search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரியலூரில் 29ந்தேதி காவல்துறை சார்பில் வாகனங்கள் ஏலம்

    அரியலூரில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 29ம் தேதி ஏலம் விடப்படுவதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்
    அரியலூர் :


    அரியலூர் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் வருகிற 29 ம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான்அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    அரியலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்  எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 29 ம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படுகிறது. 

    ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற 28ம் தேதி மாலை 5 மணி வரை அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். 

    மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ஜனவரி 29ம் தேதி அன்று காலை 9 மணிக்கு ரூ.1,000 முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

    பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி இருசக்கர வாகனங்களுக்கு 12சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18சதவீதம்) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×