search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டிகை அருகே அரசு பள்ளியில் சுகாதார சீர்கேட்டில் கல்வி கற்கும் மாணவ-மாணவிகள்
    X

    கண்டிகை அருகே அரசு பள்ளியில் சுகாதார சீர்கேட்டில் கல்வி கற்கும் மாணவ-மாணவிகள்

    • கண்டிகை அருகே அரசு பள்ளியில் சுகாதார சீர்கேட்டில் மாணவ-மாணவிகள் கல்வி கற்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மாட்டு சாணத்தின் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கண்டிகை:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், குமிழி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குமிழி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள மாடுகள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து சாணம் போடுகிறது. இதனால் தினந்தோறும் பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் மாட்டு சாணத்தை அகற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்லக்கூடிய மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மாட்டு சாணத்தின் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பகலில் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடமாகவும், இரவு நேரத்தில் மாட்டு தொழுவமாக பள்ளிக்கூடம் மாறி உள்ளது. எனவே உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் குமிழி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியை நேரில் ஆய்வு செய்து உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து நுழைவாயில் பகுதியில் இரும்பு கேட் அமைத்து தரும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் கலெக்டரின் உத்தரவை மீறி பல்வேறு சாலையில், பள்ளிக்கூடங்கள், ரேஷன் கடை, பயணிகள் நிழற்குடை போன்ற இடங்களில் சாணம் போட்டு அசுத்தம் செய்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்தி வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×