search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகவேந்திர சாமி ஆராதனை விழா
    X

    ராகவேந்திர சாமி ஆராதனை விழா

    • ராகவேந்திர சாமிக்கு சிறப்பு அபிஷேக பூர்வ ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடை பெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி விருபாட்சி புரத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீ புத்திகே மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சாமியின் 352-வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா புத்திகே மடாதிபதி பூஜ்யஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சாமி அருளாசியுடன் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோ பூஜையும், ஸ்ரீ சத்யநாராயண சாமி பூஜையும் நடை பெற்றது. தொடர்ந்து ராக வேந்திர சாமிக்கு சிறப்பு அபிஷேக பூர்வ ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று ராக வேந்திர சாமிக்கு மத்ய ஆராதனை வழிபாடு நடைபெற்றது இதையொட்டி 50 தம்பதியினர் பங்கு பெற்ற கனக பூஜையும், ராகவேந்திர சாமியின் 1008 நாமாவளிக்கு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து இன்று (சனிக்கிழமை) ராகவேந்திர சாமிக்கு உத்ர ஆராதனையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கணபதி ஹோமம் மற்றும் சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனையும் நடக்கிறது. விழாவின் அனைத்து நாட்களிலும் காலை சுப்ரபாதமும், வேத பாராயணமும், சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் பல்லக்கு உற்சவம் மற்றும் வெள்ளி ரத உற்சவமும் நடக்கிறது. விழாவை யொட்டி பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, சீனிவாசன், கிருஷ்ணன், உடுப்பி புத்திகே மடத்தின் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×