என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    • நேற்று தங்கம் விலை மாற்றமின்றி ரூ.63,440-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது. 

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,945-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440

    06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440

    05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240

    04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480

    03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-02-2025- ஒரு கிராம் ரூ.107

    06-02-2025- ஒரு கிராம் ரூ.107

    05-02-2025- ஒரு கிராம் ரூ.107

    04-02-2025- ஒரு கிராம் ரூ.106

    03-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 800 பில்லியன் அமெரிக்க டாலராக என்பதை எட்டும்.
    • உள்நாட்டு தட்டுப்பாடு, அதிக அளவிலான தேவை காரணமாக பருப்பு, சமையல் எண்ணெய் இறக்குமதி தவிர்க்க முடியாதது.

    2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 800 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனையை எட்ட வாய்ப்புள்ளது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    "கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்றுமதி குறிப்பிடத்தகுந்த வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வருடமும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி இருக்கும். இந்திய வரலாற்றில் முதன்முறையாக 800 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி என்ற சாதனையுடன் இந்த வருடத்தில் (20224-2025) நாம் நிறைவு செய்வோம்" என பியுஷ் கோயல் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்துள்ளார்.

    அப்போது காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா, "இது சரியான தரவுகள் இல்லை. இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைந்து கொண்டு வருகிறது" என்றார்.

    அதற்கு கோயல் "இது தொடர்பாக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பல மாதங்களாக 600 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகம் என்ற வகையில் குறையாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது" என்றார்.

    மேலும், பெட்ரோலியம் பொருட்கள், பருப்புகள், சமையல் எண்ணெய் போன்றவை உள்நாட்டு தட்டுப்பாடு, அதிக அளவிலான தேவை காரணமாக இறக்குமி செய்யப்படுவது தவிர்க்க முடியாதது.

    ஒரு குறிப்பிட்ட துறையில் இறக்குமதிகள் அதிகரிக்கும்போது, தொழில்கள் அந்தத் துறையை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. அது வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகளுக்கும், அதிக முதலீட்டிற்கும் வழிவகுக்கும்" என்றார்.

    • அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.
    • கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.

    வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

    சக்திகாந்த தாஸுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த டிசம்பரில் பதவியேற்றார். அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ரெப்போ விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 6.25 சதவீதமாக மாற்றும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, EMI குறைய வாய்ப்புள்ளது. கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.   

    கடைசியாக கடந்த 2020 கோவிட் சமயத்தில் ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படைப் புள்ளிகளை, ரிசர்வ் வங்கி குறைத்தது. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும். 

    இதற்கிடையே இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்பிஐ ஆளுநர், அடுத்த நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 4.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    2025-26-ம் நிதியாண் டில் 4 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 6.7, 7, 6.5, 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் வருகையின் பின்னணியில் உணவு பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணிக் கொள்கை சீராக உள்ளது.

    டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. சைபர் மோசடிகளைச் சரிபார்க்க வங்கிகளுக்கு பிரத்யேக டொமைன் பெயர் இருக்க வேண்டும். இதன் பதிவு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த வார தொடக்கத்தில் இருந்து நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 930-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.63 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,930-க்கும் ஒரு சவரன் ரூ.63,440-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440

    05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240

    04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480

    03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640

    02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-02-2025- ஒரு கிராம் ரூ.107

    05-02-2025- ஒரு கிராம் ரூ.107

    04-02-2025- ஒரு கிராம் ரூ.106

    03-02-2025- ஒரு கிராம் ரூ.107

    02-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    • மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் நிறுவனங்களாக சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் உள்ளன.
    • தீபிந்தர் கோயல் தலைமையிலான இந்நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய காலக்கட்டத்தில் நினைத்ததை நினைத்த நேரத்தில் வீடுகளில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இயங்கி வருகின்றன. பெரும்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் நிறுவனங்களாக சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் உள்ளன.

    இந்த நிலையில், சொமேட்டோ நிறுவனம் அதன் பெயரை எட்டர்னல் (Eternal) என மாற்றுவதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய லோகோவையும் வெளியிட்டுள்ளது.

    தீபிந்தர் கோயல் தலைமையிலான இந்நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களும் இந்த மாற்றத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என நிறுவனத் தலைவர் தீபிந்தர் கோயல் கடிதம் எழுதியுள்ளார்.

    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 810-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.840 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 810-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.840 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,240-க்கும் விற்பனையாகிறது.

    2நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480

    03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640

    02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320

    01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320

    31-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-02-2025- ஒரு கிராம் ரூ.106

    03-02-2025- ஒரு கிராம் ரூ.107

    02-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    01-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    31-01-2025- ஒரு கிராம் ரூ. 107

    • மாருதி சுசுகி, இந்துஸ்தான் யுனிலிவர், சொமேட்டோ, நெஸ்லே இந்தியா, ஐடிசி ஹோட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
    • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் ஒரே நாளில் 1,397.07 புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 77,186.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    இன்று காலை சென்செக்ஸ் 77,687 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகம் சுமார் 500 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. அதன்பின் உயர்வதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 11 மணியவில் 77,402.37 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இன்றைய குறைந்தபட்ச வர்த்தகமாகும்.

    அதன்பின் ஜெட்வேகத்தில் வர்த்தகம் உயர்ந்துகொண்டே சென்றது. இறுதியாக சென்செக்ஸ் 78,583.81 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து.

    அதேபோல் இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் 378.20 புள்ளிகள் உயர்ந்தது. நேற்று 23,361.05 புள்ளிகளில் இந்திய பங்குச் சந்தை நிறைவடைந்தது. இன்று காலை 23,509.90 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. சுமார் 248 புள்ளிகளில் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று குறைந்த பட்சமாக 23423.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23762.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 378.20 புள்ளிகள் உயர்ந்து 23,739.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    டொனால்டு டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு உத்தரவு காரணமாக நேற்று தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிவை சந்தித்தன. பின்னர் மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரியை டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதனால் தேசிய மற்றும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

    தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்தாலும், மாருதி சுசுகி, இந்துஸ்தான் யுனிலிவர், சொமேட்டோ, நெஸ்லே இந்தியா, ஐடிசி ஹோட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    • நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.680 குறைந்து ரூ.61 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த மாதம் 22-ந்தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தங்கம் விலை, உயர்ந்து கொண்டே சென்று ரூ.61 ஆயிரத்தையும் கடந்தது. இந்த சூழலில், கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. பிப்ரவரி 1-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.85 குறைந்து, ரூ.7 ஆயிரத்து 705-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.680 குறைந்து ரூ.61 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,810-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.62,480-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640

    02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320

    01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320

    31-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,840

    30-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-02-2025- ஒரு கிராம் ரூ.107

    02-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    01-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    31-01-2025- ஒரு கிராம் ரூ. 107

    30-01-2025- ஒரு கிராம் ரூ. 106

    • பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தங்கம் விலை மேலும் ‘கிடுகிடு'வென உயர்ந்து இருந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் ரூ.60 ஆயிரத்தை தொடுவதற்காக கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

    அதனைத்தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த மாத இறுதியில் சவரன் ரூ.61 ஆயிரத்தையும் கடந்தது.

    இதற்கிடையே மத்திய பட்ஜெட் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாமல் போனது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது. பட்ஜெட் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து காணப்பட்டது. பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தங்கம் விலை மேலும் 'கிடுகிடு'வென உயர்ந்தது.

    மதியம் 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. சவரனுக்கு மொத்தமாக ரூ.480 உயர்ந்தது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 62,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,320

    01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,320

    31-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,840

    30-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,880

    29-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    01-02-2025- ஒரு கிராம் ரூ. 107

    31-01-2025- ஒரு கிராம் ரூ. 107

    30-01-2025- ஒரு கிராம் ரூ. 106

    29-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை சவரன் ரூ.60ஆயிரத்துக்கு கீழ் வரவில்லை. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.60,760-க்கு விற்பனையானது. இதனை தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,745-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,960-க்கும் விற்பனையாகிறது.

    இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    31-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,840

    30-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,880

    29-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,760

    28-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,080

    27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    31-01-2025- ஒரு கிராம் ரூ. 107

    30-01-2025- ஒரு கிராம் ரூ. 106

    29-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    28-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    27-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    • மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக இன்று பங்கு சந்தை செயல்பட்டன.
    • தற்போது 3-வது முறையாக இன்று சனிக்கிழமை பங்குச்சந்தை செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை ஆகியவை வழக்கமாக திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் மட்டுமே செயல்படும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக பங்குச் சந்தை செயல்படாது.

    ஆனால் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சனிக்கிழமையான இன்று மும்பை பங்கு சந்தையும், தேசிய பங்கு சந்தையும் செயல்பட்டன. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இன்று சனிக்கிழமை பங்குச் சந்தைகள் இயங்கின.

    மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக இன்று பங்கு சந்தை செயல்பட்டன. இதற்கு முன்பு 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் சனிக்கிழமைகளில் பங்கு சந்தை இயங்கியது. தற்போது 3-வது முறையாக இன்று சனிக்கிழமை பங்குச்சந்தை செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிலிண்டர் விலை குறைவு காரணமாக வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

    இதனையடுத்து மாதந்தோறும் இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சிலிண்டர் விலை குறைவு காரணமாக வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50-க்கு ஆக நீடிக்கிறது.

    ×