என் மலர்
செங்கல்பட்டு
- சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு மதில் சுவர் கட்டப்படுகிறது
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் 1054 ஏக்கர் நிலம் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை 10.44 கோடி ரூபாய் செலவில், பாதுகாக்கும் பொருட்டு சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு மதில் சுவர் கட்டும் பணியினை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே இதற்கான நிகழ்ச்சி மேடை அமைக்கப்பட்டிருந்தது. முதல்வர் துவக்கி வைத்ததும் உடனடியாக அங்கு பட்டாச்சாரியார் சக்ரவர்த்தி என்பவரை வைத்து இந்து முறைப்படி பூமி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அப்பகுதியில் பனை மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, இந்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் வாணதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல், இதயவர்மன், பையனூர் சேகர், பட்டிபுலம் ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- கூடுவாஞ்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 3 மொபட்டுகள், 3 வீச்சரிவாள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அருகே கூடுவாஞ்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மொபட்டில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனையடுத்து மொபட்டின் இருக்கைக்கு அடியில் சோதனை செய்தபோது அதில் 3 வீச்சரிவாள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் நந்திவரம் பகுதியை சேர்ந்த காளி என்கிற விக்னேஷ் (வயது 30), சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (19), என்பது தெரியவந்தது. இருவரும் 3 மொபட்டுகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 3 மொபட்டுகள், 3 வீச்சரிவாள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
- கண்டிகை அருகே அரசு பள்ளியில் சுகாதார சீர்கேட்டில் மாணவ-மாணவிகள் கல்வி கற்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாட்டு சாணத்தின் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
கண்டிகை:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், குமிழி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குமிழி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள மாடுகள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து சாணம் போடுகிறது. இதனால் தினந்தோறும் பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் மாட்டு சாணத்தை அகற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்லக்கூடிய மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மாட்டு சாணத்தின் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பகலில் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடமாகவும், இரவு நேரத்தில் மாட்டு தொழுவமாக பள்ளிக்கூடம் மாறி உள்ளது. எனவே உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் குமிழி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியை நேரில் ஆய்வு செய்து உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து நுழைவாயில் பகுதியில் இரும்பு கேட் அமைத்து தரும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் கலெக்டரின் உத்தரவை மீறி பல்வேறு சாலையில், பள்ளிக்கூடங்கள், ரேஷன் கடை, பயணிகள் நிழற்குடை போன்ற இடங்களில் சாணம் போட்டு அசுத்தம் செய்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்தி வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகாரிகள் பலமுறை அகற்றும்படி எச்சரித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
- பொக்லைன் வைத்து ஆக்கிரமிப்பு கட்டுமானம் மற்றும் குடில்களை இடித்து தள்ளினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கடற்கரையோரம் அரசுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 40 சென்ட் நிலத்தை அப்பகுதியில், கெஸ்ட் அவுஸ் நடத்தும் சென்னையை சேர்ந்த நபர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை அகற்றும்படி எச்சரித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இந்நிலையில் அங்கு கட்டுமானம் கட்டப்பட்டு, குடில் போட்டிருப்பதாக தகவலரிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், வருவாய் ஆய்வாளர் ரகு, வி.ஏ.ஓ முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மதியம் அங்கு சென்று, பொக்லைன் வைத்து ஆக்கிரமிப்பு கட்டுமானம் மற்றும் குடில்களை இடித்து தள்ளினர். மின் இணைப்பு இருந்ததையும் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு கானப்பட்டது.
- வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2½ லட்சம். வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புதுமேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் அஞ்சாலாட்சி (வயது 50). கணவரை இழந்த அஞ்சாலாட்சி தனது 3 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது 2 மகன்கள் வேலைக்கு சென்று விட்டனர். இனளய மகன் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார். அஞ்சாலட்சுமி அவரை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2½ லட்சம். வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மாமல்லபுரம் அ.தி.மு.க.வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து நகர செயலாளர் கணேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தனபால், முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் தினேஷ்குமார், வேலாயுதம், தணிகைவேல், ஜெயச்சந்திரன், செல்வம், விஜயரங்கன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.
- 2022 -2023-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் 31.10.2022-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.
- தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வண்டலூர்:
மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மறைமலைநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி முதல் அரையாண்டுக்கான தொகை ஏப்ரல் 30-ந்தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கான தொகை அக்டோபர் 30-ந்தேதிக்குள்ளும் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகும். 2022 -2023-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் 31.10.2022-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.
எனவே மறைமலைநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை, உள்ளிட்டவற்றை பொதுமக்கள் உடனடியாக நிலுவையின்றி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
- போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார்.
வண்டலூர்:
வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று இரவு 8 மணியளவில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வந்தார். அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்திடம் இப்பகுதியில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் அதன் பின்னணி நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் குற்றங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் இந்த இரவு நேர அதிரடி ஆய்வால் ஓட்டேரி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
- பஸ் கிழக்கு தாம்பரம், மகாலட்சுமி நகர் அருகே பயணி ஒருவரை ஏற்றுவதற்காக நின்றது.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.
தாம்பரம்:
சென்னை அடையாறில் இருந்து திருவண்ணாமலைக்கு (எண் 122) குளிர் சாதன அரசு விரைவு பஸ் சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கிழக்கு தாம்பரம், மகாலட்சுமி நகர் அருகே பயணி ஒருவரை ஏற்றுவதற்காக நின்றது. அப்பேது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பெண்பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சேலையூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிற்கு தகவல் கிடைத்தது.
- லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட புதுப்பட்டினம் ஆர்.எம்.ஐ. நகர் பகுதியை சேர்ந்த செந்தில் குமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கல்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட புதுப்பட்டினம் ஆர்.எம்.ஐ. நகர் பகுதியை சேர்ந்த செந்தில் குமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- இறால், வஞ்சிரம், ஷீலா, பாறை போன்ற விலை உயர்ந்த மீன்கள் ஏதும் வலையில் சிக்கவில்லை.
- இவ்வகை மீன்களை பிடிக்க சிறு வகை படகுகளில் ஆழ்கடலுக்கு செல்ல முடியாது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பகுதியில் மழை, கடல் சீற்றம், "மாண்டஸ்" புயல் என கடந்த 7 நாட்களாக கடலின் அலை மேலோட்டமாகவும், ஆழ்கடல் அழுத்தமும் இயற்கைக்கு மாறாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதையடுத்து மாமல்லபுரம், தேவநேரி, நெம்மேலி, வெண்புருஷம், உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
வழக்கம் போல் இவர்கள் 5.கி.மீ., துரம் வரை சென்று மீன் பிடித்தனர். ஆனால் வலையில் இறால், வஞ்சிரம், ஷீலா, பாறை போன்ற விலை உயர்ந்த மீன்கள் ஏதும் சிக்கவில்லை. அவைகள் "மாண்டஸ்" புயலால் கடலில் சீற்றம் மாறுபட்டதால் 25 கி.மீ., தூரத்திற்கு சென்றுவிட்டதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வகை மீன்களை பிடிக்க சிறு வகை படகுகளில் அங்கு செல்ல முடியாது. அப்படி சென்றாலும், டீசல், நேரம், மோட்டார் தேய்மானம் கணக்கிட்டால் ஆதாயம் கிடைக்காது. அதனால் வீட்டுக்கு தேவையான மத்தி, பூச்சி, நாக்பூச்சி மீன்களை மட்டும் பிடித்து வரும் சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
- மாணவி நிஷாந்தினி மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
- பெற்றோரும், உடன் படித்த தோழிகளும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை நடத்துபவர் ரவீந்திரன். இவரது மகள் நிஷாந்தினி (வயது 18). இவர் பொன்னேரியில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் உடலைப் பார்த்து பெற்றோரும், உடன் படித்த தோழிகளும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இளம் வயதில் டெங்குவிற்கு கல்லூரி மாணவி பலியானதால் கொக்கிலமேடு கிராமமே சோகமயமாக காணப்பட்டது.






