என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    தருமபுரியில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

    • கலெக்டர் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.
    • ஆட்சியரின் தவறான உத்தரவை ரத்து செய்து மீண்டும் வட்டாட்சியரை பணியில் சேர்ப்பதற்காக உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலு வலக வாளாகத்தில் காத்தி ருப்பு போராட்டம் நேற்று நடந்தது.

    இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண் ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலை வர் டியூக் பொன்ராஜ் பேசினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்திய வட்டாட்சியர் மனோஜ் முனியனை பணியிடை நீக்கம் செய்து, உத்தரவு பிறப்பித்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வரு வாய்த் துறை அலுவலர் சங்கம் நடத்தும் அறவழி போராட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு ஆதரவு தெரி விக்கிறது. உடனடியாக மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், தமிழ் நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்களை அழைத்து பேசி இறுதித் தீர்வை எட்ட வேண்டும் என்றும், தமிழகம் முழு வதும் உள்ள பெண்கள் உரிமைத்தொகை பணி பாதிக்கப்பட்டு உள்ளதை உள்வாங்கிக் கொண்டு வருவாய்த்துறை அமைச்சர் இதில் தலையிட்டு மாவட்ட ஆட்சியரின் தவறான உத்தரவை ரத்து செய்து மீண்டும் வட்டாட்சியரை பணியில் சேர்ப்பதற்காக உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பழனியம்மாள்,சரவணன், ராஜீவ் காந்தி, சிவக்குமார், அசோக்குமார், நாகவேணி, அன்பு, சேகர், உள்ளிட்ட அனைத்து துறை அலுவ லர்கள் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×