search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்

    தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது
    அரியலூர்:

    திருமானூர் அருகேயுள்ள வடுகர்பாளையத்தை சேர்ந்த மாணவியான இவர், தஞ்சை மாவட்டம், திருக்கட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல்பட்டியிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவரை பள்ளி விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறி விஷம் குடித்தார். பின்னர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி கடந்த 19-ந் தேதி உயிரிழந்தார்.

    இது தொடர்பாக, சிகிச்சையின் போது மாணவி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்து, வார்டன் சகாய மேரியை (வயது 62) கைது செய்தனர். இதற்கிடையே தன்னை பள்ளி நிர்வாகத்தினர் மதம் மாற்ற முயற்சித்தததக அந்த மாணவி தெரிவிப்பது போல, அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து,பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்பினர் 3&வது நாளாக  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே தஞ்சை எஸ்.பி.யிடம் மாணவியின் தந்தை அளித்த புகாரில், எ னது மகளை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அவரை திட்டி, அதிகமாக வேலை வாங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    மேலும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், உடலை வாங்க அவரது பெற்றோர் வரவில்லை. இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறியபோது, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்து மருத்துவக் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவர் பிரங்க் கனூங்கோ,தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது: கடந்த 20-ந் தேதி எங்களுக்கு வந்த புகார் ஒன்றில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ- மாணவியரை சட்டவிரோதமாக மத மாற்றத்தில் ஈடுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மத மாற்றத்தை ஏற்க மறுக்கும் மாணவ& மாணவியரை பள்ளி நிர்வாகம் உளவியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் எங்களுடைய கவநத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    அப்பள்ளியில் பயிலும் அரியலூர் மாணவி ஒருவர்  மதம் மாற மறுப்பு தெரிவித்ததால், அவரை வீட்டிற்கு அனுப்பாமல் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தும், பாத்திரங்களை கழுவ சொல்லியும் தண்டனை வழங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அம்மாணவி தற்கொலை செய்து கொண்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அப்பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத் குழந்தைகளின் உரிமைகளை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளிடம் புகாரை பெற்று அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கையாக ஆணையத்திற்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×