search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    விவசாயி கண்டுபிடித்த மின்சார கருவி ஆய்வு

    விவசாயி கண்டுபிடித்த மின்சார கருவியை ஆய்வு செய்தனர்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெருவில் வசிப்பவர் விவசாயி நரசிம்மன். 20ஆண்டுகளுக்கு முன்னர் எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் கருவியை வடிவமைத்தார். இதில் இருந்து ஒருயூனிட் மின்சாரத்தை 2.72 மடங்காக தயாரிக்க முடியும் என மாவட்ட நிர்வாகத்தினரிடம் பலமுறை தெரிவித்து வந்தார். இருப்பினும் இவரது கருவியை சோதித்து பார்க்கவோ அல்லது அங்கீகாரம் அளிக்கவோ அதிகாரிகள் முன்வரவில்லை.

    இந்நிலையில் தமிழக அரசின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் பதிய திட்டங்கள் குறித்துயார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்றும், அதிகாரிகளின் பரிசீலனைக்கு பின்பு அது உகந்ததாக இருந்தால் அமலாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

    இதையடுத்து உற்சாகமடைந்த நரசிம்மன், மாவட்ட அமைச்சர் சிவசங்ரை சந்தித்து தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கம் அளித்ததோடு அதை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    அமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று மின்வாரியத்தை சேர்ந்த திருமானூர் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், திருமழப்பாடி உதவி மின்பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் கண்டராதித்தம் கிராமத்துக்கு சென்று விவசாயி கண்டு பிடித்த கருவியை ஆய்வு செய்தனர். பின்னர் தங்கள் அறிக்கை மற்றும் கருத்தினை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறினார்.

    தனது கண்டுப்பிடிப்பு குறித்து விவசாயிநரசிம்மன் கூறுகையில் எனது கண்டு பிடிப்பு மூலமாக மின்உற்பத்தி செய்தால் உற்பத்தி செலவு மூன்றில் ஒரு பங்காக குறையும் இதன் மூலமாக மின் கட்டணமும் குறையும் உதாரணமாக, கண்டராதித்தம் பஞ்சாயத்தில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் வினியோகத்துக்காக பயன் படுத்தும் மின்சாரத்துக்காக 2மாதத்துக்கு ஒருமுறை மின்வாரியத்துக்கு ரூ.1.5 லட்சம் கட்டணமாக செலுத்தப்படுகிறது. எனது கண்டுபிடிப்பை அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ரூ.50ஆயிரம் தான் ஆகும் என்றார்.

    Next Story
    ×