என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள்

    விவசாயிகள் குறைவான தொகையில் வேளாண் எந்திரங்களை வாடகைக்கு பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள், வீட்டிலிருந்த படியே முன்பதிவு செய்ய ஆன்லைன் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த ஆன்லைன் செயலியை உழவன் செயலிவழியாக அணுகி "வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு தேர்வு செய்து முன் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

    மண் தள்ளும் எந்திரத்துக்கு குறைந்தது 8 மணி நேரமும் அதிக பட்சமாக 30 மணி நேரமும், டிராக்டர், மினி டிராக்டர் மற்றும் மண் அள்ளுவாரி எந்திரத்துக்கு குறைந்தது 2 மணி நேரமும், அதிக பட்சமாக 20 மணி நேரமும், நெல் அறுவடை எந்திரத்துக்கு குறைந்தது 1 மணி நேரமும் வாடகைக்கு பெறலாம். இதனை பெற ரூ.20 முன் பணமாக செலுத்த வேண்டும்.

    விவசாயிகள் தாங்கள் முன்பணமாக செலுத்திய வாடகையினை ரத்து செய்ய விரும்பினால் முன் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்து கொள்ள வேண்டும்.

    டிராக்டரால் இயக்கக் கூடிய அனைத்து கருவிகளுக்கும், ஒரு மணி நேரத்திற்கு டிராக்டருக்கு ரூ.400, மண் தள்ளும் எந்திரத்துக்கு ரூ.970, மண் அள்ளுவாரி எந்திரத்துக்கு ரூ.760, நெல் அறுவடை எந்திரத்துக்கு ரூ.1,630 வீதத்தில் குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களைஅரியலூர் பல்துறை வளாகம், அறை எண்.26, வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அணுகி பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×