என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க செயின்களை பறிப்பு"

    • சுமதி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்தும் 7 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.
    • ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களால் அந்தந்த பகுதிகளின் பொது–மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    தருமபுரி,

    தருமபுரி நகர் பகுதியில் 2 பெண்களிடம் 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் தருமபுரி பகுதியில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை பிடிக்க அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     தருமபுரி நகர் பகுதிகளில் அடிக்கடி கொள்ளை, வழிபறி நடப்பதாக பொது–மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன்காரணமாக குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தருமபுரி, பிடமனேரி, மதிகோன்–பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனை, ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தர விட்டார். அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தருமபுரி குமாரசாமிபேட்டை அரிசந்திரன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய லட்சுமி என்பவர் அதிகாலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து விஜயலட்சு மியின் கழுத்தில் அணிந்தி ருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். அப்போது அவர் திருடன், திருடன் என்று கத்தியபடி ஓடி சென்று அவர்களை பிடிக்க முயற்சித்தார். அதற்குள் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.

    இதேபோன்று அதியமான்கோட்டை எர்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமதி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்தும் 7 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களால் அந்தந்த பகுதிகளின் பொது–மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

     இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் அந்தந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது தருமபுரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்தான், எர்ரப்பட்டியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக அந்த மர்ம நபர்கள் தருமபுரியில் உள்ள ஒரு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியதும், செயின் பறிப்பில் ஈடுபடு–வதற்காக திருடப்பட்ட வண்டியில் போலியான நெம்பர் பிளேட்டுகளை மர்ம நபர்கள் பொருத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த மர்ம நபர்கள், பிடமனேரி, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் உள்ள இருசக்கர வாகனத்தை இன்று திருட முயன்றுள்–ளனர். அந்த வண்டிகளில் இருந்து சத்தம் வரவே அவர்கள் வண்டியை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

     இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., உடனே அந்த மர்ம நபர்களை பிடிக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட உத்தர விட்டார்.அதன்–ேபரில் போலீசார் மாவட்டம் முழுவதும் எல்லை பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும், சோதனை சாவடிகளிலும் உள்ள போலீசாரை உஷார்–படுத்தினர்.

    போலீசார் அந்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், மாவட்ட எல்லை பகுதிக–ளில் இருசக்கர வாகனங்–களில் வருபவர்களை தீவிர சோதனை பிறகே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், தருமபுரி, பிடமனேரி, அதியமான்கோட்டை பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×