என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் வென்று சாதனை"

    • தமிழகத்தில் முதலிடம் பெற்று, 4 தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் என 9 பதக்கங்களை பெற்றுள்–ளார்
    • மெக்ஸிகோவில் பாரா டேக்வாண்டா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதநத்தம் கிராமத்தைச் சார்ந்த இளவரசன்-ஜெயந்தி தம்பதியின் மகன் இசையமுதன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இளவரசன் உயிரிழந்தார். இந்த விபத்தில் இசையமுதன் பலத்தகாயம் அடைந்தார். இதனை அடுத்து சிறிய வீட்டில் வசித்து வரும் ஜெயந்தி, பெட்டி கடை வைத்து தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

    மேலும் மாற்றுத் திறனாளியான இசை அமுதன் பள்ளி மற்றும் கிராமத்தில் சாதாரண மாணவர்கள் கலந்து கொள்ளும் செஸ், டென்னிஸ் என அனைத்து வகை போட்டிகளிலும், அவர்களுக்கு நிகராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். மேலும் டேக்வாண்டா பயிற்சி பெற்றுக் கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து வகையான டேக்வாண்டோ போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் தேசிய அளவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற, பாரா டேக்வாண்டா போட்டியில் கலந்து கொண்டு தமிழ கத்தில் முதலிடம் பெற்று, 4 தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கம் என 9 பதக்கங்களை பெற்றுள்ளார். இதில் இசை அமுதன் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இந்த வெற்றியின் மூலம் இசைஅமுதன் உலக அளவில் டிசம்பர் மாதம் மெக்ஸிகோவில் பாரா டேக்வாண்டா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். உலக அளவில் நடை பெறும் பாராடேக் வாண்டோ போட்டி யில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளி மாணவன் இசை அமுதனை, இந்தியா டேக்வாண்டோ சங்கத்தின் துணைத் தலைவரும் டேக்வாண்டோ அசோ சியேஷன் தமிழ்நாடு தலை வருமான சாக்ரடீஸ் நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • தேசிய அளவில் கராத்தே போட்டி
    • சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சின்னகோடியூர், செவத்தான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரின் மகன் தனுஷ் (வயது17).

    இவர் ஜோலார்பே ட்டை யில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தனுஷ் மாவட்ட, மாநில அளவில் நடந்த கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    மேலும் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று நேற்று சொந்த ஊர் திரும்பிய தனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் இவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஜம், கராத்தே பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    ×