என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
  X

  திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2½ லட்சம். வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  திருக்கழுக்குன்றம்:

  செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புதுமேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் அஞ்சாலாட்சி (வயது 50). கணவரை இழந்த அஞ்சாலாட்சி தனது 3 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது 2 மகன்கள் வேலைக்கு சென்று விட்டனர். இனளய மகன் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார். அஞ்சாலட்சுமி அவரை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

  வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2½ லட்சம். வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×