என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
- ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- கங்கைகொண்டான் வி மார்ட் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் கலந்து கொண்ட கங்கைகொண்டான் வி மார்ட் என்ற சூப்பர் மார்க்கெட் திறக்க ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கங்கைகொண்டான் வி மார்ட் செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ஸ்வேதா ராமதாஸ், துணைத் தலைவர் சேகர், துணை செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் மூலம் அறிமுகப்படுத்தப்படும் இந்த சூப்பர் மார்க்கெட் மூலமாக விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் வீட்டின் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் கங்கைகொண்டான் வி மார்ட் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்தால் விவசாயிகள் பயன்பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் கங்கைகொண்டான் வி மார்ட் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.






