search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்த அரியலூர் செட்டி ஏரி பூங்காவை படத்தில் காணலாம்.
    X
    முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்த அரியலூர் செட்டி ஏரி பூங்காவை படத்தில் காணலாம்.

    களையிழந்து காணப்பட்ட காணும் பொங்கல்

    அரியலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
    அரியலூர் :

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி  வருவதை  தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 முதல் காலை 5 மணி வரையிலும்,  ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் பொது ஊரடங்கும் அமலில் உள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள், கோவில்களில் ஜனவரி 18 ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரியலூர் மாவட்டத்தில் முழு பொது ஊரடங்கு கடைபிடிக் கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி  வந்த  நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காணும் பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

    வழக்கமாக காணும் பொங்கல் பண்டிகையின் போது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோவில்,   திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், அரியலூர் செட்டி ஏரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு,  பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று  சிற்றுண்டி அருந்தி விளையாடி மகிழ்வர். சிறு குழந்தைகள் இந்நாளை மிகவும் குதூகலமாக கொண்டாடுவது வழக்கம்.

    ஆனால்  இந்த  ஆண்டு முழு  ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை  காணும் பொங்கல் வந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட  வெளியே செல்ல  முடியாமல்  வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனர்.
    Next Story
    ×