என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொரப்பூரில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசிய போது எடுத்த படம். 

    மொரப்பூரில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

    • 18 வயது நிரம்பி உள்ளவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
    • இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும்

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செங்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ண குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்சென்ன கிருஷ்ணன்,மொரப்பூர் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் லோகேஷ் வரவேற்று பேசினார்.

    இக்கூட்டத்தில் தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார். இதில் 18 வயது நிரம்பி உள்ளவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும், இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராசு தமிழ்செல்வன், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர்கள் சசிகுமார், செந்தமிழன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சிவாஜி, மாவட்ட விவசாய அணி மாவட்ட துணை தலைவர் சாமிநாதன், தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வி சின்னபையன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, ராஜராஜன், முன்னாள் சேர்மன் தென்னரசு, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி முல்லை கோபால் நன்றி கூறினார்.

    Next Story
    ×