என் மலர்
அரியலூர்
ஆட்சியாளர்கள், பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசுவதால் நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
செந்துறை:
பள்ளி விடுதியில் தற்கொலை செய்த அரியலூர் மாணவி லாவண்யா சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவி லாவண்யாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மாணவியின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா? மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க போராடும். பா.ஜ.க குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது. மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும். இந்த போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரான போராட்டம் இல்லை. சகோதரி லாவண்யாவிற்கு நீதி கேட்டு போராட்டம். இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மாணவி வீடியோவை அடிப்படையாக வைத்து பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய குரலை கொடுத்து வருகிறது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. போராடுகிறது.
ஆட்சியாளர்கள், பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசுவதால் நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறு தான் இது. இதில் புலனாய்வு துறை தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மோசமாக கையாண்டுள்ளது, அற்புதமான காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
ஆதாரம் இல்லாமல் அனிதாவின் உடலை வைத்து அரசியல் செய்தது தி.மு.க.தான். நாங்கள் அப்படி செய்யவில்லை ஆதாரத்துடன் லாவண்யாவிற்கு நீதி கேட்கிறோம். அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா?
இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்துக்கு பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியதவியை மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா(வயது 16). தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த இவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து மாணவி லாவண்யாவின் பெற்றோரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களிடம் பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது;-
மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. போராடும். மேலும் பா.ஜ.க. குழு நாளை(செவ்வாய்க்கிழமை) அரியலூர் வர உள்ளது. அவர்களும் இந்த குடும்பத்தை வந்து சந்திப்பார்கள். மாணவியின் மரணத்தைவிட போலீசாரின் விசாரணையே மாணவியின் பெற்றோருக்கு மனக்கஷ்டத்தை அளித்து வருகிறது. ஆளும் கட்சியினர் மற்றும் போலீசார், இவர்களைத்தான் குற்றவாளிகள் என முடிவு செய்து அவ்வாறு நடத்துகின்றனர்.
எனவே மாணவியின் மரணத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையான விசாரணை நடைபெற, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.
அனிதாவிற்கு ஒரு நியாயம்? லாவண்யாவிற்கு ஒரு நியாயமா?. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் நீட் தேர்வில் அனிதாவின் உடலை வைத்து தி.மு.க. அரசியல் செய்தது. ஆனால் அது போன்று பா.ஜ.க. செய்யாது. அதற்கான அவசியம் இல்லை.

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் தீண்டாமை உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று நாட்டின் விடுதலைக்காக போராடி தங்களது இன்னுரியை நீத்த சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் தன்னிகரில்லா தியாகத்தை போற்றிடும் வகையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு 30.01.2022 அன்று மவுன அஞ்சலி செலுத்த அரசு உத்தரவிட்டு இருந்தது.
அன்று விடுமுறை தினம் என்பதால், நேற்றைய தினம் தியாகிகளுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உறுதிமொழியினை வாசித்தார்.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
செந்துறை அருகே பெண்களை குறிவைத்து ரசாயன பொடி தூவி கொள்ளையடித்து வந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக நில அளவையர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பலரிடம் ரசாயன பொடியை தூவி மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
பெண்களிடம் தங்களது துப்பட்டா வண்டியில் சிக்கியுள்ளது, சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறி 2 இளைஞர்கள் நூதன முறையில் ரசாயன பொடி தூவி கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் (வயது 50) என்பவர் செந்துறையில் இருந்து தனது ஸ்கூட்டரில் சொந்த ஊரான நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த அவரை பின்தொடர்ந்து வந்த அதே இளைஞர்கள் 2 பேர் பழனியம்மாளிடம் தங்களது சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர் வண்டியை நிறுத்த முயற்சித்தபோது அந்த கொள்ளையர்கள் ரசாயன பொடி தூவி அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து அவர் செந்துறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சம்பவம் நடந்த இடம் இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று கூறினர்.
அதனைத்தொடர்ந்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கிராம நிர்வாக அதிகாரி களிடம் எல்லைப் பிரச்சினை குறித்து கேட்டபோது, சம்பவம் நடந்த இடம் உஞ்சினி வருவாய் எல்லைக்கு உட்பட்டது என்று கூறினர். இதையடுத்து இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த தொடர் கொள்ளை தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் மற்றும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தொடர்ந்து இந்த பகுதியில் கண்காணித்து வந்தனர்.
ஆங்காங்கே உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவின் மூலம் தேடி வந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேரை அடையாளம் கண்டு தேடிவந்தனர். இந்தநிலையில் அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் நடத்திய கொள்ளைய சம்பவங்களில் தொடர்புடைய நகைகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆண்டிமடத்தில் நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமம் பாக்கியம் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் அபிராஜ் (வயது 20).
இவர் தனது உறவினர் பூமாலை மனைவி ரஞ்சிதா (36) மற்றும் அவரது மகன் சித்தார்த் (7) ஆகிய மூவருடன் மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் & விருத்தாச்சலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே திசையில் முன்னால் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் ரஞ்சிதா டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சித்தார்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த ரஞ்சிதாவின் மகன் சித்தார்த் மற்றும் அபிராஜ் ஆகியோரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டிராக்டர் டிரைவர் கிளிமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்த சதீஷ் குமார் (25) என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கான முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
அரியலூர்:
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளும், 4 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளும் என மொத்தம் 81 வார்டுகள் உள்ளன.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 நகராட்சிகளும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய 2 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய 2 பேரூராட்சிகளிலும் தலா 15 வார்டுகளும் என மொத்தம் 69 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து வேட்பு மனுவை பெறுவதற்காக மாவட்டங்களில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதை முன்னிட்டு மேற்கண்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
ஆனால் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் முதல் நாளில் யாரேனும் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்களா? என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழிமேல் விழி வைத்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சுயேச்சையாக போட்டியிட விரும்புபவர்களும் வரவில்லை.

மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 8 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் தனது உதவியாளருடன் பாலசுந்தரபுரம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது 5 மொபட்டுகளில் தலா 3 மூட்டைகளில் மணல் அள்ளி வந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் மொபட்டுகளை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் விசாரணை நடத்தினார். இதில் தாதம்பேட்டை காலனி தெருவை சேர்ந்த சசிகுமார்(வயது 30), பிரேம்குமார்(27), விக்னேஷ்(25), காமராஜ்(60), முனியப்பன்(45) ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 5 மொபட்டுகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பரணிகுமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அடிக்காமலை கொள்ளிடக்கரை அருகில் 3 மொபட்டுகளில் மணல் திருடி வந்த நபர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மொபட்டுகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அனல்மின் திட்டம் செயல்படுத்துவதற்காக விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலீட்டு நிறுவனம் (டிட்கோ) மூலம் 1996-ம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குடி, மேலூர், தேவனூர், கொளத்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் 23 ஆண்டுகளாகியும் இது வரை இழப்பீடு தொகையும் வழங்கவில்லை, திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
நிலங்களின் பட்டாக்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் கொடுத்து விட்டதால், அரசு வழங்கக்கூடிய மானியத் திட்டங்கள் மற்றும் இலவசங்களை கூடி பெற முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந் தேதி காட்டாத்தூர் தெற்கு, கூவத்தூர் தெற்கு ஆகிய 2 கிராமங்களுக்கு 23 மடங்கு தொகையை கொடுப்பது என்று அர சாணை வெளியிட்டும், இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த காட்டாத்தூர் தெற்கு, கூவத்தூர் தெற்கு ஆகிய இரண்டு கிராம மக்கள் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் நிலம் எடுப்பு அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள், தமிழ் நாடு தொழில் முதலீ ட்டு நிறுவனத்திடம் இருந்து தகுந்த பதில் வந்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம், இல்லையேல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் திடீரென வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் மேல் (3-வது மொட்டை மாடியில்) மாடிக்கு சென்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு விவசாயி கட்டிடத்தில் இருந்து குதிக்க முயற்சித்த போது போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கீழே இறங்க செய்தனர்.
இதையடுத்து நிலம் எடுப்பு தாசில்தார் அலுவ லகம் முன்பு விவசாயிகள் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை கூறுமாறு தெரிவித்து, அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்றனர்.
இதையடுத்து நிலம் எடுப்பு தாசில்தார் தலைமையில் விவசாயிகளிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு மாத காலம் அவகாசம் அளிக்குமாறு விவசாயிகளிடம் தாசில்தார் கேட்டுக்கொண்டார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து 2 அல்லது 3 மாதங்களுக்குள் தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகள் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகதத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சொந்த நிலம், இடங்கள் இருந்தும் சொந்த ஊரில் அகதிகள் போல் வாழ்ந்து வருகிறோம். எங்கள் வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு கூட வசதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 3-வது தலைமுறை ஆன நிலையிலும், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை இதற்கு தீர்வு காணப்படவில்லை. எனவே தற்போதாவது இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறு செயல்படுத்தப்படும் பட்சத்தில் உரிய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். இல்லையென்றால் மீண்டும் விவசாயிகளிடமே இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து நிலத்தையும், பட்டாவையும் ஒப்படைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அரியலூர் சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு கலெக்டர் தண்ணீரிரை திறந்து வைத்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கார்குடி கிராமத்தில் உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீரினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, இன்று (28.01.2022) திறந்து வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து நன்செய் மற்றும் புன்செய் ஆயக்கட்டு நிலங்களுக்கு இன்று (28.1.22) தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சித்தமல்லி நீர்த்தேக்கமானது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் , கார்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இது 1981-ல் ஆரம்பிக்கப்பட்டு, 1988ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தின் கரையின் மொத்த நீளம் 5050 மீட்டர். இந்த அணையின் முழு கொள்ளளவு உயரம் 4.75 மீட்டர். மொத்தக் கொள்ளவு 226.80 மில்லியன் கனஅடி ஆகும்.
இதில் 3 தலைமதகுகள் உள்ளன. தலைமதகு எண்.1 மூலம் கார்குடி தெற்க்கேரிக்கும், தலைமதகு எண்.2 மூலம் கோவத்தடை ஏரிக்கும் மற்றும் மெயின் வாய்க்காலுக்கும், தலைமதகு எண்.3 மூலம் திருப்புரந்தான் பெரிய ஏரிக்கும் மற்றும் திருப்புந்தான் வாய்க்காலுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பாசன வசதி பெறுகிறது.
சித்தமல்லி நீர்த்தேக்கத்தின் மூலம் நன்செய் நிலம் 1179.02 ஏக்கரும், புன்செய் நிலம் 3901.60 ஏக்கர் நிலமும் மொத்தம் 5080.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் மூலம் நடுவலூர் (கிழக்கு), இருகையூர், காரைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி, திருபுரந்தான், இடங்கண்ணி, சோழமாதேவி ஆகிய கிராமங்கள் பயன் பெறுகின்றன.
நீர்தேக்கத்திலிருந்து உபரிநீரை வெளியேற்ற ஒரு உபரிநீர்ப்போக்கியும் மற்றும் ஒரு உபரிநீர் வழிந்தோடியும் உள்ளது. இந்த உபரிநீரானது சித்தமல்லி ஓடை வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. 2017, 2019ம் ஆண்டு அரசாணை பெறப்பட்டு, தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது.
கடந்த 04.01.2022 அன்று அணையின் கொள்ளளவு இருப்பான 207.911 மில்லியன் கனஅடியை கணக்கில் கொண்டு கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு அதற்கான அரசாணை பெறப்பட்டு முதல்வரின் ஆணையின்படி சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து நன்செய் மற்றும் புன்செய் ஆயக்கட்டு நிலங்களுக்கு 28.01.2022 முதல் 21.03.2022 வரை முறை வைத்து 52 தினங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர்சாந்தி, உதவிப்பொறியாளர் ராஜாசிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளிலும், ஏரி பாசன மூலம் சாகுபடி பெறும் பகுதிகளான செந்துறை, அரியலூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நிகழாண்டு 21,896 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்டத்தில், அக்டோபா 25 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், 20 நாள்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மேலும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3 முறை தொடர் கனமழை பெய்தது. இதனால் பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்தன. வயல்களில் புகையான், குலைநோய் தாக்குதால் அதிகமாக இருந்தது. இதனால் நெல் பயிர்களை காப்பாற்றி பராமரிப்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. ஏறத் தாழ அனைத்துப் பகுதிக ளிலும் இடுபொருள் செலவை விவசாயிகள் இரு முறை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே, சம்பா நெல் அறுவடை பருவத்தை அடைந்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சம்பா நெல் அறுவடைப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக எந்திரங்கள் மூலமான அறுவடை அதிகரித்து வந்த நிலையில், தற்போது வெளி மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அறுவடை எந்திரங்கள் அறுவடை பணிக்கு வந்துள்ளன.
இருப்பினும், வாய்ப்புள்ள பகுதிகளில் விவசாயத்தொழிலாளர்களைக் கொண்டும் அறுவடை பணிகள் நடை பெறுகின்றன. தற்போதைய நிலையில், சுமார் 15 சதவீத பரப்பில் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளது. இதே வேகத்தில் அறுவடை பணிகள் நடைபெற்றால் வரும் 20 நாட்களில், மாவட்டத்தின் சம்பா நெல் அறுவடை பணிகள் நிறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள் முதல் நிலயைங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதலுக்கு இணையதளம் மூலம் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு, தொடக்கத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், நெல் விற்பனைக்கான காத்திருப்பு தவிர்க்கப்படுவதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த முறை மூலம் வெளி மாவட்ட நெல் மூட்டைகள் டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. என்றாலும், தொடர் மழையால் சம்பா நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் நிகழாண்டு மகசூல் ஆறுதல் அளிப்பதாக இல்லை என்கின்றனர் விவசாயிகள்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், மாவட்டத்தில் அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் போதிய சாக்குகள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. அது போன்று நிகழாண்டு நிகழாமல் இருக்க அதிகளவில் சாக்குகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் நெல் அறுவடை செய்யும் எந்திரங்கள் தற்போது வாடகை விலையை உயர்த்தியுள்ளனர். கடந்தாண்டு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,300 என்ற கணக்கில் ஓட்டி வந்த நிலையில் தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.2,000 வரை வாடகை உயர்த்தப்பட் டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல் அறுவடை வாடகை எந்திரத்தின் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.
கோவில் உண்டியல் உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தில் உள்ள பொன்னாற்றில் தண்ணீரில் குடம் ஒன்று மிதந்துவந்துள்ளது. அதனை பொதுமக்கள் கைப்பற்றி பார்த்த போது, கூத்தங்குடி கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் உண்டியல் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஊர் நாட்டார்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவில் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் கோவில் உண்டியல் வசூல் செய்யப்பட்டது. மேலும் தனிநபர்கள் வழங்கிய அதிகபட்ச தொகையான ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பல்வேறு தொகைகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அந்நிலையில் 50 ஆயிரம் தொகையை உண்டியலில் இருந்ததாகவும், 3 உண்டியல்களை உடைத்து மர்பநபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை ஆற்றில் வீசியுள்ளனர்.
இந்த கிராமத்தில் இது வரை திருட்டு சம்பவங்கள் நடைபெறாத நிலையில் தற்போது கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடியிருப்பது, இப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க. மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
அரியலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா (17), கடந்த சில நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு பள்ளியில் பார்வையிட்டனர். விடுமுறையின் போது மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது சம்பந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே தங்கி இருந்தார். ஜனவரி 10-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மாணவி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களை விட இந்து சமய மாணவ, மாணவிகளே அதிகம் பயில்கின்றனர். மத ரீதியிலான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பான புகாரகள் எதுவும் பெறப்படவில்லை. முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்விஅலுவலகத்திற்கு மதம் சார்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்