என் மலர்
அரியலூர்
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நேர்மையாக நடைபெற காவல் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொதுச் செயலர் தெரிவித்தார்.
அரியலூர்:
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் இங்குள்ள காவல் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொதுச் செயலர் நிதிதிரிபாதி தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி லாவண்யாவின் பெற்றோரை, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொது செயலர் நிதிதிரிபாதி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், லாவண்யா பெற்றோரை சந்தித்த பிறகு தான் தெரிகிறது மாணவியின் தற்கொலையில் சதி இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாவண்யா தனது சித்தியுடன் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்றுள்ளார். அப்படி இருக்கையில் லாவண்யா தற்கொலை செய்து கொண்டிருப்பாரா. ஆனால் சித்தியின் கொடுமையால் தான் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
நான் இங்கு பார்த்து விசாரிக்கையில், விடுதி வார்டன் கொடுமையால்தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது.
காவல் துறையின் விசாரணை திருப்பதி அளிக்காததால் தான், நீதி மன்றமே சி.பி.ஐ. விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் இங்குள்ள காவல் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும். லாவண்யா தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தொடர்ந்து போராடும் என்றார்.
விபத்தில் சிக்கியவரின் பணத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு குவிகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பசுமை நகரை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 50). லாரி உரிமையாளரான இவர் ஜெயங்கொண்டத்தில் இருந்து அங்கராயநல்லூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்பு லன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர் சத்யராஜ் மற்றும் அவசரகால நுட்புனர் வீரமணிகண்டன் ஆகியோர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மகாதேவனை மீட்டு 108 வாகனத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே அவர் மயக்க நிலையில் இருந்ததால் அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.12,500 அவரது மனைவியான செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனர்.
108டிரைவர் சத்யராஜ் மற்றும் அவசர கால நுட்புனர் வீரமணிகண்டன் ஆகியோரின் துரித சேவையையும், நேர்மையையும் அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
அரியலூரில் கால்நடை சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் நலன் காக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருமானூர் ஒன்றியம் வெற்றியூரில் சிறப்பு கால்நடைசுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைவளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கலவையும், சிறந்த கிடேரிக் கன்று வளர்த்த 7 நபர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
முகாமில், வெற்றியூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாடு, ஆடு மற்றும் கோழி போன்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை அளித்தல்,
தாது உப்புக் கலவை வழங்குதல், கோமாரி நோய் தடுப்பூசி, கோழி கழிச்சல்களுக்கான தடுப்பூசி, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள் சுமார் 500 கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. தீவன பயிர்கள் மற்றும் தீவனப்புல் சாகுபடி குறித்து விவசாயி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மொத்தம் 120 முகாம்கள் நடத்தப்படுகிறது. இச்சிறப்பு முகாம் தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் கால்நடை மருத்துவ வசதி கிடைக்காத இடங்களுக்கு கால்நடைகளின் நலன்பேணி காத்திடும் வகையில் இலவசமாக நடத்தப்படவுள்ளதால் ஏழை, எளிய கால்நடை வளர்ப்போர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், இம் முகாமினை கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த முறையில் தொடர்ந்து நடத்திடவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஹமீதுஅலி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் இது வரை 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் 69 பதவியிடங்களுக்கு நடை பெறும் நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தலுக்கு நேற்று வரை 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், உடையார் பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும், வரதரா ஜன்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் ஆக மொத்தம் 69 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் அரியலூர் நகராட்சியில் 2 நபர்களும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 5 நபர்களும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனுதாக் கல் செய்துள்ளனர்.
மேலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் 4 நபர்களும், மற்றும் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் 10 நபர்களும் வார்டு உறுப்பி னர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று வரை நகர்ப்புற ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 37 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அரியலூர்:
நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, வரதராசன்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தென்னூர் புனித மாமரி தொடக்கப் பள்ளி, உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையங்களில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிநீர், மின் விளக்கு, கழிவறை, சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டதுடன், பணிகளை சிறப்பாக மேற்கொள்வதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து,
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக அவர், ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார், ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடையார்பாளையம் கோமதி, வரதராசன்பேட்டை ஜெயசெல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விவசாயிகள் குறைவான தொகையில் வேளாண் எந்திரங்களை வாடகைக்கு பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள், வீட்டிலிருந்த படியே முன்பதிவு செய்ய ஆன்லைன் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆன்லைன் செயலியை உழவன் செயலிவழியாக அணுகி "வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு தேர்வு செய்து முன் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
மண் தள்ளும் எந்திரத்துக்கு குறைந்தது 8 மணி நேரமும் அதிக பட்சமாக 30 மணி நேரமும், டிராக்டர், மினி டிராக்டர் மற்றும் மண் அள்ளுவாரி எந்திரத்துக்கு குறைந்தது 2 மணி நேரமும், அதிக பட்சமாக 20 மணி நேரமும், நெல் அறுவடை எந்திரத்துக்கு குறைந்தது 1 மணி நேரமும் வாடகைக்கு பெறலாம். இதனை பெற ரூ.20 முன் பணமாக செலுத்த வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் முன்பணமாக செலுத்திய வாடகையினை ரத்து செய்ய விரும்பினால் முன் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்து கொள்ள வேண்டும்.
டிராக்டரால் இயக்கக் கூடிய அனைத்து கருவிகளுக்கும், ஒரு மணி நேரத்திற்கு டிராக்டருக்கு ரூ.400, மண் தள்ளும் எந்திரத்துக்கு ரூ.970, மண் அள்ளுவாரி எந்திரத்துக்கு ரூ.760, நெல் அறுவடை எந்திரத்துக்கு ரூ.1,630 வீதத்தில் குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களைஅரியலூர் பல்துறை வளாகம், அறை எண்.26, வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அணுகி பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:
அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டம் மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் கெங்காத்துரை, மாநில பொதுக் குழு உறுப்பினர் ராசேந்திரன், ஒன்றியத் தலைவர்கள் சாமிதுரை, இளவரசன், மதியழகன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், நகைக் கடன் இவைகளை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணைக்கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
இலவச மின் இணைப்பில் மீட்டர் பொருத்துவதை மாநில அரசு கைவிட வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அரியலூர் மாவட்டம் தூத்தூர் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை இடையே குற்றிடத்தின் குறுக்கே கதவணையுடன் தடுப்பணைக் கட்ட வேண்டும்.
டெல்டா பகுதிகளில் ஹட்ரோ கார்பன் எடுப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். முந்திரி விவசாயிகளுக்கு முந்திரிக் கன்றுக்கான மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை தலைமை செயலக அலுவலகத்தை வருகிற 10 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக மாவட்டத் தலைவர் ஜெ.பரமசிவம் வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் எம்.பி.விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா (வயது 17). இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ்&2 படித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு விடுதியின் காப்பாளர் சகாயமேரி காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சகாயமேரி கைது செய்யப்பட்டார்.
மாணவியை மதமாற்ற வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பா.ஜ.க.வினரும், இந்து அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஏற்கனவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.
இதற்கிடையே பா.ஜ.க. மேலிடம் அமைத்த உண்மை கண்டறியும் குழுவினர் வடுகபாளையம் கிராமத்தில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா மற்றும் சகோதரர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
மாணவியின் தற்கொலை விவகாரத்தில், நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார்.
அந்த குழுவில் இடம் பெற்றுள்ள மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்தியாரே, தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ராதாய்வாக், கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகானந்தன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர், மாணவியின் ஊரான வடுகபாளையம் கிராமத்துக்கு நேற்று சென்றனர்.
அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் விஜயசாந்தி கூறியதாவது:
மாணவியை மதம் மாற வலியுறுத்திய நிலையில், அதற்கு சம்மதிக்காததால், தொடர்ந்து வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துள்ளார். மாணவி தங்கிய இல்லம் காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டன. பெயர் பெற்ற பள்ளி என சொல்லப்படும் நிலையில், விடுதிக்கான உரிமத்தை புதுப்பிக்க தவறியுள்ளனர். மாணவியை கொடுமைபடுத் தியுள்ளனர். பா.ஜ.க.வின் போராட்டத்தால்தான் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
மதம் மாற்ற முயற்சிப்பது குறித்து கான்வெண்டில் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும். இந்த விசயத்தில் முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இந்த விச யத்தில் முதல்வர் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்? பதில் சொல்ல வேண்டிய இடத்தில் முதல்வர் உள்ளார். இந்த சம்பவத்தை ஆளும் தி.மு.க. அரசு திசைமாற்ற முயற்சிக்கிறது.
மதத்தை வைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாது காப்பு இல்லை. மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் அராஜகம் செய்வதாகவும், இப்படித்தான் சொல்ல வேண்டும் என போலீசார் கட்டாயப்படுத்து வதாகவும் பெற்றோர் கூறி உள்ளனர்.
கட்டாயபடுத்தி மதம் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இறந்த மாணவி யின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அது வரை இப்பிரச்சினையை பா.ஜ.க. விடாது. லாவண்யா குடும்பத்திற்கு நீதி கிடைக்க வில்லை என்றால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும். மதமாற்ற நடவ டிக்கை முயற்சிக்கு இத்துடன் முடிவுகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்டத் தலைவர் அய்யப்பன் உட்பட பலரும் உடனிருந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் இது வரை 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரியலூர் நகராட்சி 18 வார்டுகளுக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், உடையார்பளையம் மற்றும் வரதராசன் பேட்டை பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கண்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இதுவரை மாவட்டத்தில் 15 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அரியலூர் நகராட்சியில் இதுவரை எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஜெயங்கொண்டம் நகராட்சியில் 1 ஆவது வார்டில் போட்டியிடு வதற்கு 2 பேரும், 4 மற்றும் 5 ஆவது வார்டுக்கு தலா ஒருவரும், 13 ஆவது வார்டுக்கு 3 பேரும், 20 ஆவது வார்டுக்கு 2 பேரும், 21ஆவது வார்டுக்கு ஒருவரும் ஆக மொத்தம் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
உடையார்பாளையம் பேரூராட்சியில் 6 மற்றும் 14 ஆவது வார்டுகளுக்கு தலா ஒருவரும், வரதராசன் பேட்டை பேரூராட்சியில் 2, 5, 6 ஆகிய வார்டுகளுக்கு தலா ஒருவரும் என மொத்தம் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
அரியலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல படுகிறதா? என்பதை கண்டறிய வாகன சோதனையிட, சுழற்சி முறையில் தலா ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 தேர்தல் பறக்கும் படையினர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வரதராஜன் பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் வாகனங்களில் கட்சி கொடி கட்டி வந்தவர்களிடம் கட்சி கொடிகள் அகற்றப்பட்டு வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களையும் இடையில் வழிமறித்து அவர்களையும் சோதனையிட்ட பின்னரே திருப்பி அனுப்பப்படுகிறது.
இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும்போது தாங்கள் கொண்டு வரும் (ரொக்கம்) பணங்களுக்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் தேர்தல் விதிமுறைகளை பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கட்டாயம் மதித்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ரசாயன பொடி தூவி நகை பறிக்கும் நவீன கொள்ளையர்களிடமிருந்து ரூ.6 லட்சம் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இரும்புலிக் குறிச்சி, பரணம், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக நில அளவையர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பலரிடம் ரசாயன பொடி தூவி கொள்ளை முயற்சி நடந்தது.
பெண்களிடம் தங்களது துப்பட்டா வண்டியில் மாட்டியுள்ளது, சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறி 2 இளைஞர்கள் நூதன முறையில் ரசாயன பொடிதூவி கொள்ளையடிக்க முயற்சித்தனர்.ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் (வயது 50) என்பவர் செந்துறையில் இருந்து தனது ஸ்கூட்டரில் சொந்த ஊரான நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். சமத்துவபுரம் அருகே சென்ற அவரை பின் தொடர்ந்து வந்த அதே இளைஞர்கள் பழனியம்மாளி டம் தங்களது சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர் வண்டியை நிறுத்த முயற்சித்தபோது அந்த கொள்ளையர்கள் ரசாயன பொடி தூவி அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். கடந்த ஒரு வார காலமாக இந்த தொடர் கொள்ளை தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் மற்றும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்பேரில் உடையார் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி, இரும்புலிக்குறிச்சி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் ஆகியோர் தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணித்து வந்தனர். ஆங் காங்கே உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவின் மூலம் தேடி வந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேரை அடையாளம் கண்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை இரும்புலிக்குறிச்சி அருகே பல்சர் பைக்கில் சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (27), அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு ராஜேஷ் (24) என்பதும் அவர்கள் கடந்த 1 வாரமாக தொடர் வழிப்பறியில் இப்பகுதியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
சில மாதங்களுக்கு முன் பொன்பரப்பி, ஆனந்தவாடி ஆகிய கிராமங்களிலும் பெண்களிடம் நகைகள் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவத்தின் போது பெண்களின் கண் தெரியாமல் இருப்பதற்காக கான்பிளார் மாவை தூவியதையும் கூறினர். மேலும் அவர்கள் கடன் தொல்லையால் இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 17 சவரன் நகை, ரூ.60 ஆயிரம் பணம், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இரும்புலிக்குறிச்சி போலீசார் செந்துறை குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக செந்துறை பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வழிப்பறி கொள் ளையர்கள் போலீசாரிடம் சிக்கியது நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங் குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 476 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அண்மையில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததால் மாணவர்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர். பின்னர் பள்ளி நிர்வாகத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து பாம்புகள் பிடிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலரும் நேரில் வந்து பார்வையிட்டார். பள்ளி நிர்வாகத்திடம் உடனடியாக பள்ளியைச் சுற்றி காடு போல் வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால் இது நாள் வரை சீமை கருவேல மரங்களை அகற்றிட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்தநிலையில் நாளை (பிப்ரவரி 1&ந்தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லை எனவும் புதிதாக கட்டிட வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வ லர்கள், பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.