என் மலர்tooltip icon

    அரியலூர்

    • செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளபட்டது
    • இந்த சுற்றுலா வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற 20 இளம் சிறார்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் மைய சிறப்பாசிரியர்களுடன் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார், கீழ்ப்பள்ளம் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் சுற்றுலா வாகனமானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சுற்றுலா வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    • ஜெயங்கொண்டம் அரசுப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமுருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கினார். முகாமில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவ வல்லுநர்கள் குழு கலந்துகொண்டு 150 மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதித்து தேவையான சிகிச்சைகள் மற்றும் உதவி உபகரணங்களை வழங்க பரிசீலினை செய்தனர்.


    • ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் மண்டபத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு அன்பழகன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன், அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை, பெரம்பலூர் மாவட்ட தலைவர் செந்தில், மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் தர்ம.பிரகாஷ், மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் குமணன் உள்ளிட்ட ஒன்றிய நகர கிளைக் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிர்வாகிகள் பொதுமக்களிடம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எடுத்துக் கூற வேண்டும், நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முடிவில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    திருவாரூர் மாவட்டம், வேலூர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 65). இவரது மகள் கற்பகலெட்சுமியை(24), அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகியமனவாளன் கிராமத்தில் உள்ள அவரது தங்கை மகன் இளவரசன் என்பவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கற்பக லெட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பகலெட்சுமி வீட்டில் உள்ள அறையில் அவரது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தூத்தூர் போலீசார், அங்கு வந்து கற்பகலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கற்பகலெட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம், உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் பள்ளிக்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி, அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

    பயிற்சியில் தற்காப்பு கலை பற்றி விளக்கி கூறினர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் வட்டார வளமையத்தில் தற்காப்பு கலை (கராத்தே) பயிற்சி துவக்க விழா நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் வட்டார வள மைய முற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் முனியம்மாள், சந்திரலேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரிய பயிற்றுனர் ஆசைத்தம்பி வரவேற்று பேசினார். கலை பயிற்சி ஒருங்கிைணப்பாளர் சத்தியபாமா தற்காப்பு கலை பற்றி விளக்கி கூறினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ரமேஷ், உத்திராபதி ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்தனர். முடிவில் ஆசிரிய பயிற்றுநர் அகிலா நன்றி தெரிவித்தார்.

    புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சின்னவளையம் அருகே மணக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுரேஷ்(வயது45). காய்கறி வியாபாரியான இவர் வியாபாரத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவிலில் இருந்து சின்னவளையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இடைக்கட்டு பிரிவு சாலையில் லாரியை முந்தி செல்ல முயற்சித்து எதிரே வந்த இரு சக்கர வாகனம் சுரேஷ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் மது போைதயில் வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது38). இவர் ஜெயங்கொண்டம் தனியார் டீக்கடை ஒன்றில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் மது போதையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் கடும் ரகளையில் ஈடுபட்டதுடன் பஸ் வரும் நேரத்தில் சாலை நடுவே படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதாக போதையில் கத்தி கூச்சலிட்டார். இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி அந்த போதை ஆசாமியை சமாதானப்படுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    20 மது பாட்டில்கள் பறிமுதல்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன்படி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் பிச்சனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்ற காலனித் தெருவைச் சேர்ந்த ஜெயராமனை (வயது 70) கைது செய்து அவரிடமிருந்த 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெண்கள் அதிகாரமிக்க பதவிகளுக்கு வர வேண்டும் என அறிவுரை

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) தனலட்சுமி தலைமை வகித்து பேசினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா கலந்து கொண்டு பேசுகையில், பெண்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் சுதந்திர போராட்ட வீரர் சரோஜிநாயுடு அவர்களது பிறந்த நாளை தேசிய பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே பெண் குழந்தைகள் நன்றாக படித்து கல்வியில் சிறந்து விளங்கி அதிகாரமிக்க பதவிகளை பெற வேண்டும் என்றார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செல்வி முன்னிலை வகித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, வீரபாண்டி, கபிலஷா, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

    316 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 61 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 316 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 61 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,93,784 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுலவர் முருகண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்திமற்றும் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    மனு கொடுக்க வந்தவர்கள் திடீர் போராட்டம்

    அரியலூர்,

    அரியலூர் கலெக்டரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர், 23 பேர் மனு அளிக்க சென்றனர். அப்போது அவர்கள், அரசு அதிகாரிகளும், வியாபாரிகளும் சேர்ந்து, சின்டிகேட் அமைத்து பருத்தி விவசாயிகளை ஏமாற்றி வருவதை தமிழக முதல்வர் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருத்திக்கு உரிய விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு, கைகளில் பருத்தியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். பின்னர் கோரிக்கை மனுவை அளிக்க ஆட்சியரக கூட்டரங்கிற்குச் சென்றனர். அங்கு, அவர்களை, சிறிது நேரம் காத்திருக்குமாறு ஆட்சியர் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    ×