என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி லாவண்யாவின் பெற்றோருக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.
    X
    மாணவி லாவண்யாவின் பெற்றோருக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.

    அரியலூர் மாணவி குடும்பத்துக்கு பா.ஜ.க. ரூ.10 லட்சம் நிதியுதவி- அண்ணாமலை வழங்கினார்

    தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்துக்கு பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியதவியை மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா(வயது 16). தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த இவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து மாணவி லாவண்யாவின் பெற்றோரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களிடம் பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினர்.

    பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது;-

    மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. போராடும். மேலும் பா.ஜ.க. குழு நாளை(செவ்வாய்க்கிழமை) அரியலூர் வர உள்ளது. அவர்களும் இந்த குடும்பத்தை வந்து சந்திப்பார்கள். மாணவியின் மரணத்தைவிட போலீசாரின் விசாரணையே மாணவியின் பெற்றோருக்கு மனக்கஷ்டத்தை அளித்து வருகிறது. ஆளும் கட்சியினர் மற்றும் போலீசார், இவர்களைத்தான் குற்றவாளிகள் என முடிவு செய்து அவ்வாறு நடத்துகின்றனர்.

    எனவே மாணவியின் மரணத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையான விசாரணை நடைபெற, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.

    அனிதாவிற்கு ஒரு நியாயம்? லாவண்யாவிற்கு ஒரு நியாயமா?. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் நீட் தேர்வில் அனிதாவின் உடலை வைத்து தி.மு.க. அரசியல் செய்தது. ஆனால் அது போன்று பா.ஜ.க. செய்யாது. அதற்கான அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×