என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மொபட்டுகள் திருடிய வழக்கில் 2 பேர் கைது
  X

  மொபட்டுகள் திருடிய வழக்கில் 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூடுவாஞ்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 3 மொபட்டுகள், 3 வீச்சரிவாள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

  கூடுவாஞ்சேரி:

  செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அருகே கூடுவாஞ்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மொபட்டில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனையடுத்து மொபட்டின் இருக்கைக்கு அடியில் சோதனை செய்தபோது அதில் 3 வீச்சரிவாள் இருப்பது தெரியவந்தது.

  பின்னர் இருவரையும் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் நந்திவரம் பகுதியை சேர்ந்த காளி என்கிற விக்னேஷ் (வயது 30), சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (19), என்பது தெரியவந்தது. இருவரும் 3 மொபட்டுகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 3 மொபட்டுகள், 3 வீச்சரிவாள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

  Next Story
  ×