என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் முழுவதும் 332 சிறப்பு முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அரியலூர்:
தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்புசி முகாம் 19- ஆம் கட்டமாக நேற்று நடைபெற்றது.
இந்த மாவட்டத்தில் 39 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை, 2 அரசு மருத்துவமனை மற்றும் 300 இடங்களில் சிறப்பு முகாம்கள் என 332 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கிராமத்திலும் இம்மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் 3,600 நபர்கள் பணிகளை மேற்கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் மட்டும் 50 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணியாளர்கள், வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 3600 க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் 529946 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 265269. இரண்டாம் தவணை செலுத்தி கொண்டவர்கள் 264677 .
மேலும், அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 6,17,171 நபர்களினல் முதல் தவணை தடுப்பூசி 618926 (102.8 சதவீதம்) நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 448518 (74.5 சதவீதம்) நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் மாவட்டத்திலுள்ள 10944 மாற்றுத் திறனாளிகளில் 10494 (95 சதவீதம்) மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 9991 கர்ப்பிணி பெண்களில் 10181 (102%) கர்ப்பிணி பெண்களுக்கும் 6312 பாலூட்டும் தாய்மார்களில் 5982 (95 சதவீதம்) பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
15- முதல் 18- வயதிற்குட்ப ட்டோர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 32854 (94.4 சதவீதம்). முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10.01.2022 முதல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு இதுவரை 3290 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொணடுள்ளனர்.
மேற்கண்ட தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே விவசாயி தயாரித்துள்ள எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் எந்திரத்தை மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1 கிலோ வோல்ட் மின்சாரத்தை 2.72 மடங்காக எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் விவசாயி நரசிம்மன் எந்திரத்தை மின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்க ரிடம் தனது கண்டுபிடிப்பு மக்களுக்கும், அரசுக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் எனவும், தனது கண்டுபிடிப்பை அரசுக்கு தருவதற்கு தயாராக இருப்பதாகவும் விவசாயி நரசிம்மன் கூறியிருந்தார்.
விவசாயி நரசிம்மன் கூறுகையில், தான் வாழும் கண்டராதித்தம் கிராம பஞ்சாயத்தில் தெரு விளக்கு மற்றும் குடிநீர் விநியோகத்திற்காக மட்டும் மின் பயன்பாட்டிற்காக மின்சார வாரியத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ.1.5 லட்சம் கட்டணமாக செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் எனது கண்டுபிடிப்பை அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் 3&ல் இரண்டு மடங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவினை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதிகாரிகளிடம் தமிழக அரசின் நிதிச்சுமையை குறைக்க செலவை குறைக்கும் வகையில் புதிய திட்டங்களை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த வகையில் எனது எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் எந்திரத்தை நடைமுறைப்படுத்தும் போது பெருமளவில் நிதிச்சுமையை உறுதியாக குறைக்க இயலும் என உறுதிபட தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எனது கண்டுபிடிப்பை நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என தமிழக அரசை கேட் டுக்கொண்டார். தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருமானூர் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விவசாயி நரசிம்மன் கண்டுபிடித்த மின்சார தயாரிக்கும் எந்திரத்தை ஆய்வு செய்தார்.
அதிகாரிகள் ஆய்வின்போது திருமழபாடி உதவி மின்பொறியாளர் பிரபாகரன் உடன் இருந்தார்.
அரியலூரில் இன்று காலை நடந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
அரியலூர்:
அரியலூர் அதிகராபடையாட்சி தெருவில் வசிப்பவர் சேகர். இவர் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
இவரது மகன் கார்த்திக் கைலாசநாதர் கோவில் தெருவில் பழையஇரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். நேற்று இரவு 10மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் சுமார் 4 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அனைத்துள்ளனர். இத்தீவிபத்தினால் அருகில் உள்ள கடையில் இருந்த மேற்பட்ட கோழிகள் இறந்தன.
இந்தபழைய இரும்பு கடையில் பழைய இரும்பு சாமான்கள், பேப்பர், பீரோவில் இருந்த பணம், முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன.
சேதமதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்று தெரிய வருகிறது. இந்த தீவிபத்து குறித்து அரியலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உளுந்து பயிரில் விதை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு அழைப்பு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைக்கவிரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலர்கள் மற்றும் உதவி விதை அலுவலரை தொடர்புக் கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுஉதவி இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விவசாயிகளுக்கு தேவையான உளுந்து பயிரில் வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ஆகிய ரகங்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்புவைக் கப்பட்டு உள்ளது. விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகி, மானிய விலையில் விதை களை பெற்று விதைப் பண்ணை அமைக்கலாம்.
உளுந்து ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற எண்ணிக்கையில் பயிர்கள் பராமரிக்க வேண் டும். சாதாரணமாக பயறு வகைகளில், ஏக்கருக்கு 150 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நவீன தொழில்நுட்பங்களை கடைபிடித்தல், சான்று பெற்ற விதையைப் பயன் படுத்துதல்,
உயிர் உரம் மற்றும் பூஞ்சான விதைநேர்த்தி செய்தல், சரியான பயிர் எண்ணிக்கை பராமரித்தல், பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளித்தல் ஆகியவற்றை உரிய காலத்தில் கையாண்டால் ஏக்கருக்கு 450 முதல் 500 கிலோவரை மகசூல் பெறலாம். உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைத்து தரமானவிதை உற்பத்தி செய்து வேளாண் மைத்துறைக்கு வழங்கினால் உள்ளூர் சந்தை விலையுடன் ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் ஆகியவை சேர்த்து கூடுதல் லாபம் கிடைக்கும்.
எனவே, உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைக்க முன்வரும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் உதவி விதை அலுவலரை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.9 லட்சத்தில் மின்கல சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.9 லட்சத்தில் மின்கல சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.99,999 வீதம் ரூ.8,99, 991& மதிப்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மின்கலசக்கர நாற்காலிகளை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இணைப்புசக்கரம் பொறுத்தப்பட்ட பெட் ரோல் ஸ்கூட்டர், திருமண உதவித்தொகை, காதொலிக் கருவிகள், பிரெய்லி கருவிகள், உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறுநலத் திட்ட உதவிகளை பெற அரியலூர் மாவட்டஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவகத்தை அணுகி விண்ணப்பித்து, பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆண்டிமடம் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் வழியாக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்அடிப்படையில், ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், உதவிஆய்வாளர் நடேசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஆண்டிமடம் மெயின் சாலையில் தீவிர கண்காணிப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று, கவரப்பாளையம் என்ற இடத்தின் அருகே இடை மறித்து சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இவற்றை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டோலராம் (41), விருத்தாசலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கிரி (48) ஆகிய இருவரையும் ஆண்டிமடம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 83,850 மதிப்புள்ள புகையிலை பொருட்கள், மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆட்டோ முதலியவை பறிமுதல் செய்தனர்.
விவசாயி கண்டுபிடித்த மின்சார கருவியை ஆய்வு செய்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெருவில் வசிப்பவர் விவசாயி நரசிம்மன். 20ஆண்டுகளுக்கு முன்னர் எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் கருவியை வடிவமைத்தார். இதில் இருந்து ஒருயூனிட் மின்சாரத்தை 2.72 மடங்காக தயாரிக்க முடியும் என மாவட்ட நிர்வாகத்தினரிடம் பலமுறை தெரிவித்து வந்தார். இருப்பினும் இவரது கருவியை சோதித்து பார்க்கவோ அல்லது அங்கீகாரம் அளிக்கவோ அதிகாரிகள் முன்வரவில்லை.
இந்நிலையில் தமிழக அரசின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் பதிய திட்டங்கள் குறித்துயார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்றும், அதிகாரிகளின் பரிசீலனைக்கு பின்பு அது உகந்ததாக இருந்தால் அமலாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உற்சாகமடைந்த நரசிம்மன், மாவட்ட அமைச்சர் சிவசங்ரை சந்தித்து தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கம் அளித்ததோடு அதை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று மின்வாரியத்தை சேர்ந்த திருமானூர் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், திருமழப்பாடி உதவி மின்பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் கண்டராதித்தம் கிராமத்துக்கு சென்று விவசாயி கண்டு பிடித்த கருவியை ஆய்வு செய்தனர். பின்னர் தங்கள் அறிக்கை மற்றும் கருத்தினை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறினார்.
தனது கண்டுப்பிடிப்பு குறித்து விவசாயிநரசிம்மன் கூறுகையில் எனது கண்டு பிடிப்பு மூலமாக மின்உற்பத்தி செய்தால் உற்பத்தி செலவு மூன்றில் ஒரு பங்காக குறையும் இதன் மூலமாக மின் கட்டணமும் குறையும் உதாரணமாக, கண்டராதித்தம் பஞ்சாயத்தில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் வினியோகத்துக்காக பயன் படுத்தும் மின்சாரத்துக்காக 2மாதத்துக்கு ஒருமுறை மின்வாரியத்துக்கு ரூ.1.5 லட்சம் கட்டணமாக செலுத்தப்படுகிறது. எனது கண்டுபிடிப்பை அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ரூ.50ஆயிரம் தான் ஆகும் என்றார்.
தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது
அரியலூர்:
திருமானூர் அருகேயுள்ள வடுகர்பாளையத்தை சேர்ந்த மாணவியான இவர், தஞ்சை மாவட்டம், திருக்கட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல்பட்டியிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
இவரை பள்ளி விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறி விஷம் குடித்தார். பின்னர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி கடந்த 19-ந் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, சிகிச்சையின் போது மாணவி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்து, வார்டன் சகாய மேரியை (வயது 62) கைது செய்தனர். இதற்கிடையே தன்னை பள்ளி நிர்வாகத்தினர் மதம் மாற்ற முயற்சித்தததக அந்த மாணவி தெரிவிப்பது போல, அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து,பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்பினர் 3&வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தஞ்சை எஸ்.பி.யிடம் மாணவியின் தந்தை அளித்த புகாரில், எ னது மகளை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அவரை திட்டி, அதிகமாக வேலை வாங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், உடலை வாங்க அவரது பெற்றோர் வரவில்லை. இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறியபோது, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்து மருத்துவக் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவர் பிரங்க் கனூங்கோ,தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த 20-ந் தேதி எங்களுக்கு வந்த புகார் ஒன்றில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ- மாணவியரை சட்டவிரோதமாக மத மாற்றத்தில் ஈடுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மத மாற்றத்தை ஏற்க மறுக்கும் மாணவ& மாணவியரை பள்ளி நிர்வாகம் உளவியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் எங்களுடைய கவநத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்பள்ளியில் பயிலும் அரியலூர் மாணவி ஒருவர் மதம் மாற மறுப்பு தெரிவித்ததால், அவரை வீட்டிற்கு அனுப்பாமல் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தும், பாத்திரங்களை கழுவ சொல்லியும் தண்டனை வழங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அம்மாணவி தற்கொலை செய்து கொண்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அப்பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத் குழந்தைகளின் உரிமைகளை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளிடம் புகாரை பெற்று அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கையாக ஆணையத்திற்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
அரியலூர் :
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது
மது அருந்துவதாலும் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரியலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விதமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இணையவழி மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள், சமூக கொண்டாட்டங்களும், மது ஏற்படுத்தும் விளைவுகளும் என்ற தலைப்பின்கீழ் ஓவியப்போட்டிகள், கவிதைப்போட்டிகள், விழிப்புணர்வு வாசக (ஸ்லோகன்) போட்டிகள் மற்றும் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்தினரால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அரியலூர் மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் முலம் தங்களது படைப்புகளை 26.01.22 முதல் 15.02. 22 முடிய பதிவேற்றம் செய்யலாம்.
போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் 20 சென்ட் அளவில் ஆண்டவர் திருக்கோயில் கட்டப்பட்டு 5 தலைமுறையாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்றாண்டு காலமாக கிராம மக்களிடையே வரிவசூல் செய்து கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் கோவிலுக்கு வண்ணம் பூசப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு அதற்காக புரோகிதர்கள் கொண்டு யாகம் நடத்தும் பணியினை கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாக முக்கியஸ்தர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக நேற்று நடைபெற இருந்த கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கடாராங்கொண்டான் கிராம மக்கள் திருச்சி&சிதம்பரம் தேசிய நெடுங்சாலையில் ஆமணக்கந்தோண்டி பஸ் நிலையத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு (பயிற்சி) சங்கர் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ரவி சக்கரவர்த்தி, ஷாகிராபானு உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடாரங்கொண்டான் பொதுமக்கள் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் உடையார் பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு அளிக்கும்படி அறிவுறுத்தினார்கள். மேலும் உரி விசாரணை செய்து ஆர்.டி.ஓ. நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினர். இதையடுத்து கிராமமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
கருப்பிலாக் கட்டளை ஊராட்சி வண்ணாரப்பேட்டையில், தமிழ்நாடு கிராம ஊரக வளர்ச்சி, கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.45.40 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை பலப்படுத்தும் பணி. அருங்காலில் காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் கிணறு கட்டுதல் பணி. 15&வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, சுவட்ச் பாரத் மிஷன் திட்டத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுமானப் பணி.
கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.23,000 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு, ரூ.13,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை மழைநீர் சேமிப்பு அமைப்பு, கருப்பிலாக்கட்டளையில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, அன்புசெல்வன், உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, உதவிப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
அரியலூர்:
தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் (ஒப்புவித்தல்) செய்யும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறள் பரிசு ரூ.10,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச் சித்துறையின் சார்பில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 மாணவர்க ளுக்கு குறள் பரிசுத் தொகை தலா ரூ.10,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதன்படி, 1330 குறட்பாக்களையும் முற்றோதல் (ஒப்புவித்தல்) செய்து குறள் பரிசு பெற்ற விழுப்பனங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் கொ.பால முருகன், 11 ஆம் வகுப்பு பயி லும் மாணவிகள் லிங்கமாயா மற்றும் நந்தினி, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சி.சாதனா, சமீரா மற்றும் அபிஷா,
பெரியாக்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுடர்விழி, க.பொய்யூர் சாத்தமங்கலம் அகில பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் கபிலேஷ், தத்தனூர் மீனாட்சி இராமசாமி மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் பூங்குன்றன் என மேற்கண்ட 9 மாணவ, மாண விகளுக்கு குறள் பரிசுத் தொகை தலா ரூ.10,000, பாராட்டு சான்றிதழ் மற்றும் அரசாணை நகல் ஆகியவை வழங்கி, பரிசுப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.






