என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறிமுதல் செய்த ஆட்டோவை படத்தில் காணலாம்.
  X
  பறிமுதல் செய்த ஆட்டோவை படத்தில் காணலாம்.

  ரூ. 1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிமடம் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  அரியலூர்:

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் வழியாக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை  பொருட்களை கடத்தி செல்வதாக ஆண்டிமடம்  காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்அடிப்படையில், ஆண்டிமடம் காவல்  ஆய்வாளர் குணசேகரன்  தலைமையில், உதவிஆய்வாளர் நடேசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஆண்டிமடம் மெயின் சாலையில் தீவிர கண்காணிப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று, கவரப்பாளையம் என்ற இடத்தின் அருகே இடை மறித்து சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள்  இருப்பது தெரியவந்தது.

   இவற்றை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டோலராம் (41), விருத்தாசலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்  கிரி (48) ஆகிய இருவரையும் ஆண்டிமடம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 83,850 மதிப்புள்ள  புகையிலை பொருட்கள், மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆட்டோ முதலியவை பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×