 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.கால்நடைகள் வெறும் வயிற்றுடன் அதிகாலையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரே மருந்தை கொடுக்காமல் மாற்றி தருவது அவசியம் ஆகிய நடைமுறைகளை எடுத்துரைத்தார்.

    கால்நடைகளில் உண்ணி, பேன், தள்ளு பூச்சி ஆகிய புற ஒட்டுண்ணிகள் நீக்கம் செய்ய ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    செயல் விளக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு லிவர் டானிக், வைட்டமின் சி டானிக், பூச்சி மருந்துகள் ஆகிய இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

    ேமலும் இடுபொருட்களை கால்நடைகளுக்கு பயன்படுத்தும் முறைகளை மருத்துவர் விளக்கம் அளித்தார்.

    செயல்விளக்கத்திற்கு அட்மா திட்ட பேரிடர் தொழில்நுட்ப அலுவலர் சிவசங்கரி முன்னேற்பாடுகள் செய்திருந்தார்.

    இதில் பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×