என் மலர்
செங்கல்பட்டு
- புத்தாண்டு கொண்டாட்டத்தின் முதற்கட்ட விழாவாக கிறிஸ்துமஸ் மரம் விளக்கு விழா தொடங்கியது
- 2021-2022 ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்திருந்தன
மாமல்லபுரம்:
சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 2023 ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட முன்பதிவு துவங்கியது. இதற்கான முதற்கட்ட விழாவாக கிறிஸ்துமஸ் மரம் விளக்கு விழாவை, மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள, "ரேடிசன்புளு டெம்பிள்பே" ஹோட்டலில் அதன் மேலாளர்கள் ஷபின் சர்வேத்தம், அமித்ராஜ் குண்டு உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2021-2022 ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்தது. தற்போது கட்டுப்பாடு இல்லாததால், 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு வர இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கேளிக்கை விழாக்களை நடத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து வகை ஹோட்டல்களும் முன்பதிவை துவங்கி உள்ளன.
- செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து புத்தக திருவிழாவை நடத்த இருக்கிறது.
- புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி முதல் 4.01.2023 வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி. சாலை, அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புத்தகத் திருவிழா- 2022 நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து இதனை நடத்த இருக்கிறது.
புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி முதல் 4.01.2023 வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி. சாலை, அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது. புத்தக அரங்குகள், கலை அரங்கம், உணவரங்கம் மற்றும் பல்வேறு ஆளுமைகள் தினந்தோறும் கலந்து கொண்டு சிறப்பாக இருக்கின்ற சிந்தனை அரங்கம் ஆகியவற்றுடன் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு புத்தகத்திருவிழாவில் கோளரங்கம், புத்தக வெளியீடுகள், மாணவ மாணவியருக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை சிறப்பம்சங்களாகும்.
சிந்தனையை தூண்டும் சிறப்புப் பேச்சாளர்களாக காளீஸ்வரன், ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா, நெல்லை ஜெயந்தா, இமயம், சண்முக வடிவேல், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர் ஆகியோர் செவிக்கு விருந்தளிக்க இசைந்துள்ளார். செங்கை புத்தகத் திருவிழாவில் 'செஸ்' புகழ் தம்பியின் சின்னம் வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தாம்பரம் அருகே எட்டியாபுரம், தர்காஸ் சாலையில் தனியார் விலங்குகள் தொண்டு நிறுவனம் உள்ளது.
- 4 விலங்குகள் நல அமைப்பு தொண்டு நிறுவனத்திடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அருகே எட்டியாபுரம், தர்காஸ் சாலையில் தனியார் விலங்குகள் தொண்டு நிறுவனம் உள்ளது. வீடுகளில் வளர்க்கப்பட்டு பின்னர் கைவிடப்படும் பூனை, நாய்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
மேலும் பொது இடங்களில் மீட்கப்படும் செல்லப் பிராணிகளையும் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்படும் நாய், பூனைகளுக்கு சரியாக உணவு அளிக்கப்படுவதில்லை எனவும், அவை உயிருக்கு போராடும் நிலையில் உடல் மெலிந்து இருப்பதாகவும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல அமைப்புகள், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்று பார்த்த போது தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்படும் நாய், பூனைகள் பரிதாப நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து 'ஷெவன் பார் அனிமல்' அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் போலீசார் தொண்டு நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட நாய், பூனைகளை மீட்டனர். அவற்றை வேறு 4 விலங்குகள் நல அமைப்பு தொண்டு நிறுவனத்திடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.
இதுகுறித்து 'ஹெவன் பார் அனிமல்' அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ்காந்த் என்பவர் கூறும்போது, "இந்த இடத்தில் விலங்குகள் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்பட்டு உள்ளது. சரியான ஊட்டச்சத்து, உணவு இல்லாததால் அவை மெலிந்து இருந்தன.
நாங்கள் சென்ற போது ஒரு நாய் 4 குட்டிகளை ஈன்று இருந்தது. அதில் 2 குட்டிகள் இறந்து இருந்தன. மேலும் ஒரு பூனை இறந்து கிடந்தது. அதனை மற்ற பூனைகள் தின்று கொண்டு இருந்தன.
பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது. அதன் உணவு கிண்ணங்கள் காலியாகவே கிடந்தன. சுமார் 100 நாய், பூனைகள் மீட்கப்பட்டு உள்ளது" என்றார்.
- விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்டு விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் நண்பர்கள் மற்றும் பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
வண்டலூர், தெரு வீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்(வயது17). இவர் மண்ணிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது நண்பர் ஒருவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வைத்து இருந்தார். அதனை மாணவர் சரண் ஓட்டி பார்க்க ஆசைப்பட்டார்.
நேற்று இரவு அவர் தனது நண்பரிடம் கே.டி.எம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு ஓட்டிச் சென்றார். அவர் வேகமாக சென்றதாக தெரிகிறது.
வண்டலூர்-வாலாஜபாத் சாலையில், வண்டலூர் ஏரி அருகே வளைவில் திரும்பிய போது சரணால் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி அங்கிருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்டு விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் நண்பர்கள் மற்றும் பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போக்குவரத்து விதி மீறி வருவோரிடம் மாமல்லபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர்.
- புராதன சின்னங்கள் போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளில் கார்களை நிறுத்தினால் அதற்கு “வீல் லாக்” போட்டு ஆன்லைனில் அபராதம் கட்ட ரசீது கொடுக்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார்களில் சீட் பெல்ட் போடாமலும், பைக்குகளில் ஹெல்மெட் அணியாமலும் போக்குவரத்து விதி மீறி வருவோரிடம் மாமல்லபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர். திருவிடந்தை சோதனை சாவடியில் 51பேர், மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 30பேர் என 81 பேருக்கு அபராதம் விதித்தனர். நகரின் முக்கிய வீதிகளான பஸ் நிலையம், தலசயன பெருமாள் கோவில், புராதன சின்னங்கள் போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளில் கார்களை நிறுத்தினால் அதற்கு "வீல் லாக்" போட்டு ஆன்லைனில் அபராதம் கட்ட ரசீது கொடுக்கப்படுகிறது.
- சேலம், புதுச்சேரி, மாமல்லபுரம் அடுத்த பையனூர் என மூன்று இடங்களில் இந்த கல்வி நிறுவனம் உள்ளது
- உயிர் காக்கும் பணிக்கான கல்வி, பயிற்சி தகுதிகளை முன்வைத்து விருது வழங்கப்பட்டது.
மாமல்லபுரம்:
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் சார்பில் 2004ம் ஆண்டு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, இரண்டு படிப்புகளுடன் 20 மாணவர்களை வைத்து அதன் நிறுவனர் சண்முக சுந்தரம் துவங்கினார். சேர்மன் கணேசனின் தொடர் முயற்சியில், கல்லூரி முதல்வர் மருத்துவர் செந்தில்குமாரின் செயல்பாட்டால் தற்போது சேலம், புதுச்சேரி, மாமல்லபுரம் அடுத்த பையனூர் என மூன்று இடங்களில் பல படிப்புகளுடன், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
கல்லூரியின் கட்டமைப்பு, புதிய மருத்துவ பாடத்திட்டங்கள், கல்விமுறை, கருவிகள், சமூக பொறுப்புகள், மருத்துவ சேவைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் பணிக்கான கல்வி, பயிற்சி தகுதிகளை முன்வைத்து 2022ம் ஆண்டுக்கான "வீகனெக்ட்" விருது அலைடு சயின்ஸ் துறைக்கு வழங்கப்பட்டது. விருதை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
- இரணியம்மன் கோவில் தெரு அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி இரணியம்மன் கோவில் தெரு அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல வண்டலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த வண்டலூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (68) என்ற முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
- வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கானாத்தூர் பகுதியில் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்தவ பெருவிழா இன்று மாலை நடக்கிறது.
விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்க செல்லும் திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதில் வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், வி.ஜி.சந்தோசம் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டாசு வணிக வளாகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து, பட்டாசு பூங்கா அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
- தற்காலிக பட்டாசு கடை உரிமம் தீபாவளிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக வழங்க அரசாங்கத்தை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் 12-வது மாநில செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி ராஜா, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தசரதன் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் 150 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நிரந்தர பட்டாசு கடை உரிமங்களை மூன்று வருடங்களுக்கு புதுப்பித்து வழங்கவும், புதுப்பிக்க விண்ணப்பித்த காலத்தில் இருந்து இரண்டு மாதத்தில் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் புதுப்பித்து வழங்கவும், தற்காலிக பட்டாசு கடை உரிமம் தீபாவளிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக வழங்க அரசாங்கத்தை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தி தொழில் செய்யும் எங்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டாசு வணிக வளாகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து, பட்டாசு பூங்கா அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.
- தாக்குதலில் படுகாயம் அடைந்த தனசேகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
- தனிப்படை கள் அமைத்து குற்றவாளிகளை தேடிய போலீசார்.
மதுராந்தகம்:
திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் துரை தனசேகரன் (வயது 46), பா.ஜனதா மாநில நிர்வாகி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து காரில் வெளியில் சென்றார். கானகோயில்பேட்டை என்ற பகுதியில் சென்ற போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர்.
உடனே தனசேகரன் காரைவிட்டு இறங்கி ஓடினார். அப்போது அந்த கும்பல் அவரை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த தனசேகரன் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தனசேகரனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சம்பவ இடத்துக்கு சென்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர் புடையவர்களை கைது செய்ய 4 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்றார். இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்ற தனசேகரனை சந்தித்து ஆறுதல் கூறினார். தைரியமாக இருங்கள். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்றார். அதன்பிறகு அண்ணாமலை கூறுகையில், தனசேகரன் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கஞ்சா விற்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து அவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட தமிழக பா.ஜனதா நிர்வாகி தனசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவரோடு தோளோடு தோள் நிற்பேன் என்ற வாக்குறுதியை அளித்தேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தனசேகரன் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் நள்ளிரவு போலீசில் சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள் வக்கீல் அகமது பாஷா (வயது 33), மன்சூர் அலி (32), சையது அப்துல் ரகுமான்(20), இப்ராகிம் (35) என்று தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேரையும் இன்று காலை போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கல்லூரிக்கு சென்ற போது ஸ்ரீமதி செல்போனை கொண்டு சென்றார். இதனை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர்.
- ஸ்ரீமதியின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு உங்கள் மகள் கல்லூரிக்கு செல்போன் எடுத்து வருகிறார்.
தாம்பரம்:
குரோம்பேட்டை அருகே உள்ள பாரதிபுரம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மகள் ஸ்ரீமதி (வயது19).
குரோம்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது சொந்த ஊர் மயிலாடுதுறை ஆகும்.
கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீமதியின் பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். வீட்டில் ஸ்ரீமதி மட்டும் இருந்தார்.
இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற போது ஸ்ரீமதி செல்போனை கொண்டு சென்றார். இதனை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர். மேலும் ஸ்ரீமதியின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு உங்கள் மகள் கல்லூரிக்கு செல்போன் எடுத்து வருகிறார். கல்லூரிக்கு தொலைபேசி எடுத்து வரக்கூடாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீமதியை தொடர்பு கொண்ட பெற்றோர், கல்லூரிக்கு செல்போனை எடுத்து செல்ல வேண்டாம் என்று கூறி கடுமையாக கண்டித்து பேசி விட்டு இணைப்பை துண்டித்தனர்.
இதனால் ஸ்ரீமதி மனவேதனை அடைந்தார். இதற்கிடையே சிறிது நேரம் கழித்து ஸ்ரீமதியை பெற்றோர் தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்களிடம் தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது மாணவி ஸ்ரீமதி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீமதியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது என்பதும் தெரியவந்தது.
- செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இரவு 11½ மணியளவில் செங்கல்பட்டு அடுத்த பழவேலி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது அதே மார்க்கமாக பின்னால் வந்த வேன் ஒன்று அரசு பஸ்சின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. அதில் வேன் பலத்த சேதமடைந்து அதில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் சிங்காரத்தோப்பு வீடு, பொன் முத்துப்பிள்ளை தெருவை சேர்ந்த மாலதி (35), முருகன் (45), ஓட்டி கிராமம் வெல்லிங்டன் தெருவை சேர்ந்த கஸ்தூரி (வயது 49), கோபிநாத் (17), ஹரிஷ் (10), மதன்ராஜ் (26), இந்திரா (32) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உறவினர்கள் என்பதும், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது என்பதும் தெரியவந்தது.
காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி்க்கப்பட்டனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






