என் மலர்
அரியலூர்
செந்துறை பகுதிகளில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் பால் காவடி எடுத்தல், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில், மூன்றாவது ஆண்டாக பால்குட திருவிழா நடைபெற்றது.
பால்குடம் திருவிழாவை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி சுப்ரமணியர் செல்லியம்மன் கோவில் அருகிலுள்ள ஏரியிலிருந்து பால்குடம், காவடி எடுத்தனர்.
அவர்கள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க நடனமாடியபடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பல்வேறு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் செந்துறை பகுதியிலுள்ள உஞ்சினி, நல்லாம்பாளையம், செந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருகன் கோவில்களில் சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருமானூர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா மூன்றாவதுஅலை பரவி வரும் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் கபசுர குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடத்தில் மருத்துவ அலுவலர் செல்வமணி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள்.
சளி, இருமல், உடல வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கள் உடலை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
அடிக்கடி நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் பருகுங்கள் என்று பொது மக்களிடம் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வமணி தலைமை தாங்கினார்.
இதில் திருமானூர் சித்த மருத்துவ அலுவலர் சாகுல் ஹமீது கலந்துகொண்டு பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் சூரணம் வழங்கினார்.
முடிவில் மருந்தாளுநர் குணசேகரன் நன்றி கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தொற்று ஏற்பட்டுள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.எஸ்.சிவசங்கர். அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரான இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
அமைச்சர் ஆன பின்னர் மாநிலம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவருக்கு கடுமையான சளி காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது.
இது தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டபோது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் உடல்நிலை பாதிப்பு காரணமாக சோதனை மேற்கொண்டதில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூரில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

ஜெயங்கொண்டம் அருகே கடன் பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 41). அவருக்கு செந்தமிழ்ச்செல்வி (40) என்ற மனைவியும், சந்துரு என்ற மகனும், தருமி என்ற மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கருணாகரன் தனது வீட்டில்இருந்து சிறிது தூரம் தள்ளி முந்திரி தோப்பில் மா மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அந்த வழியாக கல்நடைகளை மேய்க்க சென்றவர்கள் பார்த்து அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த உறவினர்கள் சென்று கருணாகரனின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர் எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
காதல் பிரச்சினையில் அழகேசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பட்டு சாமி-கம்சலை தம்பதியரின் மகன் அழகேசன் (வயது 19). சிவில் என்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
அழகேசன் குழந்தையாக இருக்கும்போது தாய் கம்சலையும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பட்டு சாமியும் இறந்து விட்டனர். பெற்றோரை இழந்த அழகேசனை பெரியம்மா கவுசல்யா வளர்த்து வந்தார். அவரும் அழகேசனை தனது குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி படிக்க வைத்தார்.
இதற்கிடையே அழகேசன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. மேலும் காதல் பிரச்சினை தொடர்பாக சிலருடன் முன்விரோதமும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் முன்னூரான் காடுவெட்டியில் உள்ள ஆசனேரி ஏரியில் அழகேசன் நேற்று இரவு பிணமாக மிதந்தார். இது பற்றிய தகவல் அந்த ஊர் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் அங்கு ஏராளமானோர் திரண்டனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஏரியில் பிணமாக கிடந்த அழகேசனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காதல் பிரச்சினையில் அழகேசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அழகேசனும், அருகில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் என்பவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அழகேசனை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டதாகவும் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் கிராம மக்கள் ராகுலை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் போலீசார் முறையான விசாரணை நடத்திய பின்னரே வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறி ராகுலை விடுவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அழகேசனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கொலை வழக்காக பதிவு செய்து ராகுலை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதில் முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ஷாகிராபானு, சப்-இன்ஸ்பெக்டர் சுபா, உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் ராகுலை கைது செய்தால் மட்டுமே நாங்கள் மறியலை கைவிடுவோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் கைது செய்ய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் வேன்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.
தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் சந்தேகத்தின் பெயரில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், விசாரணை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை முடிந்து, முடிவு வந்த பின்னர் கொலையா? தற்கொலையா? என மருத்துவர் உறுதி செய்ய வேண்டும். கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளி கண்டிப்பாக போலீசாரால் தண்டிக்கப்படுவார் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலைமறியல் போராட்டத்தால் வெளியூர் செல்ல வேண்டிய ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் ஜெயங்கொண்டம், விருத்தாசலம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாயமான முதியவர் ஓடையில் இறந்து கிடந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 85). இவர் கடந்த 13&ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நாராயணசாமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மகிமைபுரம் கருவாட்டு ஓடையில் ஒருவர் தண்ணீரில், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடைப்பதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் வந்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, பிணமாக மிதந்தது மாயமான நாராயணசாமி என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் எதற்காக அங்கு வந்தார்? ஓடையில் வழுக்கி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
அரியலூர் :
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 முதல் காலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் பொது ஊரடங்கும் அமலில் உள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள், கோவில்களில் ஜனவரி 18 ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரியலூர் மாவட்டத்தில் முழு பொது ஊரடங்கு கடைபிடிக் கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காணும் பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
வழக்கமாக காணும் பொங்கல் பண்டிகையின் போது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோவில், திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், அரியலூர் செட்டி ஏரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று சிற்றுண்டி அருந்தி விளையாடி மகிழ்வர். சிறு குழந்தைகள் இந்நாளை மிகவும் குதூகலமாக கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் வந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனர்.
ஆண்டிமடம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயள்ள கோவில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மகன் புவியரசு (வயது 19), டிரைவர். இவரது நண்பர் அருள்.
பொங்கல் விழாவையொட்டி அருள் வீட்டில் இருந்த டிராக்டருக்கு பூஜை போடப்பட்டது. பின்ன அந்த டிராக்டரை புவியரசு ஓட்டினார். அருகில் அருள் அமர்ந்திருந்தார்.
சிறிது தூரம் சென்றபோது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி அருகே இருந்த பால் சொசைட்டிக்குள் புகுந்தது.
அப்போது அங்கு அங்கு பால் வாங்க வந்திருந்த 2 பெண்கள் மீதும் டிராக்டர் மோதியது. மேலும் டிராக்டரில் அமர்ந்து இருந்த அருளும் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் 2 பெண்களும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய புவியரசை விசாரணைக்காக அழைத்ததாக தெரிகிறது.
போலீசாரின் விசாரணைக்கு பயந்த புவியரசு, தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செந்துறை அடுத்த பொன்பரப்பி அரசு பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித்தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பெருமாள், முதுகலை ஆசிரியர்கள் முருகேசன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில், இப்பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவரும், திருப்பூர் நீதிமன்ற நீதிபதியுமான புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தங்கதுரை, காவல் உதவி ஆய்வாளர் சாந்தி, பட்டதாரி ஆசிரியர் அசோகன், வழக்குரைஞர் காரல் மார்கஸ், மருவத்தூர் மணிவண்ணன் உள்ளிட்ட 75&க்கும் மேற்பட்டோர் ஒருவருக்கொருவர் சந்தித்து, தங்களது பழைய சம்பவங்களை நினைவுக் கூர்ந்தனர்.
தொடர்ந்து அவர்கள், பள்ளியை தூய்மைப்படுத்தி, தலைமை ஆசிரியர் அலுவலக கட்டடத்துக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்தி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
முன்னதாக அவர்கள், கற்பித்த ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெருமையுடன் பேசப்பட்டது.
அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் ஊராட்சி பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் ஊராட்சி பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா இயக்கி வைத்தார்.
அக்கிராம மக்கள் பாதுகாப்பிற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொருத்தப்பட்ட 24 கண்காணிப்பு கேமராக்களை அவர் இயக்கி வைத்து, அனைத்து சம்பவங்களும் 24 மணி நேரமும் காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அக்கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து அதனை பராமரிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு, ஆண்டிமடம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி, காவல் துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஊராட்சித் தலைவர் மணிசேகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே 3 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் கொலையா? தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி (வயது 30), கூலித்தொழிலாளி. இவருக்கும் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்த சகுந்தலா (26) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 8 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. தற்போது சகுந்தலா மீண்டும் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதற்கிடையே மாமனார் செல்வராஜ் (55) அடிக்கடி மருமகள் சகுந்தலாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதை தனது கணவரிடம் கூறிய போது அவர் எதுவும் கண்டு கொள்ளவில்லை.
மேலும் கடந்த சில மாதங்களாக தந்தையும், மகனும் சேர்ந்து தினமும் குடித்து விட்டு வந்து சகுந்தலாவை கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சகுந்தலா தனது வீட்டில் சொன்னால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்று எண்ணி வாழ்ந்து வந்தார்.
நேற்று இரவு மீண்டும் சகுந்தலாவிடம் மாமனார் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்த சகுந்தலா இன்று காலை தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றிய தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர்.
மேலும் அங்கு வந்த சகுந்தலாவின் தம்பி சேகர், அக்காள் கணவரை அடிக்க பாய்ந்தார். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த கர்ப்பிணி சகுந்தலாவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சகுந்தலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருட்டு சம்பவங்களை தடுக்க வீடுகள் தோறும் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடாந்து நடந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆலோசனையின் பேரில், ஊராட்சி மன்ற தலைவர் மணிசேகர் தனது சொந்த செலவில், 44 சி.சி.டி.வி. கேமராக்களை, அப்பகுதியில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தலைவர் மணிசேகரன் முன்னிலையில், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான்அப்துல்லா கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:&
வாரியங்காவல் பகுதிகளில் பல இடங்களில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. கிராமம் தோறும் அனைத்து கிராமங்களிலும் கண்காணிக்க போலீசார் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஒவ்வொரு சி.சி.டி.வி. கேமராவும் ஒரு போலீசார் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
பொதுவாக வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் விலை உயர்ந்த பொருட்களை, நகைகளை வீட்டில் வைத்து விட்டு செல்லக் கூடாது. அவற்றை வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு வீடுகளிலும், கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மூலம் திருடர்களை எளிதில் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் திருட்டு சம்பவங்களை குறைக்கவும் முடியும் என்றார்.