search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரியலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    அரியலூர் மாவட்டம் முழுவதும் 332 சிறப்பு முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    அரியலூர்:

    தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்புசி முகாம் 19- ஆம் கட்டமாக நேற்று நடைபெற்றது. 

    இந்த மாவட்டத்தில் 39 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை, 2 அரசு மருத்துவமனை மற்றும் 300 இடங்களில் சிறப்பு முகாம்கள் என 332 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

    ஒவ்வொரு கிராமத்திலும் இம்மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் 3,600 நபர்கள் பணிகளை மேற்கொண்டனர். 

    அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் மட்டும் 50 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணியாளர்கள், வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை பணியாளர்கள்  உள்ளிட்ட சுமார் 3600 க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் 529946 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 265269. இரண்டாம் தவணை செலுத்தி கொண்டவர்கள் 264677 .

    மேலும், அரியலூர்  மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 6,17,171 நபர்களினல் முதல் தவணை தடுப்பூசி 618926 (102.8 சதவீதம்)  நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 448518 (74.5 சதவீதம்) நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 

    இதில் மாவட்டத்திலுள்ள 10944 மாற்றுத் திறனாளிகளில் 10494 (95 சதவீதம்) மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 9991 கர்ப்பிணி பெண்களில் 10181 (102%) கர்ப்பிணி பெண்களுக்கும் 6312 பாலூட்டும் தாய்மார்களில் 5982 (95 சதவீதம்) பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    15- முதல் 18- வயதிற்குட்ப ட்டோர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 32854 (94.4 சதவீதம்). முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10.01.2022 முதல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு இதுவரை 3290 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொணடுள்ளனர்.

    மேற்கண்ட தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×