என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • கடந்த 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தடுத்து 5ஆண்டுகள் கடந்து இன்று வரை நடத்தப்படவில்லை.
    • கோவில் திருப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர் ஸ்தபதி நந்தகுமார் நிதி பற்றாக்குறை, உபயதாரர்கள் ஒத்துழைப்பு இல்லை என காரணம் காட்டி இன்னும் 4மாதம் ஆகும் என்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1998ல் நடந்தது. அடுத்தடுத்து 5ஆண்டுகள் கடந்து இன்று வரை நடத்தப்படவில்லை. மீண்டும் நடத்த முடிவெடுத்து, தற்போது கோவில் சன்னதிகள், மண்டபங்கள், வளாகம் உள்ளிட்ட பகுதிகள் பழமை மாறாமல் வைணவ ஆகமமுறைப்படி மத்திய தொல்லியல்துறை விதிகளின்கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    உபயதாரர்களை காரணம் காட்டி பணிகள் தொய்வடைந்து வந்தது. 108 வைணவ தளங்களில் 63-வது கோவில் மூவலர் கருவரை மூடிக்கிடப்பதால் எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்? என பக்தர் ஒருவர் கேள்வி கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் திருப்பணிகள் குறித்தும், கும்பாபிஷேகம் எப்போது நடத்துவீர்கள் எனவும், கேள்வி எழுப்பினார். அதற்கு கோயில் நிர்வாகம் மே.4ல் கும்பாபிஷேகம் நடத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதையடுத்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், உள்ளிட்ட அதிகாரிகள் கோயிலை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது கோவில் திருப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர் ஸ்தபதி நந்தகுமார் நிதி பற்றாக்குறை, உபயதாரர்கள் ஒத்துழைப்பு இல்லை என காரணம் காட்டி இன்னும் 4மாதம் ஆகும் என்றார். அதனால் இன்னும் கும்பாபிஷேகம் நடத்த நாட்கள் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

    நீதிமன்றத்தில் தெரிவித்த தேதியில் பணிகளை விரைவாக முடித்து கும்பாபிஷேகம் நடத்த முடியுமா? உபயதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா? என்பது குறித்தும் இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • மாணவர்களின் வருகையால் குறு, சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, அதன் 1300 ஆண்டு, வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வருகிறார்கள்.

    சுற்றுலா பயணிகளின் வருகையில் முதலிடம் பிடித்த டெல்லி தாஜ்மஹாலை, மாமல்லபுரம் மிஞ்சியது. அதேபோல் தற்போது கல்வி சுற்றுலா என்றதும் பள்ளி மாணவ-மாணவிகளிடம் முதல் இடம் பிடிப்பது மாமல்லபுரமாக மாறி வருகிறது.

    ஏற்கனவே சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்பு, செஸ் ஒலிம்பியாட், காத்தாடி திருவிழா, ஜி-20, சவுண்ட் ராக்கெட் என பிரபலமான மாமல்லபுரம் தற்போது கல்வி சுற்றுலாவிலும் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது., பள்ளி மாணவர்கள் அதிகளவில் வருவதால் புராதன சின்னங்கள் அருகே கடை வைத்திருக்கும் குறு, சிறு வியாபாரிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    • ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இவ்வகை பாம்புகளின் இனப்பெருக்க காலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • இருளர்கள் பாம்புகளை பிடித்து வடநெம்மேலி பாம்பு பண்ணையில் கொடுத்து அதற்கான தொகையை வாங்குவர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் 1978ல் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 300 பேர் கொடிய விஷம் கொண்ட நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை உள்ளிட்ட பாம்புகளை பிடிக்க வனத்துறையினரின் அனுமதி பெற்றவர்கள்.

    ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இவ்வகை பாம்புகளின் இனப்பெருக்க காலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து மற்ற மாதங்களில் காடுகளுக்கு சென்று பாம்புகளை பிடித்து வடநெம்மேலி பாம்பு பண்ணையில் கொடுத்து அதற்கான தொகையை வாங்குவர். தற்போது வனத்துறை அனுமதி வழங்குவது தாமதம் ஆனதால் தற்காலிகமாக பாம்பு பிடிக்கும் பணியை சங்கத்தினர் நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டனர்
    • சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100அடி தூரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளனர்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி பகுதியில், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு ராணுவ பாதுகாப்புடன் மூலப்பொருட்களை கொண்டு செல்லும் முக்கிய பாதுகாப்பு நுழைவு வாயிலில் உள்ளது. இதன் அருகே 110-வோல்டேஜ் கொண்ட உயர் மின் வழித்தடம் உள்ளது. அதன் மின் கம்பத்தில் 40வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சடலத்தை மின் கம்பத்தில் இருந்து பாதுகாப்பாக இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவ மணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார்? தற்கொலை செய்தாரா? என்ன காரணம்? என மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100அடி தூரத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்புடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செங்கல்பட்டு அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வாலிபர் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 25) இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சல் அடைந்த இஸ்மாயில் தனது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து திருநீர்மலை நோக்கி சென்றார்.

    திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த பொக்லைன் எந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பொக்லைன் எந்திரத்தின் டயர் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபோன்று பள்ளி குழந்தைகள், முதியவர்கள் அந்த சாலையில் பரபரப்பாக செல்லும் நேரத்தில் கனரக வாகனங்கள், லாரிகள் அந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பும் ஏற்படுகிறது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்தநிலையில் லாரிகள், கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்ல தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாதரே டி- 23 என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • கல்லூரி மாணவ - மாணவிகளின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அடுத்த படாளம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் மாதரே டி- 23 என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கல்லூரியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர். அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் டாக்டர். மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தார். முதல்வர் காசிநாத பாண்டியன், டீன் சுப்பாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நதி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மது சரண்வேல் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் நடிகை லிஜோ மோல், புத்தக உரையாசிரியர் ஆனந்தி, பின்னணிப் பாடகி மாளவிகா சுந்தர், துணை நடிகை வினோதினி சின்னத்திரை நகைச்சுவை நடிகை சுனிதா கோகை, கார் பந்தய வீராங்கனை ஸ்ரேயா லோகியா, வியாபாரத் துறை வல்லுநர் மினுஅகர்வால், சிலம்பத்தில் உலக சாதனை புரிந்த சுகிதா, உணவு வல்லுனர் ஷர்மிளா , நடிகை கார்த்திகா, சமூக சேவகி சித்ரா தேவி மற்றும் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவியும் தொழில திபருமான பார்வதி ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் கல்லூரி மாணவ - மாணவிகளின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியத்தையும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
    • யாரேனும் குழந்தை திருமணம் செய்வது தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் ஐந்துகாணி பகுதியில் பல ஆண்டுகளாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாய கூலி வேலை மற்றும் மரம்வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருளர் இன குடும்பங்களில் உள்ளவர்கள் யாரும் பெரும்பாலும் படித்ததில்லை. இப்போது தான் முதல்முறையாக இங்கு உள்ள குழந்தைகளில் 4 பேர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். ஒரு பெண் மட்டும் பன்னிரண்டாவது படித்து வருகிறார். இவர்கள் பெரும்பாலும் வீடு அருகில் உள்ள காரைதிட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 4 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பிறகு மேல் படிப்புக்காக வேறு பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர்.

    இதன் காரணத்தை அறியவும் மேலும் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியத்தையும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுத உள்ள தேவி என்ற பெண்ணை அழைத்து படித்து என்னவாக விரும்புகிறாய்? என மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கேட்டதற்கு அந்த பெண் வங்கி மேலாளர் ஆகப்போவதாக தெரிவித்தார். உடனடியாக அந்த மாணவியை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அதைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரி சங்கீதா பேசும்போது, திருமண வயதை அடையும் முன்பே குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்தார். அப்படி யாரேனும் குழந்தை திருமணம் செய்வது தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

    • ஓட்டேரியில் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சிறுபான்மை அணி கிருஷ்ணராஜசேகர், டில்லிகுமார், சுரேஷ், ஜெயகோபாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வண்டலூர் அருகே ஓட்டேரியில் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் டேனியல் தலைமை தாங்கினார். இதில் மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் சா. நடராஜன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஹுசேன்பாய் மற்றும் சிறுபான்மை அணி கிருஷ்ணராஜசேகர், டில்லிகுமார், சுரேஷ், ஜெயகோபாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • கடந்த 20-ந்தேதி அமலம்மாள் வீட்டு வேலை ஒழுங்காக செய்யாததால் கண்டித்துள்ளார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் செட்டி புண்ணியம் அடுத்த வடகால் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் ஹரிணி (வயது 19). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 20-ந்தேதி அமலம்மாள் வீட்டு வேலை ஒழுங்காக செய்யாததால் கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி ஹரிணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொக்கு மருந்தை சாப்பிட்டு வாந்தி எடுத்தார்.

    இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பா மகன் கார்த்தி அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பந்தமாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்த தம்பதியினர் துபாயில் பயணத்தை தொடங்கி மாமல்லபுரம் வந்தனர்.
    • சொகுசு பஸ்சை இதுவரை 22 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஓட்டி வந்துள்ளார்.

    மாமல்லபுரம்

    ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரை சேர்ந்தவர் காய் (வயது 45). இவருடைய மனைவி நீனா (44). இவர்களுக்கு பென் (12) என்ற மகனும், லெனி (10) என்ற மகளும் உள்ளனர். காய், ஜெர்மன் நாட்டில் உள்ள செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். தனது சுய சம்பாத்தியத்தில் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டு துபாய் நாட்டில் குடியேறினார்.

    தம்பதி இருவரும் அங்குள்ள சாப்ட்வேர் கம்பெனியில் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகின்றனர். தலா ரூ.50 லட்சம் சம்பளம் பெறும் இருவரும் மாதம் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டுகின்றனர்.

    துபாயில் உள்ள பள்ளியில் பென் 7-ம் வகுப்பும், லெனி 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஜெர்மனியில் நிறைய சொத்து, போதிய வருமானம் இருந்தும், பெற்றோர்களை நம்பி இல்லாமல் சுயமாக சம்பாதித்து துபாயில் வாழ்ந்து வரும் காய், நீனா தம்பதி ஒரு சொகுசு பஸ்சை தயார் செய்து சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

    இதையடுத்து துபாயில் ரூ.10 லட்சத்தில் ஒரு பஸ்சை வாங்கி அதில் ரூ.40 லட்சத்தில் சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை வசதி, ஏ.சி, டி.வி., பிரிட்ஜ் உள்ள ஒரு சொகுசு வீடாக மாற்றினர். இதையடுத்து அவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி தங்கள் சொகுசு பஸ் பயணத்தை துபாயில் தொடங்கினர்.

    பிறகு ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் வாகா எல்லை வழியாக இந்தியா வந்த அவர்கள் பஞ்சாப், உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சொகுசு வீடு பஸ்சில் நேற்று மாமல்லபுரம் வந்தனர்.

    மாமல்லபுரம் சுற்றி பார்த்துவிட்டு ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுவிட்டு, பிறகு நேபாளம், மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், உருகுவே, பிரேசில், அர்ஜென்டியனா, சிலி, பெரு, கொலம்பியா, ஈக்வடார் ஆகிய நாடுகள் வழியாக சென்று அமெரிக்காவில் தங்கள் சொகுசு வீடு பஸ் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

    கடற்கரை சூழ்ந்து உள்ள நாடுகளுக்கு சிறப்பு விசா பெற்று கப்பல் மூலம் இந்த பஸ்சை எடுத்து செல்லும் இந்த குடும்பத்தினர் பின்னர் அந்த நாடுகளில் சாலை மார்க்கமாக இந்த பஸ்சில் சுற்றி பார்க்க செல்கின்றனர். துபாய் பள்ளியில் தங்கள் மகன், மகளை தங்களுடன் சுற்றுலா அழைத்து செல்வதற்காக சிறப்பு அனுமதி பெற்று உடன் அழைத்து வந்துள்ளனர்.

    இவர்களது மகன் பென், மகள் லெனி இருவரும் தினமும் சொகுசு பஸ்சிலேயே லேப்-டாப் மூலம் 6 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு படிக்கின்றனர்.

    குறிப்பாக இந்த நவீன சொகுசு பஸ்சை சாப்ட்வேர் என்ஜினீயர் காய் இதுவரை 22 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஓட்டி வந்துள்ளார். இவர்கள் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடுவதில்லை. காயின் மனைவி நீனா சொகுசு பஸ்சில் உள்ள சமையல் கூடத்தில் இருந்து ஜெர்மனி உணவுகளை சமையல் செய்து தருகிறார். அதனை அவர்கள் சாப்பிடுகின்றனர். பஸ்சில் சோலார் வசதியும் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் மூலம் மின்சார வசதி பெற்று மின்விசிறி, மின் விளக்கு, குளிர் சாதன வசதி, பிரிட்ஜ் பயன்படுத்துகின்றனர்.

    • வீட்டின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் ஓரம் உள்ள ஒரு மரத்தில் கோபால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோசபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் ஓரம் உள்ள ஒரு மரத்தில் கோபால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×