என் மலர்
அரியலூர்
கேட் திறப்பதில் இருந்து மோட்டார் போட்டு அனைவரும் சாப்பிட்டபின்னர் மோட்டாரை அணைப்பது என விடுதி வார்டன் எல்லா வேலையையும் செய்ய சொன்னதாக லாவண்யா கூறி உள்ளார்.
அரியலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா (வயது 17), கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், மாணவி லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட மேலும் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாணவி லாவண்யா கூறியதாவது:-
என் பெயர் லாவண்யா. என் அப்பா பெயர் முருகானந்தம், அம்மா பெயர் சரண்யா. 12-ம் வகுப்பு படிக்கிறேன். எப்போழுதுமே நான் தான் முதல் ரேங்க் எடுப்பேன். ஆனால், இந்த ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் தாமதமாகத் தான் சென்றேன்.
எப்பொழுதுமே என்னை அங்குள்ள பணியாளர் (சிஸ்டர்) கணக்கு வழக்கு பார்க்க கூறுவார்கள். நான் தாமதமாக தானே வந்தேன், எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் பிறகு எழுதித்தருகிறேன் என சிஸ்டரிடம் கூறுவேன். ஆனால், அவர் அதை கேட்கமாட்டார். பரவாயில்லை நீ எழுதி கொடுத்துவிட்டு உன் வேலையை பார் என்று, அப்படி இப்படி எதாவது கூறி என்னை எழுதவைத்துக்கொண்டே இருப்பார்கள்.
நான் சரியாக எழுதினாலும், தவறு தவறு என்று கூறி ஒரு கணக்குக்கே ஒருமணி நேரம் அமரவைத்துவிடுவார்கள். இதனால், நான் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. இதனால், நான் குறைவான மதிப்பெண் எடுத்துக்கொண்டே இருந்தேன். இப்படியே போய்க்கொண்டிருந்தால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷத்தை குடித்துவிட்டேன்.
அந்த சிஸ்டர் பெயர் சகாய மேரி. பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் ஆரோக்கியமேரி. எல்லா வேலையையும் என்னையே செய்ய சொல்வார்கள்.
கேட் திறப்பதில் இருந்து மோட்டார் போட்டு அனைவரும் சாப்பிட்டபின்னர் மோட்டாரை அணைப்பது என விடுதி வார்டன் எல்லா வேலையையும் என்னைத்தான் செய்ய சொல்வார். இது குறித்து வார்டனிடம் கேட்டால் நீதான் பொறுப்பாக இருக்கிறாய், என கூறுவார்.
என்னை பள்ளியில் பொட்டுவைக்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது என யாரும் சொல்லவில்லை. பொங்கலுக்கு ஊருக்கு போகவேண்டும் என கேட்டதற்கு, நீ படிக்க வேண்டும் நீ இங்கேயே இரு என்று கூறி என்னை விடுதியிலேயே இருக்கவைத்துவிட்டனர். பொங்கலுக்கு எனக்கு உடம்பு சரியில்லை என சொல்லி அனுப்பவில்லை. விஷம் குடித்தது குறித்து விடுதி வார்டனுக்கு தெரியாது.
இவ்வாறு லாவண்யா கூறுகிறார். இந்த புதிய வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.
அரியலூர்:
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2021&-22 ஆம் நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து, மத்திய அரசின் இணையத்தளம் மூலம் வழிமுறைகளின் படி மானியம் பெற்று வருகின்றனர்.
இதன்படி அதிக பட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5 லட்சம்,நெல் நாற்றுநடவு செய்யும் எந்திரங்களுக்கு ரூ.5 லட்சம், வைக்கோல் கட்டும் எந்திரங்களுக்கு ரூ.9 லட்சம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் எந்திரங்களுக்கு ரூ.2.50 லட்சம், சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை போன்றவற்றிற்கு ரூ.50 ஆயிரம், ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகளுக்கு ரூ.50 ஆயிரமும்.
விதை விதைப்புக் கருவிகளுக்கு ரூ.78 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ.63 ஆயிரம், பவர் டில்லருக்கு ரூ.85 ஆயிரம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 லட்சம், தென்னை ஓலைதுகளாக்கும் கருவிக்கு ரூ.63 ஆயிரம், வைக்கோல் கூட்டும் கருவிக்கு ரூ.1.50 லட்சம், புதர் அகற்றும் கருவிகளுக்கு ரூ.40 ஆயிரமும்.
தட்டைவெட்டும் கருவிகளுக்கு ரூ.28 ஆயிரம், நிலக்கடலை தோண்டும் கருவிகளுக்கு ரூ.75 ஆயிரம், கரும்புசோகை துகளாக்கும் கருவிகளுக்கு ரூ.1.25 லட்சம் அல்லது அவற்றின் மொத்தவிலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகைமானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு நடப்பு 2021-&22 ஆம் ஆண்டில் வழங்கப்படுகிறது.
இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோஅத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்திட வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணைய தளத்தி-ல் இணைக்கப்படும்.
விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வுசெய்யலாம்.
விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சுவார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும். குறிப்பிட்டவேளாண் எந்திரங்கள், கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர் விவசாயிகள் அதே எந்திரம் அல்லது கருவியை தேர்வுசெய்தால், அவர் 1, 2, 3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவர்.
ஏற்கனவே 2020-&21 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மூதுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, இவ்வாண்டிற்கு விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானியவிலையில் விவசாயிகள் வாங்கிட இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கிட இயலும்.
உதவி செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் எந்திரங்கள்மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர்.
இவ்வாறு கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக திருமானூர் சைல்டு லைன் அணி உறுப்பினர் ஒரு அறிக்கையை தயார் செய்து அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அறிக்கையை கொடுக்க வந்துள்ளார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுக பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து முருகானந்தம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவிக்கு பிறந்த மகள் லாவண்யாவை தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைகேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் முருகானந்தம் சேர்த்தார். இந்தநிலையில் அவர் கடந்த 15-ந்தேதி இறந்தார்.
தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் கைது செய்யப்பட்டார். மேலும் மதமாற்ற பிரச்சினையால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் அவர் சித்தி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே இவருடைய சித்தி கொடுமை என 1098 சைல்டு லைனுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர்கள் மாணவி லாவண்யாவின் வீட்டுக்கு சென்று கவுன்சிலிங் வழங்கியுள்ளனர். அப்போது மாணவி, சித்தி தன்னை கொடுமைப்படுத்தவில்லை என கூறியதாக தெரிகிறது.
மேலும் தொடர்ந்து நான்கு மாதங்கள் 4 முறை சைல்டு லைன் அமைப்பின் உறுப்பினர் வீட்டுக்கே சென்று விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது மாணவி லாவண்யா, மீண்டும் மீண்டும் சித்தி தன்னை அடிக்கவில்லை என கூறியதாகவும், மேலும் அப்பொழுதும் கவுன்சிலிங் வழங்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக திருமானூர் சைல்டு லைன் அணி உறுப்பினர் ஒரு அறிக்கையை தயார் செய்து அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மூடி சீல் வைக்கப்பட்ட அறிக்கையை கொடுக்க வந்துள்ளார்.
அப்போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, இது குறித்த விசாரணை தஞ்சாவூரில் நடப்பதால் தஞ்சாவூர் டி.எஸ்.பி.யிடம் அந்த அறிக்கையை கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அரியலூரில் சில பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அரியலூரில் சில பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது,
கூத்தூர் தொகுப்பு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இப்பகுதியிலிருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய பகுதிகளில் நாளை (28&ந் தேதி) காலை 9 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
அரியலூர்:
இந்தியத் திருநாட்டின் 73&-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குடியரசுதின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். உலக சமாதானத்தை விரும்பும் பொருட்டு வென்புறாக்களை பறக்கவிட்டார். மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர், காவல் துறை, ஊரகவளர்ச்சித்துறை, தீயணைப்புதுறை, வருவாய் துறை, மருத்துவத் துறையில் உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் சிறப்பாக பனியாற் றிய சுமார் 300 பேர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, 23 பேர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது,
மாற்றுதிறனாளிகளுக்கு சமூசநலத்துறை சார்பில் 12 பேர்களுக்கு 1.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சந்திரசேகர், விவசாய சங்க பிரதிநிதிகள் ராஜேந்திரன், செங்கமுத்து, அம்பேத்கார் வழியன், சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னூலாப்தீன்,
மாவட்ட திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், ஊராட்சி உதவி இயக்குனர் சந்தானம், கலெக்டர் நேர்முக உதவியாளர் பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலெட்சுமி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமார்ராஜா, அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், வேளாண்மைத்துறை பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்புத் துறை சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன்,
ஆர்.டி.ஓ. ஏழுமலை, அமர்நாத், தாசில்தார் ராஜமூர்த்தி, குமரய்யா, முத்துகிருஷ்ணன், ஆனந்தன், நகராட்சி கமிஷ்னர் சித்ரா சோனியா, சுபாஷினி, யூனியன் கமிஷ்னர் அரியலூர் அன்புசெல்வன், அகிலா, செந்துறை அமிர்தலிங்கம், சந்தா னம், திருமானூர் செந்தில் குமார், ஜாகிர்உசேன், ஜெயங் கொண்டம் பிரபாகரன், குருநாதன், தா.பழுர் ஜெயராஜ், குணசேகரன், ஆண்டிமடம் சிவாஜி, அருளப்பன், காவல் துறை அதிகாரிகள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், திருமேனி, டிஎஸ்பி மதன், கலைகதிரவன், ராஜன், மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு மத்திய மாநில அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் ஊரடங்கு அறிவுரைகளின் சமூக இடை வெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கிருமி நாசினியை பயன்படுத்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாகல்குழி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜ்குமார் (32), கூலித் தொழிலாளி. திருப்பூரில் வேலை செய்து வரும் இவருக்கும் கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த டிப்ளமோ நர்சிங் படித்துள்ள தேவி (23) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் ராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. மேலும் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த தேவி சாண பவுடரைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்ய தேவியின் உறவினர்கள் சம்மதிக்காமல், தேவியின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் ராஜ்குமார் மற்றும் மாமியார் ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ரவிசக்கரவர்த்தி, சப்& இன்ஸ் பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சுபா உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது, மேலும் பிரேத பரிசோதனை முடிவு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது தேவியின் கணவர் ராஜ்குமாரிடம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமணமான நான்கு வருடங்களில் பெண் இறந்து போன சம்ப வத்தால் உடையார்பாளை யம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத், தேவியின் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து தேவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடலை அடக்கம் செய்ய கீழமாளிகை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.
காலபைரவர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள்.
இங்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு ஆண்டு தோறும் தைமாத தேய்பிறை அஷ்டமியில் பெண்கள் முளைப்பாரி பூஜை எடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி உலக நன்மை வேண்டியும், தற்போது உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் தற்பொழுது ஏராளமானோர் மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாலும் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை முன்வைத்து முளைப்பாரி பூஜையை நடத்தினர்.
முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, முடிவில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் கோவிலை சென்றடைந்தனர். பக்தி சிந்தனையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மருதாயி (வயது 80). இவர் சம்பவத்தன்று மாலை காக்காபாளையத்திலிருந்து காசாங்கோட்டை அருகே உள்ள தனது நிலத்தின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்து, மருதாயின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மருதாயி மகன் கொடுத்த புகாரின் பேரில், உடையார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, காஞ்சிலிக் கோட்டை தெருவை சேர்ந்த முருகன் (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேசிய வாக்காளர் தினத்தில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் உதயமான ஜனவரி 25 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தின மாக கொண்டாடிடவும், 18 வயது நிரம்பிய தகுதியான புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கும், தேர்தல் நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையிலும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, அரியலூர் மாவட்டத்தில், 12- ஆவது தேசிய வாக்காளர் தினம் 25.01.2022 அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 12- ஆவது தேசிய வாக்காளர் தினத்தை அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்க தேர்தல்களை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு, 25.01.2022 அன்று காலை 11.30 மணியளவில் வாக்கா ளர் உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அலுவலர்களை கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த உறுதிமொழி நிகழ்வில் வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளை “பாரத் வி.சி.” மூலம் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது குறித்த முழு விபரங்களை மாவட்ட நிர்வாக இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். அனைத்து நிகழ்வுகளும் மாவட்ட கலெக்டரின் அதிகாரப்பூர்வ முக நூல் பேஸ்புக் லைவ் மூலம் ஒளிபரப்பப்படும் என்றும், நிகழ்வு நாளில் அதற்கான இணைப்பு பகிரப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ். இவர் புதுப்பாளையம் கிராமத்தில் கூலி வேலைக்காக சென்ற போது, அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்து தனது அம்மா செல்வியிடம் சிறுமி கூறியதையடுத்து, உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அடைக்கலராஜிக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் சிறுமி பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் கார்த்திகேயன் சிறுமியிடம் விசாரணை செய்தார். இதையடுத்து குழந்தை திருமணம் செய்ததாக அடைக்கலராஜ் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அடைக்கலராஜின் தந்தை ராமசாமி, சிறுமியின் அம்மா செல்வி ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அடைக்கலராஜ் தந்தை ராமசாமி மற்றும் சிறுமியின் அம்மா செல்வி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தை பெற்றெடுத்த சில தினங்களில் பெண் உயிரிழந்ததால், உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர், முத்து விநாயகர் குப்பம், பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 39/ இவர் சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுதா (31). இவர்களுக்கு 5 வயதில் ரித்தீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இதனிடையே சுதா இரண்டாவதாக கருவுற்றிருந்தார்.
அவர் 2-வது பிரசவத்திற்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 19-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். சுதாவிற்கு 20&ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. மேலும், குழந்தை பெற்றெடுத்த அன்றே கணவர் ராஜாவின் அனுமதியுடன் சுதாவிற்கு கருத்தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தாயும் குழந்தையும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று திடீரென சுதாவிற்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்டரை அழைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு போராடிய சுதா, டாக்டர்கள் வராததால், பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், சுதாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை தரப்பில் உரிய காரணம் தெரிவிக்கவில்லை என்றால் சுதாவின் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் போராடினர்.
சுதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், டாக்டர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் உயிரிழந்த சுதாவின் உடலை பெற்று அடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
குழந்தை பெற்றெடுத்த 3 நாட்களில் பெண் உயிரி£ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 29ம் தேதி ஏலம் விடப்படுவதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்
அரியலூர் :
அரியலூர் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் வருகிற 29 ம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான்அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 29 ம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற 28ம் தேதி மாலை 5 மணி வரை அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ஜனவரி 29ம் தேதி அன்று காலை 9 மணிக்கு ரூ.1,000 முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி இருசக்கர வாகனங்களுக்கு 12சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18சதவீதம்) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.