search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய காட்சி
    X
    கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய காட்சி

    அரியலூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

    அரியலூரில் குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

    அரியலூர்:

    இந்தியத் திருநாட்டின் 73&-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று  நடைபெற்ற  குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குடியரசுதின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். உலக சமாதானத்தை விரும்பும் பொருட்டு  வென்புறாக்களை பறக்கவிட்டார். மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர், காவல் துறை, ஊரகவளர்ச்சித்துறை, தீயணைப்புதுறை, வருவாய் துறை, மருத்துவத் துறையில் உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் சிறப்பாக பனியாற் றிய சுமார் 300 பேர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, 23 பேர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது,

    மாற்றுதிறனாளிகளுக்கு சமூசநலத்துறை  சார்பில் 12 பேர்களுக்கு 1.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சந்திரசேகர், விவசாய சங்க பிரதிநிதிகள் ராஜேந்திரன், செங்கமுத்து, அம்பேத்கார் வழியன், சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னூலாப்தீன்,

    மாவட்ட திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், ஊராட்சி உதவி இயக்குனர் சந்தானம், கலெக்டர் நேர்முக உதவியாளர் பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலெட்சுமி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமார்ராஜா, அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், வேளாண்மைத்துறை பழனிசாமி,  செய்தி மக்கள் தொடர்புத் துறை சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன்,

    ஆர்.டி.ஓ. ஏழுமலை, அமர்நாத், தாசில்தார் ராஜமூர்த்தி, குமரய்யா, முத்துகிருஷ்ணன், ஆனந்தன், நகராட்சி கமிஷ்னர் சித்ரா சோனியா, சுபாஷினி, யூனியன் கமிஷ்னர் அரியலூர் அன்புசெல்வன், அகிலா, செந்துறை அமிர்தலிங்கம், சந்தா னம், திருமானூர் செந்தில் குமார், ஜாகிர்உசேன், ஜெயங் கொண்டம் பிரபாகரன், குருநாதன், தா.பழுர் ஜெயராஜ், குணசேகரன், ஆண்டிமடம் சிவாஜி, அருளப்பன், காவல் துறை அதிகாரிகள், கூடுதல் கண்காணிப்பாளர்கள்  அசோக்குமார், திருமேனி, டிஎஸ்பி மதன், கலைகதிரவன், ராஜன், மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குடியரசு தினவிழாவை முன்னிட்டு மத்திய மாநில அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் ஊரடங்கு அறிவுரைகளின் சமூக இடை வெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கிருமி நாசினியை பயன்படுத்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×