search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தா.பழூரில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி நடைபெற்ற காட்சி.
    X
    தா.பழூரில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி நடைபெற்ற காட்சி.

    அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்- மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தகவல்

    அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்
    அரியலூர்:


    அரியலூர்  மாவட்டத்தில் காவிரி  டெல்டா  பகுதியான திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளிலும், ஏரி பாசன மூலம் சாகுபடி பெறும் பகுதிகளான செந்துறை, அரியலூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நிகழாண்டு 21,896 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    மாவட்டத்தில், அக்டோபா 25 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், 20 நாள்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மேலும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3 முறை தொடர் கனமழை பெய்தது. இதனால் பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்தன. வயல்களில் புகையான், குலைநோய் தாக்குதால் அதிகமாக இருந்தது. இதனால் நெல் பயிர்களை காப்பாற்றி பராமரிப்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. ஏறத் தாழ அனைத்துப் பகுதிக ளிலும் இடுபொருள் செலவை விவசாயிகள் இரு முறை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    பல்வேறு  இடர்பாடுகளுக்கு இடையே, சம்பா நெல் அறுவடை பருவத்தை அடைந்துள்ளது.  இதையடுத்து, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சம்பா நெல் அறுவடைப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக எந்திரங்கள் மூலமான அறுவடை அதிகரித்து வந்த நிலையில், தற்போது வெளி மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அறுவடை எந்திரங்கள் அறுவடை பணிக்கு வந்துள்ளன.

    இருப்பினும், வாய்ப்புள்ள பகுதிகளில் விவசாயத்தொழிலாளர்களைக் கொண்டும் அறுவடை பணிகள் நடை பெறுகின்றன. தற்போதைய நிலையில், சுமார் 15 சதவீத பரப்பில் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளது. இதே வேகத்தில் அறுவடை பணிகள் நடைபெற்றால் வரும் 20 நாட்களில், மாவட்டத்தின் சம்பா நெல் அறுவடை பணிகள் நிறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள் முதல் நிலயைங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதலுக்கு இணையதளம் மூலம் விவசாயிகள்  முன்பதிவு  செய்து கொள்ளும் நடைமுறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு, தொடக்கத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், நெல் விற்பனைக்கான காத்திருப்பு தவிர்க்கப்படுவதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த முறை மூலம் வெளி மாவட்ட நெல் மூட்டைகள் டெல்டா  மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. என்றாலும், தொடர் மழையால் சம்பா நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் நிகழாண்டு மகசூல் ஆறுதல் அளிப்பதாக இல்லை என்கின்றனர் விவசாயிகள்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், மாவட்டத்தில் அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் போதிய சாக்குகள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. அது போன்று நிகழாண்டு நிகழாமல் இருக்க அதிகளவில் சாக்குகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

    மேலும் நெல் அறுவடை செய்யும் எந்திரங்கள் தற்போது வாடகை விலையை உயர்த்தியுள்ளனர். கடந்தாண்டு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,300 என்ற கணக்கில் ஓட்டி வந்த நிலையில் தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.2,000 வரை வாடகை உயர்த்தப்பட் டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல் அறுவடை வாடகை எந்திரத்தின் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.
    Next Story
    ×