என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அரியலூர் :
மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் ஒரே நுழைவுத்தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதில் அரியலூர் அண்ணா சிலை அருகே தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வ. இளையராஜா தலைமையில் நடைபெற்றற ஆர்ப்பாட்டத்தில், ெஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க. கண்ணன்,
கட்சியின் சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலர் அ.பெருநற்கிள்ளி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
Next Story






