என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பென்னாகரத்தில் படங்களில் உள்ள பெயரை கூறி பதக்கம், சான்றிதழ் பெற்று 2 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
    • சிறுவன் தன்னுடைய 1½ வயதில் இருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்கள், பதக்கங்கள் வாங்கி குவிந்துள்ளான்.

    தொப்பூர்

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முள்ளுவாடி பகுதியில் அசோக்குமார் மணிமேகலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தற்போது 2 வயதில் பிரணவ் என்ற மகன் உள்ளான். பிரணவ் தனது 1½ வயதிலிருந்தே தன் அதீத திறமைகளை வெளிகாட்ட தொடங்கினான்.

    இதில் தற்போது வரை அவன் பள்ளிக்கு செல்லாமல் தன்னுடைய தாய் சொல்லிக் கொடுப்பதை அப்படியே முழுமையாக கற்றுக்கொண்டு எந்த நேரத்திலும் நாட்டின் தலைநகரம், பழங்கள், காய்கறிகளின் பெயர்களை தெரிவித்து வருகின்றான்.

    தன்னுடைய 1½ வயதிலேயே போட்டிகளில் பங்கெடுக்க தொடங்கியுள்ளான். வனவிலங்குகள், காய்கறிகள், பழங்கள், மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள், அரசியல் தலைவர்கள் பெயர்களையும் படத்தைக் காட்டினாலே ஆங்கிலத்திலும், தமிழிலும் சர்வ சாதாரணமாக கூறிகிறான். இதேபோல் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை சரளமாக தெரிவித்து வருகின்றான். இதற்காக பிரணவ் தனது 1½ வயதிலேயே அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட், இந்தியன்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட், இந்தியன் புக் ஆப் தி ரெக்கார்ட் உள்ளிட்டவற்றில் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார். தற்போது அடுத்த கட்டமாக அறம் விருதுகளுக்கும் பிரணவ் தேர்வாகியுள்ளார். இதனால் அவருடைய தாய் தந்தையர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அரூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையை பயன்படுத்தி மரக்கன்றுகள் நட விவசாயிகளுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி தேக்கு, சிவப்பு சந்தனம், மகோகனி, சில்வர் ஓக், மலைவேம்பு, நாவல், புளியன், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட வகையான பயனுள்ள மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்யலாம்.

    தருமபுரி:

    தமிழ்நாடு வனத்துறை பசுமை போர்வைத் திட்டம் மற்றும் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாத்தல் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    மொரப்பூர், அரூர், தீர்த்தமலை வனச்சரகங்கள், அரூர் சமூகக் காடுகள் மற்றும் வன விரிவாக்க விளம்பர சரகம், பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வனச்சரகம் ஆகியவற்றின் சார்பில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாக மரக்கன்று நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    விவசாய நிலங்கள், தொழிற்சாலைகளில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமை மயமாக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி தங்களது நிலங்களில் தேக்கு, சிவப்பு சந்தனம், மகோகனி, சில்வர் ஓக், மலைவேம்பு, நாவல், புளியன், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட வகையான பயனுள்ள மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்யலாம்.

    சிட்டா நகல், 2 புகைப்படம், ஆதார் அட்டை நகல் இவற்றுடன் அந்தந்தப் பகுதி வனச் சரகர்கள், வனவர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கால்வாயை தூர்வாரி அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மரத்தின் கிளை ஒன்று 6 பெண்கள் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி பகுதியில் மகாத்மா ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏரி வேலை கால்வாய் தூர்வாருதல் , ஏரிகளை புணரமைப்பு செய்தல் மற்றும் விவசாய பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் நேற்று மெணசி கிராமத்தில் கால்வாய் ஒன்றில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கால்வாயை தூர்வாரி அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கால்வாய் பகுதியிலிருந்த காய்ந்த மரத்தின் கிளை ஒன்று வேலை செய்து கொண்டிருந்த முத்தம்மாள் (55), பாப்பாத்தி (50) உள்ளிட்ட 6 பெண்கள் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது. மரக்கிளை விழுந்து படுகாயம் அடைந்த 6 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் இரண்டு பேரை மட்டும், தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரக்கிளை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • ராகவேந்திர சாமிக்கு சிறப்பு அபிஷேக பூர்வ ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடை பெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி விருபாட்சி புரத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீ புத்திகே மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சாமியின் 352-வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா புத்திகே மடாதிபதி பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சாமி அருளாசியுடன் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோ பூஜையும், ஸ்ரீ சத்யநாராயண சாமி பூஜையும் நடை பெற்றது. தொடர்ந்து ராக வேந்திர சாமிக்கு சிறப்பு அபிஷேக பூர்வ ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று ராக வேந்திர சாமிக்கு மத்ய ஆராதனை வழிபாடு நடைபெற்றது இதையொட்டி 50 தம்பதியினர் பங்கு பெற்ற கனக பூஜையும், ராகவேந்திர சாமியின் 1008 நாமாவளிக்கு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து இன்று (சனிக்கிழமை) ராகவேந்திர சாமிக்கு உத்ர ஆராதனையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கணபதி ஹோமம் மற்றும் சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனையும் நடக்கிறது. விழாவின் அனைத்து நாட்களிலும் காலை சுப்ரபாதமும், வேத பாராயணமும், சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் பல்லக்கு உற்சவம் மற்றும் வெள்ளி ரத உற்சவமும் நடக்கிறது. விழாவை யொட்டி பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, சீனிவாசன், கிருஷ்ணன், உடுப்பி புத்திகே மடத்தின் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் முதலிடம் பெற்று, 4 தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் என 9 பதக்கங்களை பெற்றுள்–ளார்
    • மெக்ஸிகோவில் பாரா டேக்வாண்டா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதநத்தம் கிராமத்தைச் சார்ந்த இளவரசன்-ஜெயந்தி தம்பதியின் மகன் இசையமுதன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இளவரசன் உயிரிழந்தார். இந்த விபத்தில் இசையமுதன் பலத்தகாயம் அடைந்தார். இதனை அடுத்து சிறிய வீட்டில் வசித்து வரும் ஜெயந்தி, பெட்டி கடை வைத்து தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

    மேலும் மாற்றுத் திறனாளியான இசை அமுதன் பள்ளி மற்றும் கிராமத்தில் சாதாரண மாணவர்கள் கலந்து கொள்ளும் செஸ், டென்னிஸ் என அனைத்து வகை போட்டிகளிலும், அவர்களுக்கு நிகராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். மேலும் டேக்வாண்டா பயிற்சி பெற்றுக் கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து வகையான டேக்வாண்டோ போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் தேசிய அளவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற, பாரா டேக்வாண்டா போட்டியில் கலந்து கொண்டு தமிழ கத்தில் முதலிடம் பெற்று, 4 தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கம் என 9 பதக்கங்களை பெற்றுள்ளார். இதில் இசை அமுதன் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம் இசைஅமுதன் உலக அளவில் டிசம்பர் மாதம் மெக்ஸிகோவில் பாரா டேக்வாண்டா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். உலக அளவில் நடை பெறும் பாராடேக் வாண்டோ போட்டி யில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளி மாணவன் இசை அமுதனை, இந்தியா டேக்வாண்டோ சங்கத்தின் துணைத் தலைவரும் டேக்வாண்டோ அசோ சியேஷன் தமிழ்நாடு தலை வருமான சாக்ரடீஸ் நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 26 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர்.
    • நல்லம்பள்ளி தாலுகாவில் 2 புதிய பாகங்களும் என மொத்தம் 4 புதிய வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் நசீர் இக்பால், உதவி கலெக்டர்கள் கீதாராணி, வில்சன் ராஜசேகர், தேர்தல் தனி தாசில்தார் அசோக்குமார் மற்றும் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:- தருமபுரி மாவட்ட த்தில் 1485 வாக்குச் சாவடிகளும், 878 வாக்குச் சாவடி மையங்களும் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 26 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறப்பு சுருக்க திருத்தம் 2024 தொடர்பாக புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறு சீரமைப்பு செய்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல், வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    1489 வாக்குச்சாவடிகள் அதன் அடிப்படையில் கடந்த மாதம் 21-ந்தேதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கோரிக்கைகளை வழங்குமாறு கூறப்பட்டது. இதன்படி அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்ப டையிலும், உதவி கலெக் டர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையிலும் வாக்குச்சாவடி மறுசீர மைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது காரிமங்கலம், அரூர் தாலுகாக்களில் தலா ஒரு புதிய பாகமும், நல்லம்பள்ளி தாலுகாவில் 2 புதிய பாகங்களும் என மொத்தம் 4 புதிய வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. மறு சீரமைப்பிற்கு பின்பு 1,489 வாக்குச்சாவடிகள் உள்ளன. 12 பகுதிகள் சீரமைப்பு, 105 கட்டிடங்கள் இடமாற்றம், 2 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகள் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பின்பு வாக்குச்சாவடி பட்டியலில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

    • வெளியேறும் உபரி நீரால் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் பயிர் சேதமானது.
    • கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தருமபுரி மாவட்டத்தில் பெரும்பா–லான ஏரி, குளங்கள் நிறைந்து வருகின்றன.

    இந்நிலையில் தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிடமனேரி ஏரியில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.

    இதேபோல் கடந்த கடந்த காலங்களில் பெய்த மழை–யால் ஏரி நிறைந்து ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்–பால் விவசாய நிலங்க–ளுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமானது.

    மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பெயரில் வட்டார வளர்ச்சி அலுவ–லர்கள் உபரி நீர் வெளியே–றுவதற்கு கால்வாய் அமைத்தனர். மேலும் உபரி நீர் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றி அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளா–ததால் உபரி நீர் கால்வாய்–கள் மண் சரிந்து ஆங்காங்கே மழை நீர் செல்வதற்கு வழியின்றி தடைபட்டுள்ள–தால் மழை நீரானது தற்போது பிடமனேரி பகுதி–யில் உள்ள விவசாய நிலங்க–ளில் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலை–களுக்குள்–ளும் மழை நீர் புகுந்துள்ளது.

    மேலும் ஏரியிலிருந்து ஜிலேபி, கட்லா, ரோகு, பொட்லா, உள்ளிட்ட பல வகையான மீன்கள் ஏரியின் உபரி நீர் செல்லும் ஏரிகோடி வழியாக வெளியேறி வயல்களில் புகுந்ததால் 2 நாட்களாக பொதுமக்கள் ½ கிலோ முதல் 4 கிலோ எடையுள்ள மீன்களை பிடித்து வருகின்றனர்.

    இதுகுறித்து இலக்கியம்–பட்டி பஞ்சா–யத்து பிடம–னேரி பகுதியில் உள்ள 4-வது வார்டு கவுன்சிலர் மற்றும் விவசாயிகள் கூறும்போது:-

    தருமபுரி கடந்த2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள பிடமனேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி நிறைந்தது. இதில் இருந்து 2 நாட்களாக உபரி நீர் ஏரிக்கோடி வழியாக வெளி–யேறி வருகிறது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலு–வலர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தற்காலிகமாக ஆக்கிர–மிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வாரி உபரிநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

    இந்த கால்வாய் வழியாக ஏரியின் உபரி நீர் நிரந்த–ரமாக வெளியேறுவதற்கு கால் வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றி அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடமும் மனு கொடுத்து முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிடமனேரி ஏரிக்கு கீழ்பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் ஏக்கருக்கு 40,000 செலவு செய்து நெல் பயிர் நடவு செய்துள்ளனர். தற்பொழுது ஏரியிலிருந்து வெளியேறும் உபரினரால் நெற்பயிர்கள் தண்ணீர் நிறைந்து நாசமாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக உபரி நீர் செல்லு கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    • கருப்பு கவுனி நெல்லை வேளாண் அலுவலகத்தில் 3 கிலோ வாங்கி நடவு செய்தேன்.
    • 8 மாதங்கள் முடிந்தும் நெல் முளைக்காமல் வெறுமன பயிர்கள் மட்டும் மூங்கில் வளர்வது போல் வளர்ந்து வருகிறது.

    தருமபுரி,

    உணவுப் பாதுகாப்பு, கிராமப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் விவசாயம் முக்கிய அங்கமாக உள்ளது.விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளும் கிராமப்புறங்களில் முக்கிய வாழ்வாதாரத்தை வழங்குகின்றன. தமிழகத்தில் வேளாண்துறை விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், தற்போதைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமையான பயிர் வகைகளை உருவாக்கவும், வணிகமயமாக்கல் மற்றும் விவசாய முறைகளை மாற்றுவதற்கான வலுவான உள்கட்டமைப்புகளை வடிவமைத்து வருகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு நேரத்தையும், செலவையும் குறைத்து நன்கு கட்டமைக்கப்பட்ட விற்பனை முறையை நிறுவுதல் மற்றும் விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களை விவசாயிகளுக்கு வேளாண் துறை செய்து வருகிறது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் துறையின் செயல்பாடுகள் இதற்கு நேர்மாறாக உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் விவசாயத்தில் சிறந்து விளங்கி வருகிறது. மாவட்டத்தில் நெல், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள், காய்கறி வகைகள், பூ வகைகள் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மண்ணின் தரத்திற்கு ஏற்ப உள்ள பயிர்களை விவசாயிகள் சொந்த முயற்சியில் சாகுபடி செய்து நல்ல மகசூலை எடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகளின் பங்கு சொற்ப அளவிற்கே உள்ளதாகவும், அதுவும் விவசாயிகளை நஷ்டத்தை அடைய செய்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்ற விவசாயி கூறும் போது:-

    எனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இதில் கரும்பு, வாழை, சோளம், மஞ்சள், நெல் உள்ளிட்ட பயிர் வகைகளை தோட்டக்கலையில் இருந்து வாங்கி வந்து பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். வேளாண் துறையின் அறிவுறுத்தலின்படி கருப்பு கவுனி நெல்லை மொரப்பூர் வேளாண் அலுவலகத்தில் கிலோ ரூ.100 என 3 கிலோ வாங்கி ஜனவரி மாதத்தில் நாற்று விட்டு, பிப்ரவரி மாதத்தில் நடவு செய்தேன். இதுவரை 8 மாதங்கள் முடிந்தும் நெல் முளைக்காமல் வெறுமன பயிர்கள் மட்டும் மூங்கில் வளர்வது போல் வளர்ந்து வருகிறது. இதனை மொரப்பூர் வேளாண்துறை அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் தெரிவித்தேன். மேலும், இந்த பயிரை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றேன்.

    அதற்கு அதிகாரிகள், வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி மொரப்பூர் பகுதி விவசாயிகளுக்கு 20 நபர்களுக்கு வழங்கி உள்ளோம். இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. நீங்கள் மட்டும் தான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளிர்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இவ்வாறு அவர் கூறினார். நெல் முளைக்காத பயிருக்கு பதிலாக மாற்றுபயிராக தக்காளி நடவு செய்து இருந்தால் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை லாபம் கிடைத்திருக்கும். கரும்பு நடவு செய்திருந்தால் 32 டன் விளைச்சல் கிடைத்திருக்கும். ஆனால் வேளாண் துறை அதிகாரிகளின் தவறுதலான வழிமுறையால் கால விரயம் மற்றும் ரூ.60 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இழப்பினை வேளாண் இணை இயக்குனர் வழங்க வேண்டும். மேலும், மொரப்பூர் வேளாண் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசாயி அண்ணாதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.


    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
    • பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி பகுதியில் உள்ள சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் 40 வயது மதிக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    புகாரின் பேரில் போலீ–சார் சம்பவ இடத்திற்கு வந்து ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் நேற்று அந்த நபர் சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்ற–போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாக்லெட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
    • சிறுமிக்கு பாலியல் தொந்த–ரவு கொடுத்துள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி பஸ் நிலையம் அருகே சத்திரம்தெருவில் பாலசுப்பிரமணி (75) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி பாலசுப்பிரமணி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்த–ரவு கொடுத்துள்ளார். உடனே நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    புகாரின் போலீசார் பாலசுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    தருமபுரி நகரில் 10 வயது சிறுமிக்கு 75 வயது முதி யவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சிலை கேட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது.

    அரூர்,

    நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புழுதியூர் புதன்சந்தை அருகில் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள குமரேசன் கூறுகையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விநாயகர் சிலை கேட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது.

    இங்கு அரை அடி முதல் 7 அடி வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது. சிலைகளானது அளவை பொருத்து ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    களிமண்ணால் ஆன சிலைகளுக்கு வண்ணம் தீட்ட, நீர் நிலைகள் மாசுபடாத வண்ணம், ரசாயண கலவை இன்றி இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்டுகிறது என அவர் கூறினார்.

    • வாடிக்கையாளர்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
    • கடைக்காரர்கள் அவர்களின் இடத்தையும் தாண்டி, சாலைவரை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பைபாஸ் சாலையில், 4 ரோட்டிலிருந்து ரவுண்டானா வரை, கடைகள், தாலுகா ஆபீஸ், மற்றும் வங்கிகள் முன்புறம் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் கடைக்காரர்கள் அவர்களின் இடத்தையும் தாண்டி, சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர்.

    எனவே உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கிடு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறையும்.

    எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×