என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி செம்மண்  கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
    X

    அனுமதியின்றி செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

    • ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி யின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மதிகோண் பாளையம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்த னர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நடுப்பட்டி பகுதியில் புவியி யல்துறை அதிகாரி லோக நாதன் தலைமையில் வாகனம் சோதனை நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி யின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    பின்னர் அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மதிகோண் பாளையம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×