என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான ரஞ்சிதா
சாலை விபத்தில் இளம் பெண் பலி
ஆண்டிமடத்தில் நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமம் பாக்கியம் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் அபிராஜ் (வயது 20).
இவர் தனது உறவினர் பூமாலை மனைவி ரஞ்சிதா (36) மற்றும் அவரது மகன் சித்தார்த் (7) ஆகிய மூவருடன் மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் & விருத்தாச்சலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே திசையில் முன்னால் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் ரஞ்சிதா டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சித்தார்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த ரஞ்சிதாவின் மகன் சித்தார்த் மற்றும் அபிராஜ் ஆகியோரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டிராக்டர் டிரைவர் கிளிமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்த சதீஷ் குமார் (25) என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






