பாம்பு பிடிக்கும் பணி நிறுத்தம்: இருளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இவ்வகை பாம்புகளின் இனப்பெருக்க காலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இருளர்கள் பாம்புகளை பிடித்து வடநெம்மேலி பாம்பு பண்ணையில் கொடுத்து அதற்கான தொகையை வாங்குவர்.
பாம்பு பிடிக்கும் பணி நிறுத்தம்: இருளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் 1978ல் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 300 பேர் கொடிய விஷம் கொண்ட நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை உள்ளிட்ட பாம்புகளை பிடிக்க வனத்துறையினரின் அனுமதி பெற்றவர்கள்.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இவ்வகை பாம்புகளின் இனப்பெருக்க காலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து மற்ற மாதங்களில் காடுகளுக்கு சென்று பாம்புகளை பிடித்து வடநெம்மேலி பாம்பு பண்ணையில் கொடுத்து அதற்கான தொகையை வாங்குவர். தற்போது வனத்துறை அனுமதி வழங்குவது தாமதம் ஆனதால் தற்காலிகமாக பாம்பு பிடிக்கும் பணியை சங்கத்தினர் நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com