search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி லாவண்யா படித்த பள்ளி
    X
    மாணவி லாவண்யா படித்த பள்ளி

    தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? மாணவி லாவண்யாவின் புதிய வீடியோ

    கேட் திறப்பதில் இருந்து மோட்டார் போட்டு அனைவரும் சாப்பிட்டபின்னர் மோட்டாரை அணைப்பது என விடுதி வார்டன் எல்லா வேலையையும் செய்ய சொன்னதாக லாவண்யா கூறி உள்ளார்.
    அரியலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா (வயது 17), கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

    இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.

    பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை பேச்சு

    இந்நிலையில், மாணவி லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட மேலும் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாணவி லாவண்யா கூறியதாவது:-   

    என் பெயர் லாவண்யா. என் அப்பா பெயர் முருகானந்தம், அம்மா பெயர் சரண்யா. 12-ம் வகுப்பு படிக்கிறேன். எப்போழுதுமே நான் தான் முதல் ரேங்க் எடுப்பேன். ஆனால், இந்த ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் தாமதமாகத் தான் சென்றேன்.

    எப்பொழுதுமே என்னை அங்குள்ள பணியாளர் (சிஸ்டர்) கணக்கு வழக்கு பார்க்க கூறுவார்கள். நான் தாமதமாக தானே வந்தேன், எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் பிறகு எழுதித்தருகிறேன் என சிஸ்டரிடம் கூறுவேன். ஆனால், அவர் அதை கேட்கமாட்டார். பரவாயில்லை நீ எழுதி கொடுத்துவிட்டு உன் வேலையை பார் என்று, அப்படி இப்படி எதாவது கூறி என்னை எழுதவைத்துக்கொண்டே இருப்பார்கள்.

    நான் சரியாக எழுதினாலும், தவறு தவறு என்று கூறி ஒரு கணக்குக்கே ஒருமணி நேரம் அமரவைத்துவிடுவார்கள். இதனால், நான் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. இதனால், நான் குறைவான மதிப்பெண் எடுத்துக்கொண்டே இருந்தேன். இப்படியே போய்க்கொண்டிருந்தால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷத்தை குடித்துவிட்டேன்.

    அந்த சிஸ்டர் பெயர் சகாய மேரி. பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் ஆரோக்கியமேரி. எல்லா வேலையையும் என்னையே செய்ய சொல்வார்கள்.

    கேட் திறப்பதில் இருந்து மோட்டார் போட்டு அனைவரும் சாப்பிட்டபின்னர் மோட்டாரை அணைப்பது என விடுதி வார்டன் எல்லா வேலையையும் என்னைத்தான் செய்ய சொல்வார். இது குறித்து வார்டனிடம் கேட்டால் நீதான் பொறுப்பாக இருக்கிறாய், என கூறுவார்.

    என்னை பள்ளியில் பொட்டுவைக்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது என யாரும் சொல்லவில்லை. பொங்கலுக்கு ஊருக்கு போகவேண்டும் என கேட்டதற்கு, நீ படிக்க வேண்டும் நீ இங்கேயே இரு என்று கூறி என்னை விடுதியிலேயே இருக்கவைத்துவிட்டனர். பொங்கலுக்கு எனக்கு உடம்பு சரியில்லை என சொல்லி அனுப்பவில்லை. விஷம் குடித்தது குறித்து விடுதி வார்டனுக்கு தெரியாது.

    இவ்வாறு லாவண்யா கூறுகிறார். இந்த புதிய வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×