என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அனல்மின் திட்டம் செயல்படுத்துவதற்காக விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலீட்டு நிறுவனம் (டிட்கோ) மூலம் 1996-ம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குடி, மேலூர், தேவனூர், கொளத்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் 23 ஆண்டுகளாகியும் இது வரை இழப்பீடு தொகையும் வழங்கவில்லை, திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
நிலங்களின் பட்டாக்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் கொடுத்து விட்டதால், அரசு வழங்கக்கூடிய மானியத் திட்டங்கள் மற்றும் இலவசங்களை கூடி பெற முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந் தேதி காட்டாத்தூர் தெற்கு, கூவத்தூர் தெற்கு ஆகிய 2 கிராமங்களுக்கு 23 மடங்கு தொகையை கொடுப்பது என்று அர சாணை வெளியிட்டும், இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த காட்டாத்தூர் தெற்கு, கூவத்தூர் தெற்கு ஆகிய இரண்டு கிராம மக்கள் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் நிலம் எடுப்பு அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள், தமிழ் நாடு தொழில் முதலீ ட்டு நிறுவனத்திடம் இருந்து தகுந்த பதில் வந்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம், இல்லையேல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் திடீரென வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் மேல் (3-வது மொட்டை மாடியில்) மாடிக்கு சென்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு விவசாயி கட்டிடத்தில் இருந்து குதிக்க முயற்சித்த போது போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கீழே இறங்க செய்தனர்.
இதையடுத்து நிலம் எடுப்பு தாசில்தார் அலுவ லகம் முன்பு விவசாயிகள் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை கூறுமாறு தெரிவித்து, அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்றனர்.
இதையடுத்து நிலம் எடுப்பு தாசில்தார் தலைமையில் விவசாயிகளிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு மாத காலம் அவகாசம் அளிக்குமாறு விவசாயிகளிடம் தாசில்தார் கேட்டுக்கொண்டார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து 2 அல்லது 3 மாதங்களுக்குள் தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகள் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகதத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சொந்த நிலம், இடங்கள் இருந்தும் சொந்த ஊரில் அகதிகள் போல் வாழ்ந்து வருகிறோம். எங்கள் வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு கூட வசதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 3-வது தலைமுறை ஆன நிலையிலும், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை இதற்கு தீர்வு காணப்படவில்லை. எனவே தற்போதாவது இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறு செயல்படுத்தப்படும் பட்சத்தில் உரிய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். இல்லையென்றால் மீண்டும் விவசாயிகளிடமே இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து நிலத்தையும், பட்டாவையும் ஒப்படைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Next Story