என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.
    X
    பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

    அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    செந்துறை அடுத்த பொன்பரப்பி அரசு பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    அரியலூர் : 

    அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளித்தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பெருமாள், முதுகலை ஆசிரியர்கள் முருகேசன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    இந்நிகழ்ச்சியில், இப்பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவரும், திருப்பூர் நீதிமன்ற நீதிபதியுமான புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தங்கதுரை, காவல் உதவி ஆய்வாளர் சாந்தி, பட்டதாரி ஆசிரியர் அசோகன், வழக்குரைஞர் காரல் மார்கஸ், மருவத்தூர் மணிவண்ணன் உள்ளிட்ட 75&க்கும் மேற்பட்டோர் ஒருவருக்கொருவர் சந்தித்து, தங்களது பழைய சம்பவங்களை நினைவுக் கூர்ந்தனர். 

    தொடர்ந்து அவர்கள், பள்ளியை தூய்மைப்படுத்தி, தலைமை ஆசிரியர் அலுவலக கட்டடத்துக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்தி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

    முன்னதாக அவர்கள், கற்பித்த ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெருமையுடன் பேசப்பட்டது.

    Next Story
    ×