என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது.
    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூரில் நாளை நடக்கிறது.

    அரியலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • லாரி மோதி விவசாயி பலியானார்
    • இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து

    அரியலூர்:

    அரியலூர் அருகேயுள்ள காட்டுப்பிரிங்கியம், அய்யா நகரை சேர்ந்தவர் ராஜாங்கம்(65). விவசாயியான இவர், தனது இரண்டாவது மனைவி பச்சையம்மாளை, இரு சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு , பாலக்கரை அருகேயுள்ள கடலை கொல்லைக்கு சென்றார். அங்கு பணியை முடித்துவிட்டு அன்றிரவு இருவரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பெரியநாகலூர், பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, பின்னால் சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரி கண்ணாடிகளை உடைத்து, தீவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கயர்லாபாத் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் உடலை கொடுக்காமல் , லாரிகளை இவ்வழியே இயக்கக் கூடாது என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அரியலூர் மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனை கடைகள், இனிப்பகங்கள், பேக்கரிகள் உள்பட 58 கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
    • விதிமுறையை மீறி செயல்பட்ட இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அரியலூர்

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவுகள் (பொட்டல பொருட்கள்) விதிகள் சட்டத்தின் கீழ் பெரம்பலூர் மற்றும் அரியலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அலுவலர்கள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனை கடைகள், இனிப்பகங்கள், பேக்கரிகள் உள்பட 58 கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    இதில் 12 கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டவிதிகளை பின்பற்றாமல், முரண்பாட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விதிமுறையை மீறி செயல்பட்ட இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    எடையளவு சட்டமுறையை கடைவியாபாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். பொட்டலமிடுபவர்கள் உரிமம் பெறாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது. விதிமுறையை மீறும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்.
    • வடவாற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி வேம்பரசி (35). கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார் தனது மனைவியிடம் வடவாற்றில் மீன் பிடித்து வருவதாக கூறி சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்து வேம்பரசி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்தநிலையில் வடவாற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிணமாக மீட்பு இதையடுத்து, மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தது ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பால ஆஞ்சநேயர் கோவிலில் சஞ்சீவி ராயர், பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • பாலஆஞ்சநேயர் சுவாமி பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி சேவை சாதித்தார்.

    அரியலூர்

    புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் பால ஆஞ்சநேயர் கோவிலில் சஞ்சீவி ராயர், பால ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பாலஆஞ்சநேயர் சுவாமி பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி சேவை சாதித்தார். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் மங்கல இசையுடன் வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகளில் தீபாராதனை செய்தனர். 

    • அரியலூர் அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்த்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, அ.தி.மு.க. 51 வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியினை ஏற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் மற்றும் ஒன்றிய, நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • அரியலூரில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    அரியலூர் :

    மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் ஒரே நுழைவுத்தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இதில் அரியலூர் அண்ணா சிலை அருகே தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வ. இளையராஜா தலைமையில் நடைபெற்றற ஆர்ப்பாட்டத்தில், ெஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க. கண்ணன்,

    கட்சியின் சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலர் அ.பெருநற்கிள்ளி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    • வேன் மோதி முதியவர் பலியானார்.
    • சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 65). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் இவர் ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், செந்துறை போலீசார் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக போதைப்பொருள் ஒழிப்பு, இணைய குற்றத்தை தடுத்தல், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. செந்துறை பிள்ளையார் கோவில் அருகே தொடங்கி இந்த ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருமண மண்டபத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும், வெற்றி நிச்சயம் என்ற வினாடி-வினா போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டிக்கு வந்தவர்களை செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் வரவேற்றார். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். செந்துறையில் முதன்முறையாக மாணவர்களை உள்ளடக்கிய பிரமாண்ட ஊர்வலம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக போலீசார் சார்பில் நடத்தப்பட்ட வெற்றி நிச்சயம் போட்டிகளும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் சிறப்பாக செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்த விழாவில் அரியலூர் துணைப் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ், இணைய குற்ற தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்ட திரளான போலீசார் கலந்து கொண்டனர்.

    • சாராயம் விற்ற ெபண் கைது செய்யப்பட்டார்
    • காவல்துறைக்கு தகவல் வந்தது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ள–ச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமை–யில் தா. பழூர்போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்ப–ட்டனர்.

    அப்போது சீனிவாசபுரம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் விற்பதாக தகவல் வந்தது. தகவலின் பேரில்காவல் உதவி ஆய்வாளர்ராஜா தலைமை–யிலான காவ–ல்துறை––யினர் சம்பவ இடத்தி–ற்கு சென்று திடீர் சோதனை மேற்கொ–ண்டனர்.

    அப்போது வீட்டின் பின்புறம் வைக்கோலில் 7 லிட்டர் கள்ளச்சாராயம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து அதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சல்பா (33) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடிசை வீடு எரிந்து நாசமானது
    • 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிக் கருப்பூர் வடக்கு காலனியை சேர்ந்த–வர் கிருஷ்ணன் மனைவி பார்வதி (70). கிருஷ்ணன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் பார்வதி மட்டும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    பார்வதி வெளியே சென்று விட்டு இரவு 7.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அப்போதுதிடீரென அவரது குடிசை வீடு தீப்பி–டித்து எரிந்தது.

    இதைத் தொடர்ந்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டில் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீட்டில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் தீயில் கருகி–யது. இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறை–யினர் வழக்குப்பதிந்து விசார–ணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரியலூர் மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது
    • தேசிய அளவில் செஸ் போட்டியில் முதலிடம்

    அரியலூர்:

    தேசிய அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    உடையார்பாளையம், கைகள நாட்டார் தெருவை சேர்ந்த சரவணன் அன்புராஜாவின் இரண்டாவது மகள் ஷர்வானிகா (வயது7). உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர், செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பரிசும் பெற்று வந்துள்ளார்.

    கடந்த 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 7 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான எம்.பி.எல் 35 ஆவது ஓபன் அண்ட் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஷர்வானிகா, அனைத்து போட்டிகளிலும் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.

    இதனை ெதாடர்ந்து இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

    வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்வி அலுவலர் மதலைராஜ், ஆசிரியர் பயிற்றுநர் குறிஞ்சி தேவி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆனந்தபாபு , பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயலட்சுமி,கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஷர்வானிகாவை பாராட்டி பேசினர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் உமா சரஸ்வதி வரவேற்றார். முடிவில் இடைநிலை ஆசிரியர் மைதிலி நன்றி கூறினார்.

    ×