என் மலர்
உள்ளூர் செய்திகள்

உறவினர்களிடம் பணத்தை ஒப்படைத்த டிரைவர்
விபத்தில் சிக்கியவரின் பணத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு
விபத்தில் சிக்கியவரின் பணத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு குவிகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பசுமை நகரை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 50). லாரி உரிமையாளரான இவர் ஜெயங்கொண்டத்தில் இருந்து அங்கராயநல்லூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்பு லன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர் சத்யராஜ் மற்றும் அவசரகால நுட்புனர் வீரமணிகண்டன் ஆகியோர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மகாதேவனை மீட்டு 108 வாகனத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே அவர் மயக்க நிலையில் இருந்ததால் அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.12,500 அவரது மனைவியான செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனர்.
108டிரைவர் சத்யராஜ் மற்றும் அவசர கால நுட்புனர் வீரமணிகண்டன் ஆகியோரின் துரித சேவையையும், நேர்மையையும் அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story






