என் மலர்
நீங்கள் தேடியது "SPECIAL WORSHIP TO ANJANEYA"
- புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பால ஆஞ்சநேயர் கோவிலில் சஞ்சீவி ராயர், பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
- பாலஆஞ்சநேயர் சுவாமி பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி சேவை சாதித்தார்.
அரியலூர்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் பால ஆஞ்சநேயர் கோவிலில் சஞ்சீவி ராயர், பால ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பாலஆஞ்சநேயர் சுவாமி பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி சேவை சாதித்தார். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் மங்கல இசையுடன் வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகளில் தீபாராதனை செய்தனர்.






