என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது
    • கொரோனா காலத்தில் வேலையிழந்து நாடு திரும்பியோர்

    அரியலூர்:

    தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பின்னர் நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

    உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    திட்ட தொகையில் பொதுப்பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும்.

    அரசு மானியமாக திட்ட தொகையில் 25சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் சரி செய்யப்படும். கடன் வழங்கப்பட்ட பின், ஆறு மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையினை வங்கியில் செலுத்த ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையினை திரும்ப செலுத்த வேண்டும்.

    கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூர் என்ற விலாசத்தில் நேரிலோ அல்லது 8925533925, 8925533926 என்ற கைப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • ஜெயங்கொண்டத்தில் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது
    • முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெயங்கொண்டம் தெற்கு பள்ளிகளில் கல்லூரி கனவு 2023 என்ற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என பள்ளிக்கு 11 பேர் கலந்து கொண்டார்கள்.பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வி, மீரா தேவி, பிளாரன்ஸ், இஸபெல்லா கருத்தாளர்களாக பயிற்சி வழங்கினர்.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜ பிரியன், உதவிதிட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எழில்வளவன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் செய்திருந்தார்.

    தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட பயிற்சியினை உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையேற்று தொடங்கி வைத்தார். கருத்தாளர்களாக அரசினர் கலைக்கல்லூரி விரிவுரையாளர் மேரி வயலட் கிறிஸ்டி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசைத்தம்பி, கார்த்திகேயன், அகிலா ஆகியோர் செயல்பட்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா நன்றி கூறினார்.

    • திருமானூர் ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பாக கிராமப்புறங்களில் மே தினத்தை முன்னிட்டு கட்சி கொடியும் தொழிலாளர்கள் கொடியும் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருமானூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கலியபெருமாள் முன்னிலையிலும் மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், திருமானூர், திருவேங்கனூர், சுள்ளங்குடி, விழுப்பணங் குறிச்சி, மற்றும் கோவிலூர் ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் ஜீவா நன்றி கூறினார். இதனை தொடர்ந்து மாலை நடைபெற்ற அரியலூர் பொதுக்கூட்டத்திற்கு ஏராளமான கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பேரணியாக சென்று கலந்து கொண்டனர்.

    • பெரிய நாகலூர் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தில் அய்யனார் கோயில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. தேர்திருவிழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி பூ போடுதல் விழாவும், 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் வகையறாக்கள் மண்டகப்படி வாரியாக சாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அய்யனார் கோயிலில் உள்ள விநாயகர், பூர்ண புஷ்கலாம்பிகா, அய்யனார், கருப்புசாமி, அரியமுத்து ஆண்டவர், செங்கமல ஆண்டவர் ஆகிய சுவாமிகளுக்கு பன்னீர், சந்தனம், பால், தயிர், இளநீர், திரவிய பொடி, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியின் போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து சுவாமிகள் தேரில் இருந்து தங்கு படையலும், 4ம் தேதி நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

    • ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியாக அனுப்பி வைத்தனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமம் காளியம்மன் கோயில் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் கபிலன் (வயது 23). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் தினக்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகள் ஆனந்தி (19) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறியது.

    ஆனந்தி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திடீரென்று கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர். மேலும் கபிலனின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஆனந்தி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கபிலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். நீண்ட நேரமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சேர்த்து வைக்க முயற்சித்தனர்.இருப்பினும் பேச்சுவார்த்தையில் கபிலனின் பெற்றோர் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உதவியுடன் வந்திருந்தவர்களிடம் அறிவுரை கூறி இருவரும் சேர்ந்து வாழ அறுவுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட கபிலன், ஆனந்தி இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காளியம்மன் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்துடன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.பின்னர் அவர்கள் இருவருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி அறிவுரை கூறி ஆனந்தியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களை இடையூறு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது போலீசார் தெரிவித்தனர்.

    • பதிவேற்றம் செய்த ஊழியர்களுக்கு பாராட்டு
    • அரியலூர் கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார்

    அரியலூர்,

    வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் கிராமப் பட்டாக்களை முழுமையாககணினியில் பதிவேற்றம் செய்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.ஆட்சியர் அலுவலககூட்டரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, செந்துறை வட்டம்அயன் தத்தனூர் கிராமத்தில் உள்ள 2,799 பட்டாக்களையும் முழுமையாக 100 சதவீதம் கணினியில் பதிவேற்றம்செய்த கிராம நிர்வாக அலுவலர் அ.ராஜமாணிக்கம், கிராம உதவியாளர் கோ.மீனா ஆகியோருக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி,  மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பட்டாக்களை முழுவதுமாககணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் (செந்துறை) பாக்கியம் விக்டோரியா உட்பட பலரும் உடனிருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • சுள்ளங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதே போல் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் தலைவர் சிவா(எ)பரமசிவம் தலைமை வகித்தார். ஓட்டக்கோவில் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவர் ரா.செங்கமலை தலைமை வகித்தார். தாமரைக்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். அந்தந்த கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



    • அரியலூர் புத்தகத் திருவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன
    • மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் 7-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாட்டு மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாலை பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்ற அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் அமலனுக்கு முதல் பரிசும், அதே பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் கோகுலுக்கு 2-ம் பரிசும், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி கமலிக்கு 3 ஆம் பரிசும் வழங்கினார்.

    அதே போல் நடனப் போட்டியில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி அகிலாவுக்கு முதல் பரிசும், நடனப் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீபுரந்தானைச் சேர்ந்த சிவரஞ்சனிக்கு முதல் பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் சண்முகவடிவேலு தீதும் நன்றும் எனும் தலைப்பிலும், மோகனசுந்தரம் சிரிக்க சிந்திக்க எனும் தலைப்பிலும் பேசினர்.

    • அரியலூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
    • இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலர் முருகேசன் தலைமை வகித்தார்.

    அரியலூர்:

    அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு மே தினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலர் முருகேசன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் கலந்து கொண்டு தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கலியமூர்த்தி, மாநில துணைச் செயலர் கருணாநிதி, சங்க காப்பாளர் அருண்ராஜா, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலர் சங்கர், அரசு சிமென்ட் ஆலை சங்கத் தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    • ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • கங்கைகொண்டான் வி மார்ட் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் கலந்து கொண்ட கங்கைகொண்டான் வி மார்ட் என்ற சூப்பர் மார்க்கெட் திறக்க ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கங்கைகொண்டான் வி மார்ட் செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ஸ்வேதா ராமதாஸ், துணைத் தலைவர் சேகர், துணை செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் மூலம் அறிமுகப்படுத்தப்படும் இந்த சூப்பர் மார்க்கெட் மூலமாக விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் வீட்டின் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் கங்கைகொண்டான் வி மார்ட் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்தால் விவசாயிகள் பயன்பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் கங்கைகொண்டான் வி மார்ட் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    • தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகராட்சி துப்பரவு தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது
    • நகராட்சி அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை சிலம்புச்செல்வி ஏற்றி வைத்தார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திருச்சி சாலையில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து அண்ணா சிலை, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை சிலம்புச்செல்வி ஏற்றி வைத்தார். முன்னதாக ஊர்வலத்தை துரை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் லட்சுமி, ஜெயா, சீதா, சபரியப்பன், மணிகண்டன், விமல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் சிவகுமார் நன்றி கூறினார்.


    • மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவகி (வயது 57) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×